உறவு வலயத்துக்குள் தமிழும் வேண்டும்: சீன தூதுவர்

இலங்கை மக்களுடனான தமது உறவு சிங்களம் பேசும் மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்று தெரிவித்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் செங் யுவான், தமிழ் மொழி பேசும் மக்களையும் தமது உறவு வலயத்தில் வைக்கவே விரும்புவதாகவும் கூறியுள்ளார். இலங்கையிலுள்ள சீன தொழில் முயற்சி திட்ட வளாகங்களில், இலங்கையின் மொழிக்கொள்கை பின்பற்றப்படுவதில்லை. (“உறவு வலயத்துக்குள் தமிழும் வேண்டும்: சீன தூதுவர்” தொடர்ந்து வாசிக்க…)

கூட்டு ஒப்பந்தத்தை ஒப்பந்த தரப்புகள்கூட நீதிமன்றத்தினூடாக கேள்விக்குட்டுத்த முடியாது

விசேட மேன்றையீடு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி

கூட்டு ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டிருக்கும் போது அதனை நீதிமன்றத்தினூடாக அந்த கூட்டு ஒப்பந்தத்தின் தரப்புகளான தொழில் வழங்குநருக்கோஃ கம்பனிகளுக்கோ அல்லது தொழிலாளர்கள் சார்பாக கையொப்பமிடும் தொழிற்சங்கங்களுக்கோ அல்லது நேரடியாக தொழிலாளர்களுக்கோ, நீதிமன்றத்தினூடாக கூட்டு ஒப்பந்தத்தை முடிவுறுத்தவோ கேள்விக்கு உட்படுத்தவோ முடியாது, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் அல்லது முதலாளிமார் சம்மேளனம் தொழில் ஆணையாளருக்கு அறிவிப்பதன் மூலமே அதனை முடிவுறுத்த முடியும் என மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா தாக்கல் செய்திருந்த விசேட மேன்முறையீடு பற்றிய விசாரணையின் போது உயர் நீதிமன்றம் தெரிவித்து அவரின் மனுவை நிராகரித்தது. குறித்த விசேட மேன்முறையீடு மீதான விசாரணை 17-01-2019ஆம் திகதி உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, விஜித மல்லகொட மற்றும் முருது பெர்ணான்டோ ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்குறித்த காரணம் கூறப்பட்டு மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டது. (“கூட்டு ஒப்பந்தத்தை ஒப்பந்த தரப்புகள்கூட நீதிமன்றத்தினூடாக கேள்விக்குட்டுத்த முடியாது” தொடர்ந்து வாசிக்க…)

பிரெக்ஸிட்: அடுத்தது என்ன?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

உறவுகள் எப்போதுமே தனிச்சிறப்பு வாய்ந்தவை. அவை உருவாகும் போது ஏற்படும் மகிழ்ச்சியை விட, அவை பிரியும் போது ஏற்படும் வலியும் அந்தரமும் நிச்சயமின்மையும் அச்சமூட்டுவன. இந்த அச்சமே, பல உறவுகள் பிரியாமல் இருப்பதற்குக் காரணமாகின்றன என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள்; சேர்வதும் பிரிவதும் இயற்கை என்று கருதுபவர்களும் இருக்கிறார்கள். ஆனாலும், பிரிவென்பது கடினமானது. (“பிரெக்ஸிட்: அடுத்தது என்ன?” தொடர்ந்து வாசிக்க…)

பல்தேசியக் கம்பனிகளால் பறிபோகும் விவசாயம்

”ராஜராஜசோழன் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய போது அமெரிக்கா என்றொரு நாடே
இருக்கவில்லை. ஏன் அப்படி ஒரு நிலப் பரப்பே நவீன மனிதர்களால்
கண்டறியப்படவில்லை.”
வவுனியாவில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் தமிழருவி சிவகுமாரன்
ஐயா ஆற்றிய உரையில் ஒரு கீற்று இது.
தமிழன் உயர் நிலைகளைக் கண்ட பொற் காலத்தின் போது ஐரோப்பியர்கள்
உன்னதங்களைத் தொடவில்லை.ஆனால் இன்று அப்படியாகவா இருக்கிறோம். (“பல்தேசியக் கம்பனிகளால் பறிபோகும் விவசாயம்” தொடர்ந்து வாசிக்க…)

வைரமுத்துவும் வாகை சூட வா பாடல் திருட்டும்.

