முள்ளிவாய்க்கால்……


(நான் அனுபவித்த சில விடயங்கள், நேரம் இருந்தால் முழுமையாக வாசியுங்கள்)

இதை கடந்து வந்து இன்னும் இரண்டு நாட்களோடு பத்து வருடங்கள் முடிய போகிறது. கடந்த ஒன்பது வருடங்களில் நான் அவ்வப்போது போய் முள்ளிவாய்க்கால பாத்து அழுதிற்று வந்திருக்கிறன். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்ற பெயரில் நடந்த ஒரு நிகழ்விற்கு கூட போகவில்லை, இனியும் போக போறது இல்லை.

முள்ளிவாய்க்கால் அழிவிற்கு பின்னான பத்து வருடங்கள்

உலகமே சாட்சியாக நிற்க ஒரு சிறு நிலப்பரப்பில் கொத்துக்கொத்தாக எமது மக்கள் அழிக்கப்பட்ட காட்சிகளும் பேரவலக்குரல்களும் பத்து வருடங்களின் பின்பும் எமது மனங்களில் அறைந்தபடியும் காதுகளில் ஒலித்தபடியும் இருக்கிறன. எத்தகைய ஒரு பேரவலம்! சிங்கள தேசத்தின் மனசாட்சி இனவாதத்தால் மறைக்கப்பட்டிருக்க, முஸ்லிம் மக்கள் மெளனித்திருக்க பெளத்த-சிங்கள பேரினவாத அரசு உலக ஆதிக்க சக்திகளின் முழுமையான உதவியுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் இனஅழிப்பின் கொடூர வடிவமெடுத்திருந்த காலம்.​

யாழில் இந்தியர்கள் கைது

யாழ்ப்பாணம் – கஸ்தூரியார் வீதியில் இந்தியர்கள் இருவரை, விசேட அதிரடிப் படையினர், இன்றுக் காலை (17) கைதுசெய்துள்ளனர். இந்திய தமிழகத்தைச் சேர்ந்த இருவர் சுற்றுலா விசாவில் வருகை தந்து, யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகை கடை ஒன்றில் வேலை செய்யும் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

திங்கள் முதல் விசேட தேடுதல் வேட்டை

சட்டவிரோதமான முறையில், வெடிபொருள்கள் உள்ளிட்ட ஆயுத, உபகரணங்களைத் தம்வசம் வைத்திருக்கும் நபர்களைத் தேடி, திங்கட்கிழமை (20) முதல், நாடு முழுவதிலும், விசேட சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

‘ஐ.எஸ்-இலிருந்து மூவர் அனுப்பிய பணத்தை, படுக்கையறையில் பத்திரமாய் வைத்தேன்’

சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் பயிற்சிபெற்ற இலங்கையைச் சேர்ந்த மூவரால், இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட 40 இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட தொகை தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவென, பயங்கரவாத விசாரணைப் பிரிவு, கொழும்பு மேலதிக நீதவான் தனுஜா ஜயதுங்கவின் கவனத்துக்குக் கொண்டுவந்தது.

’கைதான எவரையும் விடுவிக்குமாறு நான் கோரவில்லை’

உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலின் பின்னர் கைதுசெய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்காவிடம், தான் ஒருபோ​தும் எந்தக் கோரிக்கையையும் முன்வைக்கவில்லையென, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

’சந்தேகநபரை விடுவிக்குமாறு, ரிஷாட் என்னிடம் 3 முறை கோரினார்’

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் சம்பவங்களை அடுத்து, இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலொன்றின் போது, தெஹிவளை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட சந்தேநபர் தொடர்பில், அமைச்சர் ரிஷாட் பதியூதீன், இரண்டு தடவைகள் தன்னுடன் தொடர்புகளை ஏற்படுத்தி உதவி கோரியதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க ​தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பிள்ளைகளைப் பறிகொடுத்த டென்மார்க் தம்பதி, உருக்கமான அறிக்கை

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலில், தங்களது மூன்று பிள்ளைகளையும் பறிகொடுத்த டென்மார்க்கைச் சேர்ந்த கோடீஸ்வர தம்பதி, உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

’இலங்கைக்கு ஷரியா பல்கலைக்கழகம் தேவையில்லை’

இலங்கைக்கு, ஷரியா பல்கலைக்கழகமொன்று தேவையில்லையென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அலரி மாளிகையில் வைத்து, இன்று (17) அறிவித்தார். மத்ரஸாக்கள் உள்ளிட்ட இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டமூலம் தொடர்பில், தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் அப்துல் ஹலீம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்…

உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டித்தும் இலங்கையிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை முற்றாக ஒழிக்கக்கோரியும், பாரிய ஆப்பாட்டம் மற்றும் பேரணி என்பன, ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து, இன்று (17) புத்தளத்தில் இடம்பெற்றது.