போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் உள்நாட்டு விசாரணையை முன்னெடுக்கவேண்டும்

(வரதராஜப்பெருமாள்)

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை கோருவதை காட்டிலும் உள்நாட்டு விசாரணைகளில் கவனம் செலுத்தவேண்டும் என்று வடக்கு,கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்  வரதராஜப்பெருமாள்வலியுறுத்தியுள்ளார். உள்நாட்டு விசாரணை ஒன்றில் பின்பற்றப்படும் முறையே சர்வதேச விசாரணை ஒன்றிலும் பின்பற்றப்படுகிறது. எனவே உள்நாட்டு விசாரணைகள் தொடர்பாக ஆராயவேண்டும் என்றும் அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். முதலில் உள்நாட்டு விசாரணைகள் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் சர்வதேச விசாரணை தொடர்பாக சிந்திக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை என்றக்கோரிக்கையை முன்வைப்பது, விவேகமற்ற செயல் என்றும் வரதராஜப்பெருமாள் கூறியுள்ளார்.