அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் 70 சதவீதமாக உயரும்

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைகளில் அடுத்த சில மாதங்களில்  அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள விலை உயர்வுகளுடன் நாட்டின்  முதன்மைப் பணவீக்கமானது 70 சதவீதமளவு உயர்வடையும் எனவும், குறைந்த வருமானங்களை பெரும் மக்களே  அதிகமாக பாதிக்கப்படப்போகின்றனர் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.