பிரதமர் ஹரிணி அமரசூரிய. கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு நேற்று (01) திடீர் விஜயம் மேற்கொண்டு, புத்தகங்களை பார்வையிட்டதுடன், விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

The Formula
கடந்த ஆண்டில் இலங்கை 5 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளபோதிலும், நாட்டின் மக்கள் தொகை 0.7 சதவீதத்தால் குறைந்துள்ளதாக மத்திய வங்கி அண்மையில் வெளியிட்ட ‘இலங்கையின் சமூக பொருளாதாரத் தரவு அறிக்கை’ சுட்டிக்காட்டுகிறது. கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் நாட்டின் மக்கள் தொகை 21.75 மில்லியனாக மதிப்பிடப்பட்டிருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லலித் – குகன் வழக்கு தொடர்பில் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜராகிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று நிகழ்நிலையில் சாட்சியமளித்தார். மேலதிக சாட்சி விசாரணைகள் நவம்பர் 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ தரப்பு சட்டத்தரணி சுரங்க பெரேராவும் பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி நூவான் போபகேவும் கருத்து தெரிவித்தனர்.