பேரிடர் காலம்: இது கொண்டாட்டத்திற்குரிய காலம் அல்ல….

பறவைகளும், குருவிகளும் பூக்கும், காய்கும், பழம் தரும் இந்த மரங்களை கண்டு கூவியும், கீச்சிட்டும், கீதங்கள் பாடியும் கூதூகலிக்கும். கூடவே தாமும் குலாவி மரத்தில் கூடு கட்டி தமது இனவிருத்தியைப் பெருக்கி கொண்டாடிக் குதூகலிக்கும்.

மிருகங்களும் இந்த வசந்தத்தில் தமது நிறைவான உணவைப் பெற்று தமக்குள் செல்லச் சண்டைகள், கலவிகளில் ஈடுபட்டு மகிழும். கூட்டம் கூட்டமாக வனங்கள் தோறும் ஓடி ஆடித்திரியும். வேட்டையாடித் திரியும் தம்மை தற்காத்துக் கொள்ள பதுங்கும்.

இதில் சிறப்பாக மனித இனம் தனது பகுத்தறிவு மிகுதியினால் இன்னும் ஒருபடி மேலே போய் இயற்கையுடன் இயந்து விளையாடுதல், கூடுதல், குலாவுதல் என்பதற்கு அப்பால் தொழில் நுட்ப வளர்ச்சியினால் ஏற்பட்ட புதிய பொழு போக்குக்குளுக்குள் தம்மை இணைத்து மகிழந்திருப்பர். இதன் தொடர்ச்சியான குடும்பமாக மகிழ்ந்திருத்தல் என்பதையும் தொடர முற்படுவர்.
இதற்குள் தற்போதைய செயற்கை நுண்ணறிவும் (Artificial Intelligence) இணைந்து மனிதனை மேலும் கொண்டாடும் ஜீவராசியாக மாற்றியுள்ளது.

இதன் அடிப்படையில்தான் இன்றை பேரிடர் காலத்து கொண்டாடும் மனநிலைகளை பார்க்க வேண்டும். கொரனா வைரஸ் கொலை விரட்டிக்காலத்து அவசரகாலத்து வீட்டிற்குள் அடங்கு என்பது கொண்டாத்திற்குரியதா..? அல்லது இல்லையா…? என்பதை ஆராய வேண்டியிருக்கின்றது.

‘வீட்டில் இரு அதுவும் தனித்திரு” என்று உலகம் முழுவதும் பெரும்பாலும் பொதுக் கட்டளையாக இடப்பட்டிருக்கும் இந்த வேளையில் நாம் இதனைக் எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பதை பகுத்தறிவால் ஆய்து அறிந்தாலும் மனிதனுக்குள் இருக்கும் கொண்டாடும் மனப்பான்மை முதலில் ‘தனித்திரு” ஐ தவிர்க்க முயல்கின்றது.

‘தனிமையில்” இரு என்று அரசுகள் கூறவில்லை, கொரனாவும் கூறவில்லை. தனித்திருந்து தனிமையில் உறவுகளை அசை போட்ட காலங்களும்… காதலித்த தருணங்களும்….. அன்பை பாராட்டி நாட்களும்…..காதல் கடிதம், நட்புக் கடிதம், பாசக் கடிதம் என்று தபால்காரனை எதிர்பார்த்து கிடைத்ததும் ஒரு ரம்மியமான மகிழ்வான இடத்திலிருந்து சாவகசமாக அமர்ந்து அதனை தனிமையாகவும்…. பலருடனும் பகிர்ந்து மகிழ்ந்த வாழ்வியலை அனுபவித்தவர்கள் கண்டவர்கள் கேட்டவர்கள் நாங்கள்.

புதிய தலைமுறையும் ‘சமூக” இணைய வலைப்பின்னல் ஊடு தமது அன்பப் பரிமாற்றங்களை பேணி வருபவர்கள். இதன் ஒரு தொடர்ச்சியை இன்னும் சற்று அதிகமாக பேண வேண்டிய பேரிடர் காலம் இது. கொரனா வைரஸ் கொல்லி ஆதிகம் செலுத்தும் காலம் இது.

