இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதல் அமைசர் வரதராஜப்பெருமாள் பேட்டி: வசந்தம் தொலைக் காட்சியில்

இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதல் அமைசர் வரதராஜப்பெருமாள் பேட்டி வசந்தம் தொலைக் காட்சியில்

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மறுசீரமைப்புச் செய்து, மீண்டும் செயற்படுத்த அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. யுத்தத்தால் மோசமாகச் செயலிழந்த யாழ்ப்பாணம், வலிகாமம் பிரதேசத்தில் அமைந்துள்ள மயிலிட்டி மீன்பிடித் துறைமுகமும் அதனுடன் தொடர்புபட்ட 54 ஏக்கர் காணியும், மீன்பிடி நடவடிக்கைகளுக்காக இவ்வருடம் விடுவிக்கப்பட்டது.

(“மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

அமெரிக்காவின் தூதுவராலயம் ஜெருசலேமில்

இஸ்ரேலின் தலைநகரமாக ஜெரு​சலேமை உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாகவும், அமெரிக்க தூதுவராலயத்தை ஜெருசலேமிற்கு மாற்றவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் காரணமாக வளைகுடா நாடுகள் புதிய நெருக்கடியினைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்பின் இந்த முடிவினால் மத்திய வளைகுடா நாடுகளின் ஒற்றுமைக்கு தடை ஏற்படும் என்றும்,இதனால் வளைகுடா நாடுகளில் பிரச்சினைகள் ஏற்படலாம் என்றும் அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் தற்போது டெல் அவிவ் நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதுவராலயத்தை ஜெருசலேமிற்கு மாற்றும் நடவடிக்கை இன்னும் 6 மாதங்களில் முன்னெடுக்கப்படும் என்றும்,தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் எப்போதும் எட்டாப் பழத்துக்கு கொட்டாவி விடும் நபராகவே உள்ளார்.

அதற்கான காரணம் அவருக்கு அரசியல் நெகிழ்வுத் தன்மை அறவே இல்லாதவர் எப்போதும் தேசியம் தேசியம் தேசியம் என்று கூக்குரல் இடும் அவர் அதை எவ்வாறு பெறமுடியும் என்று கேட்டால்? அவருக்கு பதிலளிக்கமுடியாது. ஏனேனில் அவர் பேசும் தேசியம் அவர் சுயமாக கேட்கும் விடயமில்லை. அவரை வெளியில் இருந்து இயக்கும் பினாமிகளுடைய கோரிக்கை அதிலிருந்து அவர் விடுபடவும் முடியாது. (“திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் எப்போதும் எட்டாப் பழத்துக்கு கொட்டாவி விடும் நபராகவே உள்ளார்.” தொடர்ந்து வாசிக்க…)

கந்துவட்டி கனடா

கனடா பலருக்கு சொர்க்க பூமி.மேற்கு அய்ரோப்பிய நாடுகள் ஜனநாயக நாடுகள்.வளர்ச்சி அடைந்த நாடுகள்.இப்படித்தான் உலக மக்களின் கற்பனை. நான் மிக வறிய குடும்பத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தவன்.குடிசை வீடு.ஏதோ சாப்பாடு கிடைக்கும் .மண் தரையிலோ இல்லை மரங்களின் கீழோ நிம்மதியாக உறங்க முடியும்.எங்களைப் போன்றே பலரது வாழ்க்கை.

(“கந்துவட்டி கனடா” தொடர்ந்து வாசிக்க…)

பெண் தலைமத்துவ குடும்பங்கள்

சுவர்களின் ஓரங்களில் உட்கார்ந்து பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உதவ முடியவில்லையே என்றும் அவர்களை யாரும் கவனிக்கவில்லை என்றும் ஒப்பாரி வைக்கும் எமது உறவுகளே மீனைக் கொடுப்பதற்குப் பதிலாக மீன்பிடிக்க கற்றுக்கொடுப்போம் என்ற பழமொழிக்கு ஏற்ப கைகொடுப்போம் என்ற அமைப்பு இலங்கை முழுவதிலும் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் 31ஆம் திகதிவரை சிறு கைத்தொழில் மற்றும் குடிசைத் தொழிலுக்கான பயிற்சிகளை இலவசமாக வழங்க முன்வந்துள்ளனர். இந்த காலப் பகுதியில் தங்குமிடமும் உணவும்கூட இலவசமே.

