நீரை வெறுக்க வைத்த…? மழை வெள்ளம்…..!(Part 1)

(சாகரன்)
உயிரினங்களின் உயிர் வாழ்விற்கு மிகவும் அத்தியாவசியமானது நீர். ஐதரசன் ஒட்சிசன் இரசாயனக் கூறுகள் இணைந்து உருவான நிறமற்ற திரவம்தான் நீர். மனித குல வரலாற்றில் மனிதனின் தேடல் கண்டம் விட்டு கண்டம் தாவி தற்போது கிரகம் விட்டு கிரகம் தாவி இதற்கு அப்பால் சூரிய குடும்பம் விட்டு சூரிய குடும்பம் தாவி விஞ்ஞானம் வளர்சியும் தேடல்களும் வளர்ந்த நிலையில் கண்டுபிடிக்கப்படும் புதிய கிரகங்களில் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா…? என்பதே விஞ்ஞானிகளின் முதல் தேடலாக அமைகின்றது. காரணம் ஜீவராசிகள் உயிர் வாழ்வதற்கு அல்லது வாழ்திருப்பதற்கான அடிப்படை இந்த நீர் என்பதேயாகும். (“நீரை வெறுக்க வைத்த…? மழை வெள்ளம்…..!(Part 1)” தொடர்ந்து வாசிக்க…)

கார்ல்ஸ் மாக்ஸ் இன் 200 ஆண்டு நினைவு தின நிகழ்வு

கனடா தமிழ் சங்க மண்டபத்தில் கார்ல் மாக்ஸ் இன் 200 பிறந்த தின கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. மாக்சிச ஆர்வலர்களும் பொது மக்களும் இந்த கலந்துரையாடலில் கலந்து கெண்டனர். கனடா கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பிரமுகர் உட்பட தவபாலன் மாஸ்ரர் பாலா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கலந்துரையாடலில் கலந்து கொண்ட பலரும் தமது ஆழமான வாசிப்பு அனுபவங்களின் அடிப்படையில் கார்ல் மாக்ஸ் இன் சமூக விஞ்ஞாம் சம்மந்மான கருத்துக்களை பதிவு செய்னர். முன்பு எப்போதையும் விட சமூக மாற்றத்தை ஏற்படுத்தி உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிறுவ வேண்டி அளவிற்கு முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வளர்ச்சியடைந்துள்ள நிலமையை உலக நாடுகளில் தற்போது நடைபெற்றுவரும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு பலரும் தமது கருத்துக்களை வழங்கினர்.

(“கார்ல்ஸ் மாக்ஸ் இன் 200 ஆண்டு நினைவு தின நிகழ்வு” தொடர்ந்து வாசிக்க…)

முதலமைச்சர்(?) வேட்பாளர்

(Karunakaran Sivarasa)

புலிகளுக்குப் பிறகான அல்லது யுத்தத்துக்குப் பிறகான அரசியலில் தமிழ் மக்களுடைய உரிமைக்கோரிக்கையை தளர்வின்றி ஒலிப்பவர் விக்கினேஸ்வரனே. இதை அவர் சிங்கள அரசியல் தலைவர்களுக்கு முன்பாகவே திமிராகச் செய்கிறார். உலகரங்கில் தெளிவாக முன்வைக்கிறார். எந்தச் சமரசங்களுக்கும் இடமளிக்காமல், துணிகரமாக, விட்டுக்கொடுப்புகளற்று அதைச் செய்கிறார். யுத்தக் குற்றங்கள் விசாரிக்கப்பட வேணும். அரசியல் ஏமாற்றுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உறுதியான நிலைப்பாட்டோடிருக்கிறார். இந்தப் பங்களிப்பு ஒன்றே விக்கினேஸ்வரனுடைய தகுதிக்குப் போதுமானது என்று சிலர் சொல்லக் கூடும்.

(“முதலமைச்சர்(?) வேட்பாளர்” தொடர்ந்து வாசிக்க…)

மீனவ நண்பர்கள்

(Vijay Baskaran)
நமது சமூகத்தில் நமது நாடுகளில் கற்ற கல்வி சமூகத்துக்கு பயன்படுவது இல்லை.பயன்படுத்துவதும் குறைவு.ஆனால் இந்தப் படித்தவர்கள் படிக்காத பாமர மக்களிடம் நிறையவே கற்கவேண்டியுள்ளது. கேரளாவில் வெள்ளத்தில் தத்தளித்த மக்களை எந்த பிரதிபலன் பாராது களத்திலே இறங்கி பல உயிர்களை மீனவர்களே காப்பாற்றியுள்ளனர்.இதைவிட தமிழக மீனவர்களும் பலன் எதிர்பராது உதவிக்கு சென்றுள்ளார்கள்.இந்த மீனவர்களே கேரளத்து இராணுவம் என பிரணாயி விஜயன் கூறி அவர்களை கௌரவுத்துள்ளார்.

