கிழக்கில் ‘எமதுசமூகம்’

‘எமதுசமூகம்’ என்னும் அமைப்பு கடந்த  இரண்டு வருடத்திற்கு மேலாக  தமிழர்களின் கல்வி,காணி, பொருளாதாரம் போன்றவற்றில் அக்கறையுடன்  கிழக்கில் செயல்பட்டு வருகின்றது. இதற்கு உறுதுணையாகவும் உறுப்பினர்களாகவும் நமது சமூகத்தைச்சேர்ந்த  பலகல்விமான்களும் தொழில்சால்நிபுணர்கள் விவசாயிகள் மாணவர்கள் மற்றும் மதகுருமார்கள் எனபலதரப்படவர்கள்  தொண்டர்களாக செயல் படுகின்றனர். தாயகத்தில் மட்டக்களப்பு, திருக்கோணமலை, அம்பாறையிலும் – கனடா, அவுஸ்திரேலியா, லண்டன் மற்றும் ஐறோப்பா போன்ற வெளிநாடுகளிலும் கிளைகள் அமைக்கப்பட்டு எமதுசமூகம் செயல்படுகின்றது.

(“கிழக்கில் ‘எமதுசமூகம்’” தொடர்ந்து வாசிக்க…)

மக்களோடு மக்களாய் தமிழர் சமூக ஜனநாயக கட்சியினர்

திருகோணமலை நகரசபைக்கான தழிழர் சமூக ஜனநாயக் கட்சியின் மெழுகுதிரி சின்னத்தில் போட்டியிடும் சிவபுரி வேட்பாளர் பிரகாஷ் அவர்களின் வட்டாரமான கஸ்தூரி நகரில் நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பு…

மக்களோடு மக்களாய் தமிழர் சமூக ஜனநாயக கட்சியினர்

திருகோணமலை தழிழர் சமூக ஜனநாயக் கட்சியின் மெழுகுதிரி சின்னத்தில் போட்டியிடும் சல்லி சாம்பல்தீவு வட்டார வேட்பாளர் விபூஷண் அவர்களை ஆதரித்து நடைபெற்ற மக்கள் சந்திப்பு…..

மக்களோடு மக்களாய் தமிழர் சமூக ஜனநாயக கட்சியினர்

திருகோணமலை தழிழர் சமூக ஜனநாயக் கட்சியின் மெழுகுதிரி சின்னத்தில் போட்டியிடும் கொளமியா அவர்களை ஆதரித்து காந்திநகர் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு………

மரணத்தை பலமுறை கண்டு புன்னகை மலர்ந்த  தோழன் இவன்.

மலர்ச்சி இழந்த மக்களின்

மகிழ்ச்சி முகம் காண அன்று
மாணவ பருவத்தில் சுடு மணலில் விளையாடியவர்
மஞ்சம் சுகவாசம் துறந்தவர்

(“மரணத்தை பலமுறை கண்டு புன்னகை மலர்ந்த  தோழன் இவன்.” தொடர்ந்து வாசிக்க…)

தந்தை பெரியார்

என் தங்கை இளம் வயதிலேயே
ஒரு பெண் குழந்தையையும்
ஒரு ஆண் குழந்தையையும் விடுத்து விண்ணுற்றாள்.

(“தந்தை பெரியார்” தொடர்ந்து வாசிக்க…)

ஹலாயிப் முக்கோணம்: யாருடைய கதியால்? யாருடைய வேலி?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
வேலிச்சண்டைகளுக்கு நம்மூர் பெயர்போனது. வீட்டுக்கோடியின் எல்லைக்கு உரிமை கொண்டாடி, கதியாலைத் தள்ளிப் போட்டு, பூவரசம் தடிகளை எட்டி நட்டு, நடந்த சண்டைக்கு உரியோர் கடல்கடந்து நாட்கள் பல ஆச்சு. ஆனால், வேலிச்சண்டைகளுக்கு முடிவில்லை. இது உலக அரசியலுக்கும் பொருந்தும். எல்லைத் தகராறுகள் எப்போதுமே இக்கட்டானவை. அவை, நாடுகளிடையே நடக்கும் போது, அதன் தீவிரம் மிக அதிகம். உலகின் ஏராளமான போர்கள், தீர்க்கக்கூடிய எல்லைப் பிரச்சினைகளால் மூண்டவை. சில எல்லைப் பிரச்சினைகளுக்கு, நூற்றாண்டு காலப் பழைமையும் பெருமையும் உண்டு.

(“ஹலாயிப் முக்கோணம்: யாருடைய கதியால்? யாருடைய வேலி?” தொடர்ந்து வாசிக்க…)

2 கோடி ரூபா விற்கான கணக்கு

நக்கீரன் எனும் பெயரில் நடராஜா முரளீதரன் அவர்கள் ஜனவரி 24, 2018 தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் 2 கோடி ரூபா பெற்றுக் கொண்டது பற்றி ஒரு பதிவினை செய்திருந்தார். அப்பதிவில் ததேகூ நா.உறுப்பினர், வேறு கட்சித் தலைவர்களுடான முரண்பாடான கருத்துக்கள் பற்றி பகர்ந்தார். அத்துடன் 2 கோடி ரூபா பற்றி மாவை. சேனாதிராஜாவினால் பரிந்துரைக்கப்பட்ட திட்டங்கள் பற்றிய விபரமும் கூறினார். முன்னையதை விட, பின்னையதே எனக்கு முக்கியமாகப் பட்டது. அது பற்றி நான் சில விளக்கங்கள் கேட்டிருந்தேன். அதுவும் கீழே மீண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கிழமையாகியும், இன்றுவரை எந்த பதிலும் நண்பர் முரளீதரனிடம் இருந்து வராததால், நான் விளங்கிக் கொண்டதை ஏனைய நண்பர்களுடன் பகிர்கிறேன்.

(“2 கோடி ரூபா விற்கான கணக்கு” தொடர்ந்து வாசிக்க…)

ஆறாத்துயரம்

எமது நண்பி சிவரமணி 1991மே மாதம் 17ம்திகதி தற்கொலை செய்துகொண்டாள் அவள் பற்றிய நினைவுகள் எனது கடந்த கால வாழ்க்கையில் கல்வெட்டாயின. அவளது தற்கொலைக்கான காரணம் அரசியல் ரீதியானதென்பதை நான் அறிந்தவன்; உணர்ந்தவன். இன்றைக்கு முகப்புத்தகத்தில் அவளின் தற்கொலைக்கு சாதியக் காரணிகளே காரணம் என்ற கோணத்திற் கருத்துகள் பகிரப்படுகின்றன.
சிவரமணியின் மரணம் வரையில் அவளுடன் நட்பாக இருந்தவர்களுள் நானும் ஒருவன்.

(“ஆறாத்துயரம்” தொடர்ந்து வாசிக்க…)

மக்களோடு மக்களாய் தமிழர் சமூக ஜனநாயக கட்சியினர்

திருகோணமலை நகரசபைக்கான சிவபுரி வேட்பாளர் பிரகாஷ் அவர்களின் வட்டாரமான கஸ்தூரி நகரில் நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பு…