40 நிலையங்களுக்கு மீண்டும் அனுமதி

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர கியூஆர் கோட்டா முறைமைக்கு இணங்கத் தவறிய 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 12ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் குறித்த எரிபொருள் நிலையங்களின் சேவைகளுக்கு ஒருவாரத்துக்கு மாத்திரம் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் 11 ஆம் திகதியுடன் வாரம் நிறைவடையவுள்ளதால் 12ஆம் திகதி முதல் எரிபொருள் முற்பதிவுகள் வழங்கப்படும் என்று தெரியவருகிறது.