(“பெண் தலைமத்துவ குடும்பங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழரசு கட்சி கங்கணம்

“மிக பிழையான அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையை, மக்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள் என உள்ளூராட்சிசபைத் தேர்தல் வெற்றியின் ஊடாக காட்டுவதற்கு தமிழரசு கட்சி முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது” என்று ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

(“தமிழரசு கட்சி கங்கணம்” தொடர்ந்து வாசிக்க…)

கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்த பேரவை

(புருஜோத்தமன் தங்கமயில்)

காதலோ, கல்யாணமோ நிலைத்து நீடித்து, வாழ்க்கையை வளமாக்குவதற்கு சம்பந்தப்பட்ட இருவருக்கும் இடையில் பரஸ்பர நம்பிக்கையும் விட்டுக்கொடுப்பும் அவசியம். மாறாக, தரகர்களின் தேவைகளுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அவசர அவசரமாக முன்னெடுக்கப்படும் திருமணங்கள், சின்னச் சின்ன பிரச்சினைகளுக்காகவே முறிந்து போயிருக்கின்றன. இது, சம்பந்தப்பட்ட இருவரின் வாழ்க்கையை மாத்திரமல்ல, அந்தக் குடும்பங்களின் நிம்மதியையும் நிர்க்கதியாக்கி விடுகின்றன. ஆனால், தரகர்களோ இன்னொரு திருமணத்தைச் செய்து வைத்து, தரகுக் கூலியைப் பெறுவதில் கவனமாக இருப்பார்கள். அவர்களிடம் சென்று, முறிந்துபோன திருமணம் பற்றிப் பேசிக்கொண்டிருக்க முடியாது. அவர்களும், அது பற்றி அலட்டிக்கொள்ள மாட்டார்கள்.

(“கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்த பேரவை” தொடர்ந்து வாசிக்க…)

கனடாவில் “ வேட்கை “ !?

முன்னாள் தமிழ் ஈழ விடுதலை புலிகள் உறுப்பினர், பின்பு கருணாவுடன் இணைந்து தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவர், தற்காலிகமாக இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணத்தை மகிந்த அரசு நீதிமன்ற துணை கொண்டு பிரித்தபின் நடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் வென்று முதல் அமைச்சர் ஆனவர், இன்று கொலை குற்றம் சாட்டப்பட்டவராக தடுப்பு காவலில் இருப்பவர் என பலமுகம் கொண்ட பிள்ளையான் என அறியப்படும் சந்திரகாந்தன் அவர்களால் எழுதப்பட்ட அவரது அனுபவம் தான் “ வேட்கை “ எனும் அவரின் அவரின் அனுபவ குறிப்பு.

(“கனடாவில் “ வேட்கை “ !?” தொடர்ந்து வாசிக்க…)

காரைதீவு மக்களின் ஆணையை துஷ்பிரயோகம் செய்கின்றது மகா சபை! சுதந்திர கட்சி, ஈ. பி. ஆர். எல். எப் தனி வழியில் போட்டியிட திட்சங்கற்பம்

வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை தமிழ் தேசிய கூட்டமைப்பு துஷ்பிரயோகம் செய்து நடப்பது போல காரைதீவு மக்கள் வழங்கி உள்ள ஆணையை காரைதீவு மகா சபை துஷ்பிரயோகம் செய்வதை கண்கூடாக காண முடிகின்றது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான செல்லையா இராசையா, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளரும், காரைதீவு பிரதி சபையின் முன்னாள் பிரதி தவிசாளருமான வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூட்டாக விடுத்து உள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்கள்.

(“காரைதீவு மக்களின் ஆணையை துஷ்பிரயோகம் செய்கின்றது மகா சபை! சுதந்திர கட்சி, ஈ. பி. ஆர். எல். எப் தனி வழியில் போட்டியிட திட்சங்கற்பம்” தொடர்ந்து வாசிக்க…)