‘ராஜபக்‌ஷ முகாமின் பலவீனமான வேட்பாளரே கோட்டா’

ராஜபக்‌ஷ முகாமின் மிகவும் பலவீனமான வேட்பாளராகவே கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார். பத்தரமுல்லயில் அமைந்துள்ள, கட்சியின் தலைமையகத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நிதி ஒழுக்கம், நிர்வாக ஒழுக்கமற்றவராக கடந்த காலங்களில் தம்மை நிருபித்த கோட்டாபய ராஜபக்‌ஷவால் இந்த நாட்டில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாதெனத் தெரிவித்தார்.

‘தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்’

நாட்டில் கோட்டாபய அல்ல யார் ஜனாதிபதியாக அல்லது பிரதமராக ஆட்சிக்கு வந்தாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நியாயமான நீதி கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடருமென, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்களின் தலைவிகள் தெரிவித்தனர்.

குடியிருப்பின் மீது மண்மேடு சரிவு

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது, இதனையடுத்து, இன்றைய தினம் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. வான்கதவுகளில் இருந்து அதிகளவில் நீர் வெளியேறும் நிலையில், அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் வசிப்பவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதேவேளை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக சென்.கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

யாழ். போதனாவுக்கு CT ஸ்கேனர்; உண்மை நிலை

யாழ். போதனாவுக்கு CT ஸ்கேனர்; உண்மை நிலை-Jaffna Teaching Hospital CT Scanner-Director T Sathiyamoorthy
யாழ், போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தி விளக்கம்

கோட்டாதான் வேட்பாளர் – மஹிந்த அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன முன்னணி சார்பில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜக்ஷ களமிறக்கப்படுவார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

காஷ்மீர் விமான நிலையத்தில் தடுத்துவைப்பு

விமான நிலையத்தில்
ராஜா, யெச்சூரி.

உடல்நலமற்றிருக்கும்
மார்க்சிஸ்ட் கட்சி எம்எல்ஏ
மொஹம்மத் யூசுஃப் தரிகமியைச்
சந்திப்பதற்காக
கஷ்மீர் சென்ற
மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர்
சீதாராம் யெச்சூரி,
இந்திய கம்யூனிஸ்ட்
பொதுச்செயலாளர் D.ராஜா ஆகியோர்
ஸ்ரீநகர் விமானநிலைய வளாகத்திலேயே
தடுத்து நிறுத்தி
தடுப்புக்காவலில்
வைக்கப்பட்டார்கள்.

பின்னர் டெல்லிக்குத்
திருப்பியனுப்பப்பட்டார்கள்.

ஏற்கனவே ஜம்மு கஷ்மீர் ஆளுநருக்கு
தங்கள் வருகையின் நோக்கத்தை
கடிதமெழுதி அறிவித்துவிட்டுத்தான்
சென்றனர் என்பது குறிக்கத்தக்து.

‘இது சட்டவிரோதச் செயல்.
ஜனநாயகத்துக்கு எதிரானது.
எதிர்த்துப் போராடுவோம்!’ என்று
மார்க்சிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது.

ஜம்மு – காஷ்மிர்: இந்தியாவின் வஞ்சனையும் எதிர்காலமும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
உரிமைப் போராட்டங்கள், காலக்கெடு வைத்து நடத்தப்படுவதில்லை. சில பின்னடைவுகள், விடுதலைப் போராட்டங்களை முன்னரிலும் பார்க்க வேகமாக முன்தள்ள உந்தும். உரிமைக்கான குரல்கள், ஏன் எழுகின்றது என்பதை, அதிகாரம் எப்போதுமே விளங்கிக் கொள்வதில்லை. அதனாலேயே காலப்பொருத்தமற்ற, அபத்தமான அதேவேளை, ஆபத்தான முடிவுகளை அது எடுக்கிறது. இவ்வாறான முடிவுகள், பலத்தின் குறியீடல்ல; பலவீனத்தின் குறியீடு.

விக்னேஸ்வரன் வாங்கிய குட்டு

(புருஜோத்தமன் தங்கமயில்)
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம், மாகாண முதலமைச்சரின் பரிந்துரைகளுக்கு அமைய, மாகாண ஆளுநர், (மாகாண) அமைச்சர்களை நியமிக்க முடியும் என்று வரையறுக்கிறது. 13ஆவது திருத்தச் சட்டம், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதலமைச்சருக்கு வழங்கவில்லை. இதை, 13ஆவது திருத்தச் சட்டத்தைச் சாதாரண ஒருவர் வாசிப்பதனூடாகவே, அறிந்து கொள்ள முடியும்.

தோழர் தியாகலிங்கம் மறைவு.

தியாகலிங்கம் மாஸ்டர்; என வட பகுதி பொது உடைமை தொழிற்சங்க இயக்க பாரம்பரியத்தில் நன்கு அறியப்பட்ட தோழர் தியாகலிங்கம் இலங்கையின் நீள அகலங்களில் ஆசிரியப்பணி ஆற்றியவர்.
1970களின் நடுப்பகுதியில் இருந்து அகில இலங்கை ஆசிரியர்; சங்கம், 1980களின் பிரபல தொழிற்சங்க கூட்டுக்குழு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தீண்டமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் வடபகுதி தொழிற்சங்க கூட்டுகுழு என்எல்எப்ரி பிஎல்எப்ரி என யாழ் மார்க்சிய படிப்பு வட்டம் என அவரது பொதுவாழ்வு பணி நீண்டது.

மறைந்த தோழர்கள் எச் என் பெர்னான்டோ -விசுவானந்த தேவன் வரை பலருடன் பணியாற்றயவர்;
இன்று மிச்சமீதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் பொது உடைமை சமூக நீதி பிரக்ஞை கொண்ட மனிதர்களில் ஒருவராக வாழ்ந்தார்;.
வர்க்கம்- சமூகநீதி- தேசிய இனங்களின் உரிமைகள் -பால் சமத்துவம் என ஒரு பொதுவுடைமைவாதியின் பிரக்ஞைகளுடன் வாழ்ந்தவர். தமிழ் சமூகத்தின் உரிமைகள் ஜனநாயக இடைவெளி என பிரக்ஞை கொண்டிருந்தார்;. மிகவும் அபாயகரமான தருணங்களில் எல்லாம் தனது தோழர்களுடன் இந்த மண்ணில் வாழ்ந்தவர்.
அவர் கொழும்புத்துறை மகாவித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றார்.
கடந்த 2 வருடங்களாக புற்று நோயின் தாக்கத்திற்குள்ளாகி இருக்கிறார். அதனை காட்டிக் கொள்ளாமல் உற்சாகமாக சமூக அரசியல் உரையாடல்களில் ஈடுபட்டவர்.
தோழர் தியாகலிங்கம் போன்ற மனிதர்கள் அருகிவிட்ட சமூகமாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இடையறாமல் ஓடிக்கொண்டிருந்த அந்த சமூக பிரக்ஞை கொண்ட உள்ளம் ஓய்ந்து விட்டது.
அன்னாருக்கு எம் இதய அஞ்சலிகள்!
அன்னாரின் மனைவியார் பிள்ளைகள் மற்றும் உறவுகள் தோழர்களுக்கு எம் ஆழ்ந்த இரங்கல்!!