ஏ-9 வீதியை வழி மறித்து போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், ஏ-9 வீதியை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “காணாமல் ஆக்கப்பட்டோரின் விவரங்களை வெளியிட வேண்டும்” என, தெரிவித்து உறவினர்களால் குறித்த போராட்டம் கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலய முன்றலில் 67ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டது. 67 நாட்கள் ஆகியும் அரசாங்கம் தீர்வு எதனையும் வழங்காத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் ஏ-9 வீதியை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

(“ஏ-9 வீதியை வழி மறித்து போராட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

வில்பத்து பிரச்சினையில் மூன்று நற்செய்திகள். இன்னுமொரு நல்ல செய்தியும் இன்று வருகிறது!

வில்பத்து காணி சுவீகரிப்புக்கெதிரான மக்களின் போராட்டம் இன்று 32 வது நாளாக மறிச்சுக்கட்டியில் நடைபெற்று வருகிறது. தமது மண் தமக்கு வேண்டுமென்று அரசை வலியுறுத்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஏற்பாட்டில் இரவு பகல் பாராமல் அங்கு நடைபெறுகின்ற போராட்டத்திற்கு நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த மக்கள் தமது ஆதரவைத்த தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று போராட்ட களத்தில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் இணைப்புச் செயலாளரும் முசலி மண்ணைச் சேர்ந்தவருமான அலிகான் ஷரீப் உரையாற்றினார். அவர் தனது உரையில்,

(“வில்பத்து பிரச்சினையில் மூன்று நற்செய்திகள். இன்னுமொரு நல்ல செய்தியும் இன்று வருகிறது!” தொடர்ந்து வாசிக்க…)

முருகநேசன் என்னும் விரிவுரையாளன்

குடும்பத்தில் நிலவிய பயங்கர வறுமையில் அவரது தாயார் புல்லுக்கடகம் சுமந்து அதை விற்று தன் பிள்ளைகளை படிக்கவைத்தார் ,மூத்தவரான தோழர் முருகநேசன் படிப்பை முடித்து வேலையில் தன்னைப் பொருத்திக்கொண்டிருக்கும்போதில் தமது வறுமை ஓரளவு தணிந்தும் ஏனைய சகோதரர்கள் மேலும் படித்து முன்னேறிவிடலாம் என அவர்கள் குடும்பம் நம்பிக்கைகொண்டிருந்தது .தனது குடும்ப வறுமையையும் சூழலையும் விலத்தி விடுதலைப்போராட்டத்தில் அவர் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் .காந்தி என்றழைக்கப்பட்ட புலிகளின் சித்திரவதைகளினதும் சிறைச்சாலைகளினதும் பொறுப்பாளன் ஓர் உண்மையான காந்தீய வாழ்வில் வாழ்ந்த முருகநேசனை சிறையில் சித்திரவதை செய்து கொன்றான் .தன்னைச் சித்திரவதை செய்தவர்களுக்கு அவர் சிறையில் அரசியல் மற்றும் சமூக விஞ்ஞானத்தின் அடிப்படைகளை விளக்கமுயன்று தோற்று காந்தியால் கதிரையால் அடித்துக்கொல்லப்பட்டார்.சித்திரவதை செய்த காந்தி இறுதி யுத்தத்தில் அரச படைகளிடம் சரணடைந்து இன்னமும் புனர்வாழ்வு முகாமில் உள்ளான்.

(“முருகநேசன் என்னும் விரிவுரையாளன்” தொடர்ந்து வாசிக்க…)

வட கொரியா யுத்தத்திற்கு அறை கூவல் விடவில்லை

வ‌ட‌ கொரிய‌ ம‌க்க‌ள் எப்போதும் போருக்கு எதிராக‌த் தான் குர‌ல் கொடுத்து வ‌ருகின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ள‌து அர‌சு போர்வெறி கொண்டு அலைய‌வில்லை. அதைச் செய்வ‌து அமெரிக்க‌ ஏகாதிப‌த்திய‌ம். அது அந்த‌ ம‌க்க‌ளுக்கு ந‌ன்றாக‌த் தெரியும். நாளைக்கு அமெரிக்க‌ இராணுவ‌ம் ப‌டையெடுத்தால் அந்த‌ ம‌க்க‌ளை கையைக் க‌ட்டி வேடிக்கை பார்க்க‌ சொல்கிறீர்க‌ளா? அமெரிக்க‌ குண்டு வீச்சில் அப்பாவி ம‌க்க‌ள் பலியாக‌ மாட்டார்க‌ளா? த‌ங்க‌ள் நாட்டை ஆக்கிர‌மிக்க‌ வ‌ரும் அந்நிய‌ இராணுவ‌த்தை எதிர்த்து போரிடுவ‌து த‌ப்பா?

