அன்று இந்தியாவும் இலங்கையும் இன்று ரஷ்யாவும் உக்ரேனும்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

ரஷ்யப் படைகள், பெப்ரவரி 24ஆம் திகதி அந்நாட்டுக்கு மேற்கேயுள்ள உக்ரேன் மீது படையெடுத்தது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், அந்தப் படையெடுப்பை ஆக்கிரமிப்பாகக் குறிப்பிடவில்லை. ‘இராணுவ நடவடிக்கை’ என்றே குறிப்பிட்டார்.