ஆனால் இன்று இருக்கும் வைரஸ் பரம்பலைத் தடுத்தல், மரணத்தை தடுத்தல் என்ற உலக தொற்று நோய் காலத்தில் நட்புக்களை உறவுகளை வீட்டிற்கு அழைத்து அல்லது நாம் அங்கு சென்று கூடிக் குலாவும் சந்தர்ப்பம் அல்ல இன்றைய கால கட்டம்.

நாம் இவ்வாறு கூடிக் குலாவினால் கொரனாவும் எம்முடன் சேர்ந்து கூடிக் குலாவிவிடும். அவ்வாறு செய்தால் எம்முடன் எமக்குத் தெரியாமலே தொற்றிக் கொண்டு பயணிக்கும் கொரனா 12 தடவை மட்டும் முழுமையான பாய்ச்சலை (Exponential Spread) ஒருவரிடமிருந்து பலருக்கு என்று பரம்பல் செய்தால் ஒரு இலட்சம் வரை பாயக் கூடிய அதி வேக பரம்பலை தன்னகத்தே உடையது என்று மருத்துவ விஞஞானம் கூறுகின்றது.

எனவே கிடைத்திருக்கும் ‘ஊரடங்கு” ஐ கொண்டாடும் தருணங்களாக மாற்றி கூடுதல், குலாவுதல், கும்மாளம் அடித்தல் என்று சமூக இடைவெளியை கடைப்பிடிக்காது என்று செயற்பட்டால் எந்த வகையிலும் கொரனா பரம்பலை தடுக்க முடியாது. என்ன காரணத்திற்காக வீட்டில் அடங்கு என்றார்களே அந்த நோக்கம் முற்று முழுதாக சிதறிகப்பட்டு இலட்சங்களை கடந்து கொடிகளை நோக்கி தொற்று நோய் பாயும் அவலம் ஏற்பட்டுவிடும். இதனைத் தொடரந்த மரணங்களும் நடைபெற்று விடும். எனவே இது கொண்டாடுவதற்குரிய கால கட்டம் அல்ல.

நாடுகள் தோறும் இந்தே ‘கட்டுபாடற்ற” போக்கில் இன்னும் ஒரு மாத காலம் சென்றால் இலட்சம் வரை இறப்புகள் நிகழலாம் நாட்டிற்கு நாடு என்று எதிர்வு கூறும் நிலையில் சமூக இடைவெளியைப் பேணுதலே இந்த மரணங்களை ஆயிரங்களுக்குள் அடக்குவதற்கான ஒரே வழிமுறையாக இருக்கின்றது.

எனவேதான் கூறுகின்றோம் இது கொண்டாடுவதற்குரிய தருணம் அல்ல என்று. கொண்டாடும் தருணங்களில் நோய் தொற்றாளர்களால் பரவி கொரனா வைரஸ் தான் இன்று அதிக ஆதிக்கம் செலுத்துவதை நாம் எல்லாநாடுகளிலும் அறிகின்றோம். அது அமெரிக்காவாக இருக்கலாம் இத்தாலி, பிரான்ஸ் இற்கு அப்பால் ஏன் குறைந்த எண்ணிக்கையுடைய இலங்கை, அருகில் அதிக சனத்தொகையுள்ள இந்தியாவிலும் ஓரே நிலமைதான்.

இதற்கு ஒரு படி மேலே சென்று பொது இடங்கள், வீட்டிற்கு வெளியில் சந்திக்கும் இடங்களில் கொண்டாடி மகிழ்ந்த மனித இனம் அதே பழக்கத்தில் இதனை இன்னமும் சிலர் தொடர முற்படுகின்றனர். நான்(ம்) ஒருவ(சில)ர் தானே என்று அசட்டையாக இருக்காதீர்கள்.