(“வட கொரியா யுத்தத்திற்கு அறை கூவல் விடவில்லை” தொடர்ந்து வாசிக்க…)

‘மோடிக்கு நேரமில்லை’

ஐக்கிய நாடுகளின் சர்வதேச வெசாக் நிகழ்வில் கலந்துகொள்ள இலங்கைக்கு வரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர ​மோடி, ஒப்பந்தம் எதிலும் கைச்சாத்திட மாட்டார். அதற்கு அவருக்கு நேரமும் இல்லை” என, அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்றபோது, அவர் இதனைக் கூறினார்.

(“‘மோடிக்கு நேரமில்லை’” தொடர்ந்து வாசிக்க…)

முப்படைகளின் உயர்பொறுப்பை ஏற்க பொன்சேகாவுக்கு அழைப்பு

நாட்டின் சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக முப்படைகளில் அதியுட்ச பொறுப்பை ஏற்பதற்கு முன்னாள் இராணுவ தளபதியும் பிரதேச அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. அதற்கான அதிகாரங்களுடன் உரிய பதவியை வழங்கினால் தனக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு சரத் பொன்சேகா சம்மதம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றபோது, அவர் இதனைக் கூறினார்.

வட கொரியாவின் ஏவுகணை 10 நிமிடங்களில் ஜப்பானுக்கு…!

அவசர அவசரமாக ஜப்பான் நாட்டின் அரசாங்கம் தங்கள் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கியுள்ளது. ஜப்பானின் குடிமக்களுக்கான பாதுகாப்பு வலைத்தளத்தில், வடகொரியா ஏவுகணை தாக்குதல் நடத்தினால், ஜப்பான் மக்கள் எல்லோரும் உறுதியான கொங்கிறீட் இடமாகப் பார்த்துப் பாதுகாப்பாக இருந்து கொள்ளுமாறும் ஜன்னல்களுக்கு அருகில் எவரும் நின்று கொண்டிருக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

(“வட கொரியாவின் ஏவுகணை 10 நிமிடங்களில் ஜப்பானுக்கு…!” தொடர்ந்து வாசிக்க…)

‘பெயர்’ மாற்றம் வேண்டாம்

வவுனியா வடக்கில் உள்ள புராதனக் கிராமங்களின் பெயர்களை எக்காரணம் கொண்டும் மாற்றவேண்டாமென, வவுனியா வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச செயலகத்தில் நேற்று (25) இடம்பெற்றது. இதன்போதே, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டது.

(“‘பெயர்’ மாற்றம் வேண்டாம்” தொடர்ந்து வாசிக்க…)

அன்றைய கதையும் இன்றைய நிஜமும்! பெற்றோரை நேசிக்கும் பிள்ளைகளே…வாசியுங்கள்!

(எஸ். ஹமீத்)

அன்றைய கதை இது:

ஓர் இளைஞன் ஒரு பெண்ணைக் காதலித்தான். ஆனால் அந்தப் பெண்ணோ இவனது காதலை மறுத்தாள். அவளுக்கு இளைஞன் விலையுயர்ந்த ஏராளமான பரிசுப் பொருட்களைக் கொண்டு வந்து கொடுத்தான். அப்போதும் அவள் இவனை விரும்பவில்லை. இறுதியாக இளைஞன் அந்தப் பெண்ணிடம் சொன்னான். ”என்னைக் காதலிப்பதற்கு நீ என்னதான் எதிர்பார்க்கிறாய்…? சொல்; எதுவாயினும் கொண்டு வந்து தருகிறேன்!”

(“அன்றைய கதையும் இன்றைய நிஜமும்! பெற்றோரை நேசிக்கும் பிள்ளைகளே…வாசியுங்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

”அமெரிக்கப் போர்க் கப்பலை ஒரே அடியில் மூழ்கடிப்போம்!” வட கொரியா சூளுரை!

”அமெரிக்க அணு சக்தி விமானம் தாங்கிக் கப்பலை ஒரே அடியில் மூழ்கடித்து அழிப்பதற்கு எங்களின் புரட்சிப் படைகள் தயாராகவே உள்ளன. பெரிய விலங்கு என்று எம்மாற் கூறப்படும் அதனை அழிப்பதன் மூலம் எங்கள் இராணுவத்தின் சக்தியை அமெரிக்காவுக்கு எடுத்துரைப்போம்!” என்று வடகொரியாவின் ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சியின் பத்திரிகையான நோடாங் ஷின்முன் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது செய்தியிற் கூறியிருக்கிறது.

(“”அமெரிக்கப் போர்க் கப்பலை ஒரே அடியில் மூழ்கடிப்போம்!” வட கொரியா சூளுரை!” தொடர்ந்து வாசிக்க…)