கசப்படைந்து வரும் தமிழர் முஸ்லிம் உறவும் எதிர்காலமும்.

தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப் பட்ட பின் வடக்கிலிருந்து வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே முஸ்லிம்கள் குடியிருந்த பகுதிகளில் நடத்தப் பட்ட நியாயமான குடியேற்றங்கள் தமிழ் மக்களின் அனுசரணையுடனேயே நடந்தேறின. ஆனாலும் இவை மீள்குடியேற்றம் என்ற போர்வையில் தமிழ் பகுதிகளின் குடிப்பரம்பலையே முஸ்லிம்களுக்கு சாதமாக மாற்றியமைத்து தமிழ் மக்களின் நில வளங்களை கபளீகரம் செய்யும் நிலைக்குச் சென்ற பின்பே தமிழர் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வர ஆரம்பித்தன.கடந்த பத்தாண்டு காலமாக முஸ்லிம்களால் போரினால் பாதிக்கப் பட்ட தமிழ் மக்கள் மீதும் பழங்குடி மக்கள் மீதும் திட்டமிட்ட வகையில் கூட்டாக இணைந்து நடத்தப் பட்டு வரும் நில ஆக்கிரமிப்புகள், சமூக சதிவேலைகள் மூலமாக வேலைவாய்ப்பு, கல்வி புறக்கணிப்புகள் அப்பட்டமாக தொடரும் நிலையில் இதற்கு மேல் பொது நியாயம் பேசும் அரசியல் காலம் வேகமாக முடிவிற்கு வந்து கொண்டிருக்கிறது.

குடும்பங்களாகவும், விவசாயிகளாகவும், நிலச்சொந்தக்காரர்களாகவும், அலுவலக வேலைகள் மற்றும் கல்வி துறையாளர்களாகவும், வியாபாரிகளாகவும் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பாரிய அளவிலானவை. சிவில் நிர்வாக அலகுகளான பிரதேசசபை, நகரசபை, மாநகரசபை என்பன திட்டமிட்ட முறையில் முஸ்லிம் பகுதிகளுக்கு சாதகமாக எப்படி இலங்கை அரசின் நிர்வாக உதவியுடன் நிறைவேற்றபட்டிருக்கிறது, இன்னும் வரும் தேர்தல்களில் எப்படி தமிழ் பகுதிகள் கபடத் தனமாக புறக்கணிக்கப்பட்டு முஸ்லீம்களின் பகுதிகள் முன்னுரிமை பெறும் வகையில் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கபட்டுள்ளன என்பதையும் தமிழ் மக்கள் ஆதாரத்துடன் முன் வைக்கிறார்கள்.

பழங்குடி மக்களின் பாரிய நிலங்களும் சில இடங்களில் முழு கிராமங்களே எப்படி முஸ்லிம்களால் ஏமாற்றப்பட்டு பறிக்கபட்டுள்ளன என்பதை அவர்கள் குமுறலுடன் முன்வைக்கிறார்கள்.

வடக்கில் மன்னார் மாவட்டத்தில் அரச ஆதரவு, அன்னிய நிதி மூலதனத்துடன் நடந்துவரும் முஸ்லிம் குடியேற்ற திட்டங்கள் அம்மாவட்டத்தின் குடிப்பரம்பலை மாற்றி அமைக்கும் திட்டம் கொண்டது. கூடவே கரையோர மாவட்டம் என்னும் முஸ்லிம்களது கோரிக்கைக்கு மன்னாரை விழுங்கும் திட்டமும் கொண்டது. இன அழிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்ட மற்றைய வன்னி மாவட்டங்களில் வியாபார பகுதிகளை திட்டமிட்டு கைப்பற்றுவதும், அரச துணையுடன் காடுகளை அழித்து குடியேற்றங்களை செய்வதற்கு தொடர்ந்து முயற்சிகள் நடந்து வருகிறன.

இலங்கை தீவில் “நாம் எல்லோரும் இலங்கையர்” என்று கூறிக்கொண்டு எப்படி இலங்கை அரசின் ஆசியுடன் சிங்கள கடும்போக்கு தலைமைகள் தமிழ் மக்கள் மீது தொடர்ந்தும் ஆக்கிரமிப்பை செய்து வருகிறார்களோ அதிலிருந்து சிறிது வேறுபட்டு, தமிழர்களுக்குள் வாழ்ந்து கொண்டு சகோதரர்கள் என்று கூறிக்கொண்டிருக்கும் முஸ்லிம்கள் அத்தமிழ் சமூகத்தை அரித்து வருவதாக தமிழ் மக்கள் உணர்கிறார்கள்.

