மனிதத்தை தொலைத்து விட்டு நாம் எங்கே செல்கிறோம்…….!!

(Arunthathy Gunaseelan)

கொலைகளும்,கொள்ளைகளும், குண்டுவெடித்தலும் மட்டுமே மனிதநேயமற்ற செயல் என நாம் நினைக்கிறோம். ஆனால்
இதை விடக் கேவலமானது சகமனித நேசிப்பின்றி,மனிதரால் பின்பற்றப்படும் சில நம்பிக்கைகளும், செயல்களும், பழக்கவழக் கங்களும் தான் உறவுகளே…….!!

செவ்விந்தியக் காந்தி.

(Rathan Chandrasekar)
பல்லாயிரம் செவ்விந்தியரைக் கொன்று – அவர்களது ரத்தச்சேற்றில் எழுப்பப்பட்ட
அவலக் கோபுரம்தான் அமெரிக்கா .

கொலம்பஸின் கண்களில் பட்டதுதான்
இந்த மண் செய்த பெரும் பாவம்.

’23ஆம் திகதி வருக’ எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார் சோனியா

டெல்லியில் புதிய ஆட்சி அமைப்பது பற்றி ஆலோசனை நடத்துவதற்கு, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இம்மாதம் 23ஆம் திகதி சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத்துக்க, மொத்தமுள்ள 543 இடங்களில், வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு, எதிர்வரும் 19ஆம் திகதியுடன், தேர்தல் நிறைவடையவுள்ள நிலையில், 23ஆம் திகதி, 542 தொகுதிகளின் வாக்குகள் எண்ணி முடிவு அறிவிக்கப்படவுள்ளது.

சகல அதிகாரங்களுடன் கூடிய தெரிவுக்குழுவை அமைக்க யோசனை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும், அதற்கு பின்னர் எமது நாட்டில் இடம்பெறும் வன்முறைகளுக்கும் பாதுகாப்புத்துறையில் ஏற்பட்ட தளர்வே காரணம் எனக் குறிப்பிட்ட திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன, பாதுகாப்பில் எவ்வாறு தளர்வு ஏற்பட்டது. ஏன் நடந்தது? இதற்கு பொறுப்பானவர்கள் பொறுப்புக் கூறலிலிருந்து ஏன் விலகியுள்ளனர். என்பவை தொடர்பில் ஆராய சகல அதிகாரங்களு​முடைய தெரிவுக் குழுவொன்றை அமைக்க சபாநாயகர் முன்வரவேண்டும் என்றும் தெரிவித்தார்.

மஹிந்தவின் கோரிக்கை

தற்போதைய சூழ்நிலையில், சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்குமாறு, தனது அரசியல் கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் பயங்கரவாதிகளின் வலையமைப்பு

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் அனைத்துமே, மிகவும் திறமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் இவற்றை, இதற்கு முன்னர் இலங்கை இராணுவமோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமோ பயன்படுத்தியிருக்கவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நீர்கொழும்பு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்
டுக்குதல்களையடுத்து, நீர்கொழும்பு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்படைந்துள்ளது. நகரில் மக்கள் நடமாட்டம் குறைவாகக் காணப்படுவதுடன், நீர்கொழும்பு – சிலாபம் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபலமான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. வர்த்தக நிலையங்களில் வியாபாரம் நடவடிக்கைகளும் மந்த கதியில் காணப்படுவதுடன், ஓட்டோ சாரதிகள் தொழில் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

‘அமைதியின்மையைத் தோற்றுவித்தவர்களை தண்டிக்கவும்’

மினுவங்கொட பிரதேசத்தில் நேற்று (13) அமைதியின்மையைத் தோற்றுவித்த சகலருக்கும் எதிராக பாரபட்சமின்றி தண்டனை வழங்குமாறு, பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கை விடுப்பதாக, போக்குவரத்து, சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இனவாதத்தை இல்லாதொழிப்பது …..

(Mkm Shakeeb)
நேற்றைய இனவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஒருவரின் “ஜனாஸா” நல்லடக்க நிகழ்வில் பௌத்த பிக்குகளும் கலந்து கொண்டிருந்த படங்களே கீழுள்ளவை..

இனவாதத்தை இல்லாதொழிப்பது அவர்களை மிக அற்ப குழுவாக தனிமைப் படுத்துவதிலும் அவர்கள் சார்ந்த சமூகத்தில் ( எல்லா சமூகங்களிலும்) உள்ள இனவாதமற்ற பெரும்பான்மை மக்களிடையே நல்லுறவையும் இன சௌஜன்யத்தையும் பலப்படுத்துவதிலுமே தங்கியுள்ளது.

இனவாதம் பயங்கரவாதம் மதத் தீவிரவாதம் என்பன உடைமைகளையும் உயிர்களையும் அழிப்பதைதான் அவைகளின் வெற்றியாக கருதி வருகின்றன.. ஆனால் அவைகளால் மானுடம் மனிதாபிமானம் சகஜீவனம் போன்ற பெறுமானங்களை அழிப்பதில் ஒரு போதும் வெற்றிகாண முடிவதில்லை..

உடனடி பேரிழப்பாக பெரும் துயரமாக நடக்கும் நிகழ்வுகள் இருந்தாலும் அவை நல்லதும் நலன்பயத்தக்கதுமான விளைவுகளையே கொண்டு வரக் கூடியது என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை சார்ந்த ஒரு விடயமுமாகும்..

முகநூலின் இனவாத பதிவுகளும் பகிர்வுகளும் நமக்கு பெரும் உலகைப் போல் மாயத் தோற்றம் தந்தாலும் உண்மையான மனிதாபிமானமும் புரிந்துணர்வும் அதுவல்லாத சமூகப் பெருவெளியில் சாதாரண சக ஜீவிகளிடமும் புத்திஜீவிகளிடமும் பரந்திருக்கிறது.. அவைகளை மிகப் பலமாக கட்டியெழுப்புவதில் தான் இனவாதம் எனும் தீ அணைக்கப்படும் சாத்தியங்கள் அதிகம் உள்ளன.

பிற்குறிப்பு:
முகநூலில் இனவாதத்தையும் குரோதத்தையும் வளர்த்துக்கொண்டிருப்பவர்களை பார்த்தால் அவர்களால் சிறிது நேரம் கூட நிம்மதியாக உறங்கக்கூட முடிவதில்லை போல் தெரிகிறது..!!!

இனங்களின் இணைவு மட்டுமே இனக்கலவரங்களை தடுத்து நிறுத்தும்

இலங்கை மீண்டும் எரிகிறது. அநகாரிக தர்மபால போன்ற இனவெறிபிக்குகள் எடுத்துக் கொடுத்த சிங்கள பவுத்த நாடு என்னும் இனவெறிக் கோட்பாட்டை டி.எஸ் சேனநாயக்கா, ஜெ.ஆர் ஜெயவர்த்தனா என்னும் மக்கள் விரோதிகள் தூக்கிப் பிடித்து மூட்டிய சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான தீ தொடர்ந்து எரிகிறது. பெரும்பான்மை சிங்கள மக்களின் மனதில் தமிழ் மக்களும், முஸ்லீம் மக்களும் எதிரிகள் என்று சுயநல அரசியல்வாதிகள் தொடர்ந்து விதைத்த வெறுப்பினால் இலங்கை எரிகிறது.