ஜெட் எயார்வேய்ஸ் விமான சேவைகள் நிறுத்தம் பயணிகள் பாதிப்பு

(ச. சந்திரசேகர்)
இந்தியாவின் இரண்டாவது மாபெரும் விமான சேவைகள் வழங்குநராகத் திகழ்ந்த ஜெட் எயார்வேய்ஸ், தனது விமானச் சேவைகளை, கடந்த வியாழக்கிழமை முதல் இடைநிறுத்தியுள்ளது. கடந்த டிசெம்பர் மாதம் முதல் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த இந்த விமான சேவையில், தமது பயணங்களை ஏற்கெனவே பதிவு செய்திருந்த பயணிகள் இந்தச் சேவை இடைநிறுத்தம் காரணமாக பெருமளவு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.