மீண்டும் கூறுகின்றென் 12 தடவை பரம்பல் ஒரு இலட்சம் வரையிலான தொற்று நோயாளிகளை ஏற்படுத்தும் வீரியப் பரம்பலை இந்த கொரனா கொணடிருப்பதினால் நாம் சிலர்… நான் ஒருவன்… என்ற அலட்சியம் பல இலட்சம் மனிதர்களுக்கு கொரனாவை வித்திடலாம். எனவே வீட்டிற்குள்ளேயோ அல்லது வெளியிடங்களிலேயே கொண்டாடும் மனிநிலையில் சந்திப்புகளை, செயற்பாடுகளை செய்யாதீர்கள்.

எம் ஒவ்வொருவரதும் சுய கட்டுப்பாடு இரண்டு தொடக்கம் மூன்று வாரங்கள் வரை தொடர்ந்தால் வரையறுக்கப்பட்ட பிரதேசத்தில் இதனைக் கட்டிற்குள் கொண்டு வர முடியும். அன்றேல் எமது உறவுகளையும் இழந்து நம் இயல்பு வாழ்வையும் தொலைத்து நீண்ட காலத்திற்கு ஒருவகை தனித்திருத்தலுக்குள் நாம் உளல வேண்டி வரலாம்.

இது பயப்படுத்து அல்லது அச்சத்iயூட்டும் வாசகங்கள் அல்ல மாறாக அவசியத்தை தெளிவுபடுத்தும் வாக்கியங்கள். அதற்கான எச்சரிக்கைகள். நாட்களையும் கடந்து வாரங்கள் ஆகி மாதங்களை நோக்கி வருடங்களாக நீடிக்கும் வாய்ப்புகளை நாம் தவிர்த்தே ஆகவேண்டும் ஆறறிவு படைத்த மனிதரகளாகிய எம்மால் இது முடியும். வீட்டிற்குள் அடங்கி இருந்தால்… தனித்திருந்தால்….

மேலே கூறிய விடயங்கள் உலகின் எல்லா நாட்டிற்கும் எல்லா வர்க்கத் தரப்பிழினருக்கும் பொதுவான விடயம்.

இதற்கு அப்பால் இந்த ஊரடங்கு வேளையில் வீட்டில் குடும்பமாக இருக்கும் நாம் மகிழ்வாக இருப்பதில் தவறுகள் இல்லை. ஆனால் உணவு விடயத்தில் ஒரு பேரிடர் காலத்து நடைமுறைகளை பின்பற்றுகின்றோமா..? என்றால் பெரும்பாலும் இல்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது.

இதில் பெரும்பாலும் மத்தியதர மேலதட்டு மக்கள் ‘மேலதிக” உணவுப் பண்டங்களை வீட்டில் ‘எச்சரிகையாக” என்று காரணங்களுடன் வாங்கிக் குவித்து வைத்துவிட்டு ஒருவகை கொண்டாட்ட உணவுப் பழக்க வழக்கங்களை மேற்கொண்டு வருகின்றோம். சமூக வலைத்தளங்களின் தகவல்கள். வாய் மொழித் தகவல்கள் இதனை நிறுவி நிற்கின்றன.

இதில் வேலையில்லாமல்… உடற் பயிற்சி இல்லாமல் சும்மா சாப்பிட்டு உடம்பை கெடுத்துக் கொள்ளுதல் என்பதற்கு அப்பால் பொருட்களின் பயன்பாட்டை கட்டுகுள் பாவித்தல் என்பதை தவிர்ப்பு நடைபெறுகின்றது. இதனால் பேரிடர் காலத்தில் பேணப்பட வேண்டிய ஒருவகை உணவுச் தேவைச் சமநிலையை குறைக்கும் செயற்பாடு ஏற்படுகின்றது.

