அரசமைப்பில் மக்கள் மய்யத் ‘திருத்தம்’ அவசியம்

(மொஹமட் பாதுஷா)

அரசமைப்பில் இன்னுமொரு திருத்தத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில், அரசாங்கம் துரிதகதியில் களமிறங்கி இருக்கின்றது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி நிறுவப்பட்டு, நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெறுவதற்கு முன்னரே, 19ஆவது திருத்தத்தை நீக்கும் உத்தேச 20ஆவது திருத்தச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது.