கிழக்கில் ‘எமதுசமூகம்’

‘எமதுசமூகம்’ என்னும் அமைப்பு கடந்த  இரண்டு வருடத்திற்கு மேலாக  தமிழர்களின் கல்வி,காணி, பொருளாதாரம் போன்றவற்றில் அக்கறையுடன்  கிழக்கில் செயல்பட்டு வருகின்றது. இதற்கு உறுதுணையாகவும் உறுப்பினர்களாகவும் நமது சமூகத்தைச்சேர்ந்த  பலகல்விமான்களும் தொழில்சால்நிபுணர்கள் விவசாயிகள் மாணவர்கள் மற்றும் மதகுருமார்கள் எனபலதரப்படவர்கள்  தொண்டர்களாக செயல் படுகின்றனர். தாயகத்தில் மட்டக்களப்பு, திருக்கோணமலை, அம்பாறையிலும் – கனடா, அவுஸ்திரேலியா, லண்டன் மற்றும் ஐறோப்பா போன்ற வெளிநாடுகளிலும் கிளைகள் அமைக்கப்பட்டு எமதுசமூகம் செயல்படுகின்றது.

விதவைகளுக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் சிறு உணவுபயிர்ச்செய்கைக்கு நிலக்கடலை சோளம் போன்றவையும் அடிப்படை வசதிகளான தண்ணீர் மற்றும் சுயதொழில்வாய்ப்புக்கான உதவிகளையும் வழங்கி வருகின்றோம்.

பலஎல்லைப்பாடசாலைகளின் அத்தியாவசிய தேவைகளுடன் மாணவர்களின் கல்விஉபகரணங்கள் உயர்தரமாணவர்களை பரீட்சைக்கு தயார் படுத்துவதற்கான கருத்தரங்குகள் என்பன மூன்று மாவட்டங்களிலும் மலைநாட்டிலும்  நடத்தப்படுகின்றன.

இதைவிட பலவைத்திய நிபுணர்கள் தாதிய உத்தியோகஸ்தர்கள் தொழில்நுட்பவியலாளர்களுடன் பல்துறைசார் நிபுணர்கள் கலந்து கொள்ளும் மருத்துவமுகாமும் நடத்தப்பட்டுவருகின்றது.

மருத்துவ முகாமின் போது கிராமமக்களின் உரிமை அவர்களது தொழில் வளம் கல்வி வளர்ச்சி காணி பற்றிய விழிப்புணர்ச்சி தேர்தல் பற்றியும் வாக்களிக்கும் அவசியம் பற்றியும் கருத்தரங்குகள் கல்விமான்களினால் நடத்தப்படுகின்றன. இதுவரை 11 முகாம்கள் நடைபெற்றுள்ளன.

 

கடந்த 25/ 26 ந்திகதிகளில் வறுமைக்கோட்டின்  கீழ்வாழும் எம்மக்களுக்கு cataract screening கழுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் நடைபெற்று கல்முனை ஆதாரவைத்தியசாலையில் 20 மணித்தியாலங்களில் 142 பேருக்கான  cataract surgery நடைபெற்றது. எமதுசமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 12வது மருத்துவமுகாம் இதுவாகும்.  இதுகிழக்கிலங்கையில் ஒருவரலாறு படைத்துள்ளது. 13 வது முகாம் திருமலை மாவட்டம் ஈச்சிலம்பற்றையில் நடைபெறவுள்ளது.

 

தற்போது கிழக்கிலங்கை மற்றும் உலகநாடுகளில் வாழும் தமிழர்களாலும் அவர்களின் அமைப்புகளாலும் எமதுசமூகத்தின் தளராத சேவை அறியப்பட்டுள்ளது. எமதுசமூக உறுப்பினர்கள் சுயநலமற்று தொண்டர்களாக தேவையானவர்களுக்கு இதயசுத்தியுடன் நேரடியாக முற்றுமுழுதாக எந்தவித பிரதிபலனுமின்றி எமதுமக்களுக்காக தங்கள் நேரத்தையும் தொழில் நிபுணத்துவத்தையும்  இலவசமாக வழங்கி வருவதே இதற்கான காரணமாகும்.

 

எமது சமூகத்தின் தாய் அமைப்பு மட்டக்களப்பிலுள்ள (EDTA) கிழக்கு தமிழர் அபிவிருத்தி அமைப்பு என பதிவுசெய்யப்பட்ட வங்கி கணக்கினூடாக எல்லா OUR SOCIETY க்கும் பொதுவானதாக சகலவரவு செலவுகளும் இளைப்பாறிய நேர்மையான கணக்காளர்களால் கையாளப்படுகின்றன.

எமதுசமூகம் கனடா ஆரம்பிக்கப்பட்டு ஒருவருடம் பூர்த்தியாகியுள்ள  நிலையில் தாயகத்தில் எமது மக்களின் சமூகமேம்பாட்டிற்காக உதவியவர்களுக்கு நன்றி கூறவிரும்புகின்றோம்.

 

அதற்காக, எதிர்வரும் MARCH-17 ந்திகதி சனிக்கிழமை J&J Swagat B.H 415, Hood Rd #22 Markaham இல் அனுசரணையாளர்களுடன் நமது உறவுகளும் கலந்து சிறப்பிக்கும் இராப்போசன நிகழ்வு நடைபெறவுள்ளது. நீங்களும் அதில் கலந்து உங்கள் பங்களிப்பினை வழங்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

 

தனிப்பட்ட நபர்களோ அல்லது அமைப்புக்களோ கிழக்கிலங்கையில் தங்களது அனுசரணையுடன் உதவவிரும்பினால் தயவுசெய்து குறிப்பிட்ட நாட்டிலுள்ள எமதுசமூக இணைப்பாளருடன் தொடர்பு கொள்ளவும்.

உங்கள் விருப்புபடி யாவும் உண்மையும் நேர்மையும் என எமதுசமூகம் களத்தகவல்களைப் பெற்று அதனை சரியாக நிறைவேற்றும். நிகழ்வின் படங்கள் கருத்துக்கள் யாவும் உடன் WhatsApp groupஇல் பதிவேற்றப்படுவதுடன் அதற்கான நிதியறிக்கையும் வழங்கப்படும்.

‘எமதுசமூகம்’ தனித்துவம் நிறைந்த வெளிப்படையான கிழக்குத்தமிழர் சமூக மேம்பாட்டிற்கான இலாப நோக்கற்ற, அரசியல் சார்பற்ற  மனிதாபிமான அமைப்பு.

நன்றி . அஜந்தா ஞானமுத்து. 905 460 1667