M உம் நான் உம்

(Saakaran)

மனோகரனும் நானும் மூர்த்தியும் நானும்……

2018 ஜுன் 02 மதியம் 12 மணி, இடம் கிளிநொச்சி. மல்லாவி சென்று வருவோம் ஆட்டோவில் என்ற முடிவுடன் பலராலும் அறியப்பட்ட எழுத்தாளருடன் நான். எம்(ன்) விருப்பப்படி குறிபிட்ட ஆட்டோவை அழைத்துவிட்டு கிளிநொச்சி அரசியல் பிரமுகர் ஒருவரின் அலுவலகத்தில் காத்திருப்பு. கிடைத்த இடைவெளியில் அரசியல் பிரமுகருடன் ஒரு சரியான மாற்றுத்தலமையை கட்டியமைக்க வேண்டும் என்பது தற்போதைய அவசியமான தேவையாக உள்ளது என்பது பற்றி கலந்துரையாடல். அவரின் செயற்பாடுகளுக்கு இடையில் எழுத்தாளரால் இவர்தான் கிளிநொச்சி பகுதியில் அடிமட்ட மக்களிடன் செல்வாக்கை பெற்றுவரும் அந்த அரசியல் பிரமுகருக்கு அடுத்த நிலையில் அவருடன் இணைந்து செயற்படுபவர் என்ற அறிமுகம்.

(“M உம் நான் உம்” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் போட்டிகளுக்கு மத்தியில் கிழக்குத் தமிழர் ஒன்றியம் எடுபடுமா?

(அதிரதன்)

பெரியமீன்களைப் பிடிப்பவர்கள் மத்தியில், சின்ன மீன்களையே பிடிக்க முடியாதவர்கள், தாம் பிடித்த சிறியசிறிய மீன்களை, பெரியமீன்கள் என்று சொல்லி, அரசியல் களத்தில் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். அரசியல் அநாதைகளாக தமிழர்கள் மாறிவிடக்கூடாது என்பதுதான், இனப்பிரச்சினைக்கான தோற்றுவாயாக இருந்திருக்கிறது. அந்த அடிப்படையில், இப்போதுள்ள அரசியல் போட்டிகளுக்கு மத்தியில், கிழக்கில் இருக்கின்ற அரசியல் கட்சிகளின் பிரிந்து நிற்கின்ற தன்மையானது, அதிகாரத்தைப் பெற்றுக்கொள்கின்ற நிலைப்பாட்டுக்கு எதிராக இருக்கிறது, என்ற சிந்தனை வளர்ந்து வருகிறது.

(“அரசியல் போட்டிகளுக்கு மத்தியில் கிழக்குத் தமிழர் ஒன்றியம் எடுபடுமா?” தொடர்ந்து வாசிக்க…)

தனித்து நிற்கும் வல்வெட்டித்துறை அம்மனும் சிவனும்….?

(Saakaran)

வாழையும் பனைமரமும் கிளை வைப்பதில்லை அதிலும் வாழை ஒரு முறை குலை போட்ட பின்பு தனது வாழ் நாளைக் நிறுத்திக் கொள்ள ஆரம்பிக்கும். ஆனாலும் அது பூப்பதிலும் காய்பதிலும் கனிவதிலும் பின் நிற்பதில்லை. கிளை வைத்த பனை மரம் வல்லிபுரக்கோவில் அருகில் என்னால் இன்று அதிசயமாக காணமுடிந்து. கூடவே வல்லிபுர ஆழவார் அருகில் இருக்கும் மணல் காடு என்ற கடற்கரைக் கிராமத்து குறிகாட்டியும் 1980 களுக்கு என்னை இழுத்து சென்றுவிட்டது. நீர்வேலியில் அமைந்து கிளாஸ் பக்ரறி இற்கு முன்னால் யாழ் பருத்துறை வீதியில் வைத்து நடாத்தப்பட்ட வங்கிப் பணப்பறிப்பு சம்பவமும் இதனைத் தொடர்ந்து பொலிசார் கொலையும் பணத்தை கையாளுவதில் ஏற்பட்ட முரண்பாடுகளும் தமிழ் நாட்டிற்கு பாதுகாப்பு காரணமாக செல்வதற்காக அன்று பிரபல்யமாக தேடப்பட்ட தங்கத்துரை குட்டிமணி தேவன் போன்றோர் படகு ஒன்றிற்காக மறைந்து காத்திருக்கையில் அவர்களின் பணப்பறிப்பு சகாவான பிரபாகரனால் காட்டிக் கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டிற்கு இன்று வரை ஆதாரபூர்வமான தடயங்கள் கிடைக்கவில்லை ஆனாலும் தொடர்ந்து 1983 ஜுலை வெலிக்கடைப் படுகொலைகளும் இதற்கு முன்னரான திருநெல்வேலி தபாற்பெட்டி சந்தி 13 இராணுவ கொலைச் சம்பவங்களை வைத்து எழுப்பப்பட்ட ஊகங்களும் இன்றுவரை விடைகாணாத கேள்விகளாகவே தொடர்கின்றன.

(“தனித்து நிற்கும் வல்வெட்டித்துறை அம்மனும் சிவனும்….?” தொடர்ந்து வாசிக்க…)

தாயகத்தின் பயணத்தில் சந்திப்பு……!