2011ம் ஆண்டில் வெளியான வாகை சூட வா படத்தின் வெற்றிக்கு அதன் பாடல்களும் இசையும் ஒரு முக்கிய காரணம், இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு இது முதல் படம். படத்தின் பாடல்களை வைரமுத்துவும், கார்த்திக் நேதாவும் எழுதியிருந்தார்கள். இதில் வைரமுத்து எழுதியதாக வெளியான சரசர சார காத்து வீசும் போது பாடல் FILM FARE மற்றும் விஜய் விருதுகள் உட்பட பல விருதுகளையும், உயரிய அங்கீகாரங்களையும் அவருக்கு பெற்று தந்தது. இந்த விருதுகள் வாங்கும் தருணங்களில் பல மேடைகளில் வைரமுத்து இப்படி சொல்லி வந்தார். (“வைரமுத்துவும் வாகை சூட வா பாடல் திருட்டும்.” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்ச் சிறார் இலக்கியம்: நாவில் தங்காத தித்திப்பு!

(ஆதி வள்ளியப்பன்)

‘தமிழ்ச் சிறார் இலக்கியம் மீண்டும் புத்துயிர் பெற்றுவிட்டது!’, ‘சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் மீண்டும் கொண்டாடப்படுகிறார்கள்!’, ‘பாடப்புத்தகங்களைத் தாண்டிய வாசிப்பின் மூலம் சிறார் உற்சாகமடைந்து மொழிவளத்தை இயல்பாக வளர்த்தெடுத்துக்கொள்கிறார்கள்’

(“தமிழ்ச் சிறார் இலக்கியம்: நாவில் தங்காத தித்திப்பு!” தொடர்ந்து வாசிக்க…)

என் பார்வையில்… வட சென்னை (திரைப்பட விமர்சனம்)

(சாகரன்)

வெற்றி மாறன் மீண்டும் தான் ஒரு சிறந்த நெறியாள்கையாளன் என்று நிரூபித்திருக்கும் திரைப்படம் வட சென்னை. நூற்றுக்கு மேற்பட்ட கதாபாத்திரங்கள்… பல நூறு சம்பவங்கள்.. வசனங்கள்… பல கிளைக் கதைகள் எதிலும் சோடை போக விடாமல் நெறியாள்கை செய்வது என்பது மிகவும் கடினம் அது ஒரு கூட்டுழைப்பால் மாத்திரம் சர்த்தியம். இதற்காக உழைத்த அவரது குழுவினருக்;கு வாழ்த்து தெரிவித்தே ஆக வேண்டும். (“என் பார்வையில்… வட சென்னை (திரைப்பட விமர்சனம்)” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளினால் பலவந்தமாக சேகரிக்கப்பட்டு நீதியினால் வாங்கப்பட்ட சொத்து விவரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன

அந்தந்த நாடுகளில் வாழ்கின்ற புத்திஜீவிகள் சமூக செயற்பாட்டாளர்கள் சட்ட நிறுவனங்கள பத்திரிக்கையாளர்கள் ஆகியோர் அந்த நாட்டு அரசு நிறுவனங்களுடன் இணைநது அந்த சொத்துக்களை மீளவும் பெற்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு சென்று அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் ஈடுபடும் எவருக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க நாம் தயாராக உள்ளோம்.

(“புலிகளினால் பலவந்தமாக சேகரிக்கப்பட்டு நீதியினால் வாங்கப்பட்ட சொத்து விவரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன” தொடர்ந்து வாசிக்க…)

‘புதிய அரசமைப்பில் நாட்டைப் பிளவுபடுத்தும் அ​திகாரங்கள் இருக்கின்றன’ – மஹிந்த ராஜபக்‌ஷ

தற்போதைய சூழலில், புதிய அரசமைப்பொன்று தேவையில்லையெனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, அதனை நிறைவேற்ற, தாங்கள் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் நாட்டுக்கு இப்போது அது அவசியமில்லை என்றும், அதில் காணப்படும் அதிகாரங்கள், நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில் தான் இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார். (“‘புதிய அரசமைப்பில் நாட்டைப் பிளவுபடுத்தும் அ​திகாரங்கள் இருக்கின்றன’ – மஹிந்த ராஜபக்‌ஷ” தொடர்ந்து வாசிக்க…)

‘தமிழீழ கனவு வேண்டாம்’ – சுமந்திரன்

புதிய அரசமைப்பினூடாக, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும். தனி நாடு என்று காலத்துக்குக் காலம் கதைகள் வரும். ஒருமித்த நாட்டில் தமிழ் மக்களுக்கான தீர்வு வேண்டுமென்று தான் நாம் கேட்கிறோம். அதை விட்டு, தமிழீழக் கனவோடு இருக்கக் கூடாது. நான் சொல்வது, வெளியே போகும் போது, கல்லெறி விழுந்தாலும் விழும். ஆனால், நான் உண்மையான நிலைப்பாட்டைச் சொல்லியாக வேண்டும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். (“‘தமிழீழ கனவு வேண்டாம்’ – சுமந்திரன்” தொடர்ந்து வாசிக்க…)