(“மீனவ நண்பர்கள்” தொடர்ந்து வாசிக்க…)

அனைத்து தமிழ் கட்சிகளும் சந்தித்போது

22/8/2018 இன்று களுவாஞ்சிகுடி ராசமாணிக்கம் அரங்கில் கிழக்கு மாகாண தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சகல தமிழர் கட்சிகளின் கலந்துரையாடல் இடம்பெற்ற போது

புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part2)

போர் தொடங்கியவுடன் புலிகள் முதலில் செய்த வேலை கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதுதான். பால், வயது வேறுபாடு இல்லாமல் எல்லாக் குடும்பங்களில் இருந்தும் போருக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்திப் பிள்ளைகளைப் பிடித்துச் சென்றனர். அப்போது இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு வன்னியில் இருந்தது. .நா. உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் பலவும் வன்னியிலிருந்தன. புலிகளின் ஊடகங்கள் கட்டாய ஆள் சேர்ப்பை வலியுறுத்தியும் அதை நியாயப்படுத்தியும் பரப்புரை செய்தன. இவை எதைப்பற்றியும் இந்தச் சர்வ தேச அமைப்புகளும் பிரதிநிதிகளும் எந்தவகையான அபிப்பிராயமும் சொல்லவில்லை. அவை இதில் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்தன. புலிகள் இதைத் தமக்கான வசதியாகக் கருதி மெல்லமெல்ல தமது பிடியை இறுக்கி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினர். சிறிலங்கா ராணுவம் மன்னார் மாவட்டத்திலிருந்து போரைத் தீவிரப்படுத்தி மெல்லமெல்ல வன்னி மையத்தை நோக்கி நகரத் தொடங்க, புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு மிகத் தீவிரமடையத் தொடங்கியது. ஏற்கனவே கிழக்கையும் அதன் தலைமைக்குரிய கருணாவையும் புலிகள் இழந்ததையும் நினைவிற் கொள்க.

(“புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part2)” தொடர்ந்து வாசிக்க…)

’பிரபாகரனின் மரணம் மகிழ்ச்சியை தரவில்லை’

தனது தந்தையின் உயிரிழப்புக்கு காரணமான, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டதை நினைத்து தானும் தனது சகோதரி பிரியங்கா காந்தியும் மகிழ்ச்சியடையவில்லை என, இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

(“’பிரபாகரனின் மரணம் மகிழ்ச்சியை தரவில்லை’” தொடர்ந்து வாசிக்க…)

ஆபிரிக்காவின் இரு மரணங்கள்: வரலாறு எவ்வாறு நினைவுகூரும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

வரலாறு எல்லோரையும் நினைவில் வைத்திருப்பதில்லை. அவ்வாறு நினைவில் இருப்பவர்களும் எதற்காக நினைவிலுள்ளார்கள் என்பதிலேயே, அவர்களின் சமூகப் பெறுமானம் உள்ளது. வரலாற்றில் இடம்பெற்றோர் எல்லோரும் நினைக்கப்படுவதுமில்லை. வரலாறு ஒருவரை எதற்காக, எவ்வாறு நினைவில் வைக்கிறது என்பதே, இருப்பின் வெற்றியைத் தீர்மானிக்கிறது. நினைப்பதும் மறப்பதும் காலத்தின் வழுவல. நினையாமல் இருப்பதும், மறவாமல் நினைப்பதும், அவரவர் வாழ்ந்த காலத்தைக் கூறும் உரைகற்கள்.

(“ஆபிரிக்காவின் இரு மரணங்கள்: வரலாறு எவ்வாறு நினைவுகூரும்” தொடர்ந்து வாசிக்க…)

ட்ரம்ப்புக்கு வருகிறது மிகப்பெரும் ஆபத்து?

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முன்னாள் சட்டத்தரணி மைக்கல் கோஹன், தன்மீதான குற்றச்சாட்டுகளை ஏற்று, நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள நிலையில், ஜனாதிபதியை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் தகவல்களை அவர் வெளியிடுவாரென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கோஹனின் சட்டத்தரணியான டனி டேவிஸ், இது தொடர்பான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

(“ட்ரம்ப்புக்கு வருகிறது மிகப்பெரும் ஆபத்து?” தொடர்ந்து வாசிக்க…)