சமகால சமூகங்களின் வாழ்நிலைகளுடனும், கலாச்சாரங்களுடனும் சமாந்தர பாதையில் பயணிக்கமுடியாத மூடியவகை சமூக அமைப்பை கொண்டிருப்பதுடன், பழங்கால தீவிர மத அடிப்படைவாத வாழ்முறையை உள்வாங்கிக்கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகம், மற்றைய சமூகங்களில் இருந்து அன்னியப்பட்ட வாழ்முறைகளை கொண்டிருப்பதும், அது பின்பற்றும் குழுவாத வாழ்முறையே படிப்படியாக மற்றைய சமூகங்களை தங்களை நோக்கி இழுக்க முயற்சி செய்வது அல்லது குழுநிலை நலனுக்கு ஏற்ப ஆக்கிரமிப்பது என்னும் நிலைக்கு செல்வது தவிர்க்கமுடியாததாகி விடுகிறது. இந்த சமூகம் தனது மதம் சார்ந்த குழுவாத வாழ்நிலையில் இருந்து வெளிவராதவரை, சகமக்கள் பிரிவினருக்கு பெரும் சவாலாகவே இருக்கப்போகிறது என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.

தமிழ் சமூகம் பல வழிகளிலும் தனது முறைப்பாடுகளை முஸ்லிம் சமூகத்தை நோக்கியும், தலைவர்களை நோக்கியும் உரக்க கத்திக்கொண்டிருக்கும் இவ்வேளையில், முஸ்லிம் தரப்பில் இருந்து தமிழ் மக்களை நோக்கி ஒரு நியாமான குரலும் கேட்டதாக தெரியவில்லை. இதற்கு மாறாக “தந்திரமாக செயற்பட்டு தமிழரை ஏய்த்தோம்”, “வடக்கு கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும்” என்று முஸ்லிம் தலைமை பிதற்றுவது எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றும் வேலையாகும்.

தமிழர்கள் இதற்கு மேல் முஸ்லிகளின் இந்த சமூக சந்தர்ப்பவாதத்தை அனுமதிப்பதாக இல்லை. தமிழர்கள் நடத்துவது தமது வளங்கள், உரிமைகள் மீதான தற்காப்பு நடவடிக்கை. முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பை செய்து கொண்டு தமிழரிடம் அதீத ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது. தற்காப்பு பற்றி பேசுவது இனவாதமாக அர்த்தப் பட்டுவிடும் என்ற மயக்கத்தில் தமிழர்கள் தொடர்ந்தும் வீழ்ந்து கிடக்க வேண்டிய அவசியம் இல்லை.

அதேசமயம், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் மக்களை வெறியூட்டி காரியம் சாதிக்க நினைக்கும் இந்து மதவெறி, பெளத்த மதவெறி சக்திகள், இலங்கை அரசின் தமிழ் தொங்கு தசைகள், முஸ்லிம்களை வெறுக்கும் தமிழ் இனவாத சக்திகளிடம் தமிழ் மக்களின் மிகுந்த எச்சரிக்கை அவசியமாகிறது. இச்சக்திகள் வேண்டுமென்றே நிலைமைகளை ஊதிப்பெருக்கி அதை மதப்பிரச்சனையாகவோ அல்லது இனப்பிரச்சனையாகவோ உருவாக்கி தமிழர்களின் நியாமான போராட்டங்களையும், முஸ்லிம்களின் நியாயமான இருப்பையும் அழித்து ஒழிக்கும் நோக்கம் கொண்டவை.

வனத்துறை, கடல் அபிவிருத்தி துறை, இராணுவம், கடல்படை, விமானப்படை, தொல்பொருள் ஆய்வுதுறை என்ற பெயரில் சிங்கள பெளத்த அரசால் தமிழ் மக்களின் உரிமைகள், வளங்கள் பெருமளவில் பறிக்கப்பட்டு, அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த இக்கட்டான காலகட்டத்தில்; கூடவே வாழ்ந்து கொண்டு சகோதர இனம் என்ற ஒரு உயரிய நிலையில் இருந்து தமிழர்கள் மீது முஸ்லிம்கள் செய்துவரும் அத்தனை அநியாயங்களையும் நிறுத்தாவிடின் நிலைமைகள் மோசமடைவது தவிர்க்க முடியாதது. இன்று முஸ்லிம் எதிர்ப்பு என்பது தமிழ் சமூகத்தின் பிரதான பொதுப்புத்தியாக மாறிவருவதை முஸ்லிம்கள் அவதானிக்கத்தவறி தொடர்ந்தும் இதேவகை ஆக்கிரமிப்பு போக்கை மேற்கொள்ளுவார்களேயானால், வர இருக்கும் மோசமான நிலைமைகளுக்கும் அவர்கள்தான் பொறுப்பாளிகள்.

