மரண அறிவித்தல்

(முன்னாள் ஈபிஆர்எல்எவ், பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கனடா பொறுப்பாளரும் இன்னாள் தமிழர் சமூக ஜனநாயக் கட்சி இன் ரொரன்ரோ பொறுப்பாளர் ஏ.கே.ஆனந்தன் அவர்களின் மனைவியின் தாயார் இவர்)

யாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் நவரட்ணம் அவர்கள் 27-02-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வல்லிபுரம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

நாகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற பத்மநாதன், புவனேஸ்வரி, கமலாவதி(இலங்கை), பஞ்சலிங்கம்(ஜெர்மனி), இராஜேஸ்வரி, சிவா, ஞானேஸ்வரி, லோகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பரமேஸ்வரி, பாலசிங்கம், காலஞ்சென்ற யோகராசா, பாலச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற தங்கராசா, நகுலேஸ்வரி, குமரேசன், சிவபாக்கியலட்சுமி, வெற்றிவேல், சீலி, ஆனந்தன், சிவராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-02-2017 திங்கட்கிழமை அன்று கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கமலாவதி — இலங்கை
தொலைபேசி: +94215101259
பஞ்சலிங்கம் — ஜெர்மனி
தொலைபேசி: +49775602849
சிவா — கனடா
செல்லிடப்பேசி: +14166692687
லோகேஸ்வரி — கனடா
செல்லிடப்பேசி: +16478473635