காலி சம்பவம் தொடர்பில் 19 பேர் கைது

காலி ஜின்தோட்ட பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இதுவரையிலும் 19 பேரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்த பொலிஸ் தலைமையகம், அங்கு பாதுகாப்பு கடமைகளுக்காக விசேட அதிரடிப்படையினர் 100 பேர் உள்ளிட்ட 300 பேர், நிறுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. ஹிங்தோட்ட விதானகொட பகுதியில், கடந்த 16ஆம் திகதியன்று இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து, வெ ளி பிரதேசங்களைச் சேர்ந்த சிலர், ​நேற்றிரவு தாக்குதல்களை மேற்கொண்டனர் என்றும் அறியமுடிகின்றது. சம்பவத்தையடுத்து பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அந்த ஊரடங்கு சட்டம் இன்னும் அமுலில் இருப்பதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

யார் தலைவன்….

(Paul Prahalathan )
கல்லுடைக்கும் தொழிலாளிகளோடு ஒன்றாக வாழ்ந்தவன். தானும் அதே தொழிலை அவர்களோடு செய்தவன். காலாற நடந்தவன். தோழர்களோடு தோழனாக வாழ்ந்தவன். பட்டி தொட்டி எங்கும் இடதுசாரிய முற்போக்காளர்களை தேடிக்கண்டு தோழமை அரசியல் புரிந்தவன். பதவி ஆசை இல்லாதவன். கட்சி சொத்துக்கு ஆசை கொள்ளாதவன். கொண்ட கொள்கையில் பிடிவாதம் உள்ளவன். எதற்காகவும் எவருக்காகவும் கொள்கையை விட்டுக்கொடுக்காதவன்.

(“யார் தலைவன்….” தொடர்ந்து வாசிக்க…)

ஈரோஸ் தலைவர் தோழர் பாலகுமார் கண்ட கனவு நனவாகின்ற காலம் கனிந்து விட்டது!  

(ரி. தர்மேந்திரன்)             

ஈரோஸ் அமைப்பின் தலைவர் தோழர் பாலகுமார் கண்ட கனவு நனவாகின்ற காலம் கனிந்து உள்ளது, எந்தவொரு போராட்டமாக இருந்தாலும் அந்த போராட்டத்தின் சூத்திர கயிறாக மக்கள் இருந்தால் மாத்திரமே அப்போராட்டம் வெற்றி பெறும் என்று அவர் அடிக்கடி கூறுவது வழக்கம், காணாமல் போன உறவுகளை கண்டு பிடித்து தர கோரியும், நிலங்களை விடுவிக்க கோரியும் அரசியல்வாதிகளை நம்பாமல் அரசாங்கத்துக்கு எதிராக தமிழ் மக்கள் அவர்களாகவே போராட்டங்களை முடுக்கி விட்டு இருப்பது நம்பிக்கை ஊட்டுகின்ற முன்னேற்றகரமான விடயம் ஆகும் என்று ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் செயலாளர் இராஜ. இராஜேந்திரா எமக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் தெரிவித்தார். இவருடனான நேர்காணல் வருமாறு:-

(“ஈரோஸ் தலைவர் தோழர் பாலகுமார் கண்ட கனவு நனவாகின்ற காலம் கனிந்து விட்டது!  ” தொடர்ந்து வாசிக்க…)

யார் இந்த –TNA (Tamil National Alliance)?

தமிழ்க் கூட்டமைப்பா, இந்திய நாட்டமைப்பா?

(முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் கூட்டமைப்பு எடுத்துள்ள நிலைப்பாடும் ஆற்றும் பாத்திரமும்.)

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO), ஆகிய அமைப்புக்களின் சில தனிநபர்களைக் கொண்டும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின்(LTTE) சில ஆதரவாளர்களைக் கொண்டும் 2002 ஆம் ஆண்டு ஒஸ்லோ பேச்சுவார்த்தையை ஒட்டி இக்கூட்டமைப்பு (Tamil National Alliance –TNA) தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது. (“யார் இந்த –TNA (Tamil National Alliance)?” தொடர்ந்து வாசிக்க…)

கசப்படைந்து வரும் தமிழர் முஸ்லிம் உறவும் எதிர்காலமும்.

தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப் பட்ட பின் வடக்கிலிருந்து வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே முஸ்லிம்கள் குடியிருந்த பகுதிகளில் நடத்தப் பட்ட நியாயமான குடியேற்றங்கள் தமிழ் மக்களின் அனுசரணையுடனேயே நடந்தேறின. ஆனாலும் இவை மீள்குடியேற்றம் என்ற போர்வையில் தமிழ் பகுதிகளின் குடிப்பரம்பலையே முஸ்லிம்களுக்கு சாதமாக மாற்றியமைத்து தமிழ் மக்களின் நில வளங்களை கபளீகரம் செய்யும் நிலைக்குச் சென்ற பின்பே தமிழர் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வர ஆரம்பித்தன. (“கசப்படைந்து வரும் தமிழர் முஸ்லிம் உறவும் எதிர்காலமும்.” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உதிர்ந்தும் உதிராமலும் தனது நடையைக் கட்டுகின்றது.

(சாகரன்)

இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தின் பிரம்மா நான்தான் என்று தாராக்கியின் ஆவியில் இருந்து ஆரம்பித்து விக்னேஸ்வரனின் உறவினர் நிர்மலன் வரை உரிமை கொண்டாட இதற்கான ஆவணங்களைச் சமர்பித்து பத்தி எழுத்தாளர்கள் பலரும் எழுத ஆரம்பித்திருக்கும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உதிர்ந்தும் உதிராமலும் தனது நடையைக் கட்டுகின்றது. உண்மையில் இதன் உருவாக்கம் புலிகளினால் நடைபெற்றது என்பதே உண்மையாக இருக்க முடியும். புலிகளின் பினாமிகள் பலர் தம்மை புலிகளின் ‘நல்லவேன்டா’ என்று விசுவாசிகளாகவும் அவர்களின் மீட்போராகவும் காட்டிக் கொள்ள எடுக்கும் பிரயத்தனங்களே இந்த உரிமை கோரல்கள் ஆகும் அன்றும் இன்று. அல்லது தாம் தான் புலிகளின் பாலசிங்கம் என்று காட்ட முயலும் செயற்பாடுகளின் வெளிப்பாடுகள் இவை. (“தமிழ் தேசியக் கூட்டமைப்பு உதிர்ந்தும் உதிராமலும் தனது நடையைக் கட்டுகின்றது.” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் வி.ஏ. கந்தசாமி -25 வது நினைவு தினம் 

இலங்கை நாட்டில் வட பிரதேச கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவராக விளங்கியிருந்த, “வீ.ஏ.” என தோழர்களால் அன்பாக அழைக்கப்படும் தோழர் வீ.ஏ கந்தசாமி அவர்கள் மறைந்து 25 வருடங்கள் பூர்த்தியாகின்றது. தலைசிறந்த இடதுசாரி பேச்சாளர்களுள் ஒருவராக திகழ்ந்திருந்த தோழர் கந்தசாமி அவர்கள் வட-கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராகவும் சேவையாற்றியிருந்தமை பலரிற்குத் தெரிந்திராதது.

(“தோழர் வி.ஏ. கந்தசாமி -25 வது நினைவு தினம் ” தொடர்ந்து வாசிக்க…)

த.தே.கூட்டமைப்புக்கு நல்ல ‘எதிர்க் கடை’ வேண்டும்

(Gopikrishna Kanagalingam)

தமிழில், “கீரைக் கடைக்கும் எதிர்க் கடை வேண்டும்” என்றொரு சொற்றொடர் உண்டு. இது, யாருக்குப் பொருந்துகிறதோ, இல்லையோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவர்களைப் பொறுத்தவரை, அக்கூட்டமைப்புக்குச் சரியாகப் பொருந்துகிறது. இவர்களில் ஒரு பகுதியினரால் தான், புதிய எதிர்க் கடையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. (“த.தே.கூட்டமைப்புக்கு நல்ல ‘எதிர்க் கடை’ வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பெண் கவிஞர் செல்வி.

(யசோதா)

1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து செல்வி புலிகளால் கைது செய்யப்பட்டார். செல்வி உருவாக்கிய படைப்புக்களும் கருத்துக்களும் விடுதலைப் புலிகளை நோகடித்து விட்டதாகவும் அதற்கான தண்டனையாகவே செல்வி கைது செய்யப்பட்டதாகவும் புலிகளுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

(“புலிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பெண் கவிஞர் செல்வி.” தொடர்ந்து வாசிக்க…)

புதிய கூட்டணி: தொடர்ந்து துரத்திய பேரவை; கை விரித்த விக்னேஸ்வரன்

(புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அழைப்பின் பேரில், சில மாதங்களுக்கு முன், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப – தலைவர் பேராசிரியர் க.சிற்றம்பலம் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டமொன்று, யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

(“புதிய கூட்டணி: தொடர்ந்து துரத்திய பேரவை; கை விரித்த விக்னேஸ்வரன்” தொடர்ந்து வாசிக்க…)