இன்றைய கால கட்டத்தில் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் இருக்கும் இந்த பாரிய முரண்பாடு பற்றியும், அதில் உள்ள நியாயங்கள் பற்றியும் பேசாதவர்கள் இனிவரும் காலங்களில் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றி பேசுவதற்கு அருகதை அற்றவர்கள். மறுபக்கம் தமிழ் மக்களை வெறியூட்டி தவறான திசைவழியில் பயணிக்க வைக்க முயற்சிக்கும் தலைமைகள் முற்றாகப் புறக்கணிக்கப் படவேண்டியவர்கள்.

தமிழ் மக்களே!

  • உங்கள் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களை வெளியேற்றுங்கள்
  • உங்களின் உண்மை பத்திரங்களின் முன் போலிப் பத்திரங்கள் செல்லுபடியாகதவை, உங்கள் நிலத்திற்காக தொடர்ந்து போராடுங்கள்
  • முஸ்லிம் பெயரிடப்பட்டிருக்கும் ஆக்கிரமிக்கப்பட்ட பழங்குடி மக்களின் கிராமங்கள் பிரதேச சபைகளுக்குள் அடக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட அனுமதிக்கப்படக்கூடாது
  • இன்றிருக்கும் தமிழ் தலைமைகளில் நம்பிக்கை வைத்து ஏமாறாது, போராட்டத்தை உங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளுங்கள்
  • நீங்கள் உருவாக்கும் அமைப்பு வடிவங்கள் மட்டுமே உங்களை பாதுகாக்கும் வல்லமை கொண்டவை

முஸ்லிம் மக்களே!

  • கிழக்கிலும், வடக்கிலும் தமிழர்களுடனான ஜனநாயாக வாழ்முறை என்பது உங்களின் உயிர்நாடி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
  • எவர் செய்தாலும், தவறை தவறென்றும் சரியை சரியென்றும் பேசும் தன்மையயற்ற ஒரு இருண்ட, மூடிய நிலையில் இருந்து வெளியே வாருங்கள்.
  • இஸ்லாம் என்பது உங்கள் மார்க்கம் அதில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அதன் வழி உருவாகும் உங்களின் வாழ்முறையின் சமூக நீட்சி என்பது சகசமூகங்களின் இருத்தலை கேள்விக்கு உள்ளாக்கும் போது, உங்களின் வாழ்முறை பேசுபொருளாக்கப்படுவது தவிர்க்கமுடியாது போய்விடுகிறது.
  • உங்களில் சமூக அக்கறை, ஜனநாயக கூறுகளில் அக்கறை உள்ளவர்கள் வெளிப்படையாக பேச வேண்டியதும் செயலாற்ற வேண்டியதுமான காலமிது. நிலைமைகள் தீவிரமடைந்தபின் அவை நம் கட்டுப்பாட்டை மீறியவையாக மாறிவிடுகின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

ஆக்கிரமிப்பு முஸ்லிம்களே!

  • ஆக்கிரமித்துள்ள தமிழர்களின், பழங்குடிகளின் நிலங்களை விட்டு வெளியேறுங்கள்!
  • அத்துமீறி குடியேறி அராஜகம் செய்யும் பகுதிகளில் இருந்து வெளியேற்றப் படுவீர்கள்
  • கிழக்கில் அரசியல்வாதி, அதிகாரி கூட்டில் நடைபெறும் சதி அம்பலத்திற்கு வந்துள்ள நிலையில், இது தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்
  • சிவில் நிர்வாக அமைப்புகளில் செய்யப்படும் சதி வேலைகள் உரிய அமைப்பு முறைமூலம் எதிர்கொள்ளப்படும்
  • மத சமூகமாக குழுவாத அடிப்படையில் இயங்கும் வர்த்தக ஆக்கிரமிப்புகள் இனியும் தொடர முடியாது

புதிய திசைகள்(17/11/2017)