(Saakaran)

மரண வீடு ஒன்றிற்கு சகா ஒருவருடன் இணைந்து செல்லும் வாய்பை ஏற்படுத்திக் கொண்டேன். பொது வாழ்வில் இணைந்து 40 வருடத்திற்கு மேற்பட்ட பயணத்தில் ஒரே குறிக்கோளுக்காக ஒரே பாதையில் பயணித்த போது கந்தையா நாகம்மா வீட்டிற்கு பல தடவை 1980 களின் முற் கூற்றில் சென்று வந்த நினைவுகளுடன் தனது 98 வயதில் இயற்கை எய்திய அந்த தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் வாய்பை இழந்திருந்தாலும் அதற்கு மறு தினம் அவரின் இரு புதல்வர்களை சந்தித்து எமது அம்மாவின் இழப்பிற்கான எனது வருந்தலை தெரிவிக்க கட்டைப்பிராயில் இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இன்னாள் மாகாணசபை அமைச்சர் என்ற இருவரையும் சந்தித்த வாய்பு 28 வருடங்களின் பின்பு ஏற்பட்டது.

(“தாயகத்தின் பயணத்தில் சந்திப்பு……!” தொடர்ந்து வாசிக்க…)

தாயகத்தை நோக்கிய பயணத்தில் ஒரு இடைத் தங்கல்…. ‘Big Meals’

(Saakaran)

எயர் கனடா தனது வழமையான ‘அளவான’ உணவு உபசரிப்புடன் மும்பாய் நகரில் தாமதம் இன்றி தரையிறங்கியது. பம்பாய் என்றிருந்த நகரம் தற்போது மும்பாய் என்று மாறியதில் பல் தேசிய இனங்கள் வாழும் ‘ஜனநாயக’ நாட்டில் ஒரு மதத்தை முன்னிறுத்திய சிந்தனைப் போக்கும் காரணமாக இருந்தது என்பது வரலாறு. 16 ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வணிகத்திற்கு என்று வந்திறங்கிய போத்துக்கீசரால் 7 தீவுகளை இணைத்து பம்பாய் என்று பெயர் சூட்டப்பட்டதாக வரலாறு உண்டு. 1995 ஆண்டு ஆட்சிக்கு வந்த பால் தக்கரே இன் சிவ சேனா கட்சியினரால் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான சுதேசிகளின் அடையாளத்தை முன்னிறுத்த மும்பாய்தேவி என்ற இந்து கடவுகளை அடியொட்டிய இந்துத்துவா சிந்தனையின் வெளிபாடாக இந்த ‘ப’ ‘மு’ இனால் பிரிதியீடு செய்து பெயர் மாற்றபட்டது.

(“தாயகத்தை நோக்கிய பயணத்தில் ஒரு இடைத் தங்கல்…. ‘Big Meals’” தொடர்ந்து வாசிக்க…)

பரபரப்பை குறைத்துக் கொண்டு தூங்கும் நகரங்கள்….

(Saakaran)
1970 களின் பிற்கூறு வரை பரபரப்பாகவும் பாதுகாப்பாகவும் இயங்கி வந்தன எமது பொது மக்களுக்கான தூங்கா நகரங்கள். அது 1980 களின் முற்கூற்றில் ஆரம்பித்து 2009 மே மாதம் வரை போராளிகளினதும் இராணுவத்தின் தூங்கா நகரங்களாக மட்டும் தன்னை சுருக்கிக் கொண்டன. யுத்தம் காவு கொண்ட பொது மக்களுக்கான இந்தத் தூங்கா நகரங்கள் 2009 இற்கு பிறகு ஏற்பட்ட இராணுவ முகாங்களுக்கு இடையிலான ‘ஜனநாயகம்’ விழிப்படையச் செய்தது.
புலிகளின் ஏகபோகங்களுக்கு பயந்து அஞ்ஞாதவாசம் செய்தவர்கள் பலரும் அது பொது மக்கள் போராளிகள் சகோதர மொழி பேசம் சிங்கள் மக்கள் சக மொழிபேசும் முஸ்லீம்கள் மலையக மக்கள் என்று பலரும் வடக்கு கிழகிற்கு படையெடுத்தனர்.

(“பரபரப்பை குறைத்துக் கொண்டு தூங்கும் நகரங்கள்….” தொடர்ந்து வாசிக்க…)

தியாகிகள் தினம் 19.06.2018

மண்முனை மேற்கு பிரதேச சபை உறுப்பினர், தோழர் குகன் அவர்களின் வழிகாட்டலுடன் கிழக்கு மாகாண தோழர்களின் எற்பாட்டில் தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் 28 ஆவது தியாகிகள் தின வைபவம் மட்டக்களப்பு, கல்லாறு மெதடிஸ்த சமூக மண்டபத்தில் 19.06.2018 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் போராட்டத்தில் மரணித்த தோழர்கள் குணம், காளி ஆகியோரின் தங்கை விமலேஸ்வரி தீபம் ஏற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

(“தியாகிகள் தினம் 19.06.2018” தொடர்ந்து வாசிக்க…)

சாதி ஒடுக்குமுறையும் பெக்கோ தேரிழுப்பும்

(எஸ். கனகரத்தினம்)

சாதி ஒடுக்குமுறையை நவீன வடிவத்தில் முன்னெடுத்துச் செல்வதில் தென்மராட்சி வாழ் சாதிமான்களும், அவர்களை மறைமுகமாக வழிநடாத்திச் செல்லும் அரசியல் வாதிகளும் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளனர். அண்மையில் வரணி கண்ணகி அம்மன் ஆலய உற்சவத்தின் போது ஒடுக்கப்பட்ட மக்களும் வடம் பிடித்து தேரை இளுக்க முஸ்தீபு மேற்கொண்டு வருவதாக அறிந்த ஆலய நிர்வாகிகளும், சாதிமான்களும் இணைந்து இத்தகைய நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் பொருட்டு பெக்கோ (ஜேசிபி) இயந்திரத்தின் மூலம் தேரை இளுத்துச் சென்ற செய்தி பத்திரிகைகள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வெளிவந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

(“சாதி ஒடுக்குமுறையும் பெக்கோ தேரிழுப்பும்” தொடர்ந்து வாசிக்க…)