இந்த சமநிலையை குழப்பும் செயற்பாடு உங்களை அறியாமலே நடைபெற்றுக் கொண்டும் இருக்கின்றது. இதனால் உணவுப் பண்டங்களின் தட்டுப்பாடு, விலையேற்றங்கள் ஏற்படுகின்றன. பேரிடர் காலத்து அடிப்படை உணவுப் பழக்கத்திற்கு மாறாக கொண்டாட்ட உணவுப் பழக்கத்தில் ஈடுபடும் நாம் இந்த உணவுப் பண்ட சமநிலையை குழப்புவதில் மறை முகத் தாக்கத்தை ஏற்படுத்தும் பங்காளிகளாக மாறுகின்றோம்.

மேலும் இந்த பொருட்களுக்கான விநியோகத்திற்காக அரசும் அது சார்ந்த நிறுவனங்களும் அதிகளவு சக்திகளை செலவிடவேண்டியும் வருகின்றது. கிருமியைக் கட்டுப்படுத்தல் என்பற்கான சக்தி ஏதோ ஒரு வகை சமநிலையில் இங்கு பரிமாற்றம் அடைய வேண்டிய நிலையையும் ஏற்படுகின்றது. எனவேதான் கூறுகின்றேன் ஒரு பேரிடருக்குரிய உணவுப்பழகங்களை நாம் மேற்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும் என்று.

இதனை சிறப்பாக எங்கள் குழந்தைகளுக்கு தெளிவுபடுத்தி நாம் செயற்படுத்த வேண்டும். இதன் அர்த்தம் மிகவும் அடிப்படையிலான உணவுகளை தவிர்த்து பட்டினியில் இருங்கள் என்பதல்ல. மாறாக குறியீட்டு அடிப்பiயில் கூறுவதாயின் ‘ஐஸ்கிறீமை” தவிருங்கள் என்பதேயாகும்.

இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தினக் கூலிகளாக வேலை செய்யும் பலர் உணவின்றி தவிக்கும் நிலைகள் ஏற்பட்டிருக்கின்றன. இன்னும் சில மாதங்கள் இது நீடித்தால் வளர்முக நாடுகளிலும் அரசு விநியோகிக்கும் உணவுப் பொருட்களுக்குள் சீவித்தல் என்று(புளுக்கொடியலை தவிர்த்து) வாழ வேண்டி வரலாம் இதற்கும் எம்மை தயார்படுத்தி; கொள்ள வேண்டும்.

பேரிடருக்கான உணவுப் பழக்கத்தை நாம் கடைபிடித்தால் நாம் நேரடியாக வறியவர்களுக்கு… இல்லாதவர்கு… கிடைகாதவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் ஏற்படும் உணவுச் சமநிலையால் உணவுப் பண்டங்களை அவர்களிடம் கொண்டு சேர்க்கும் சுழற்சிச் செயற்பாடு ஏற்படும்.

இதற்கும் அப்பால் எம் அயலவர், உறவினர், நட்பு வட்டாரம் என்று இல்லாதவர்களுக்கு எமது கொண்டாட்ட உணவுகளை தவிர்த்து உதவுதன் மூலம் அவர்களின் பசியைப் போக்கவும் முடியும். பசியினால் அதனைத் தேடி வீதிக்க வரும்நிலைமை உணவு இல்லாதவர்களுக்கு ஏற்படாவிட்hல் கொரனா வைஸை;சின் தாக்கும் பரம்பல் ஏற்படுவதற்கான வாய்புக்களும் குறைந்தே செல்லும்.

நாமும் நீண்ட நாட்கள் வீட்டிற்குள் அடைந்து கிடைத்தலில் இருந்து மீண்டு நமது இயல்பு வாழ்க்கையிற்கு திரும்பி மனிதனின் இயல்பான தன்மையான கொண்டாடும் வாழ்கையிற்குள் சீக்கிரம் வரமுடியும்.

எனவே நாம் சிந்திப்போம்… செயற்படுவோம்…. கொரனாவை கட்டிற்குள் கொண்டு வர கொண்டாடும் மனிநிலையை சிறிது காலம் ஒத்திவைப்போம். சிறப்பாக உணவை கொண்டாட்ட உணவாக இலாமல் அத்தியாவசிய அடிப்படை வகையிற்குள் சுருக்கிக் கொள்வோம்.