ஜெனீவா அழுத்தங்களுக்கு பயமின்றி முகம் கொடுப்போம் -ராஜபக்ஸ

நேற்று (27) மாத்தறையில் நடைபெற்ற கிராமத்துடன் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தியப் பெருங்கடலின் அதிகாரப் போராட்டத்துக்கு பலியாகமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் ஜெனீவா யோசனைக்கு இணை அனுசரணை வழங்கி, நாட்டின் இறையாண்மையை இல்லாமல் செய்ததாகவும் தற்போதைய அரசாங்கம் அந்த அனுசரணையிலிருந்து விலகியதால், ஜெனீவா இலங்கைக்கு எதிராக செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அதிகாரப் பிரிவினை என்று கூறி, மீண்டும் பிரிவினைவாதத்தைக் கொண்டு வந்து, நாட்டின் இறையாண்மையை காட்டிக்கொடுக்க தயாரில்லை என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.