இயக்குநர் ம்ருணாள் சென் மரணமடைந்துவிட்டார்.

2018.
ஆண்டின் கடைசி நாள்.

புத்தாண்டைப் பார்க்க விரும்பவில்லை அவர்.

எல்லா நேரிய கலைஞர்களையும்போலவே-
குமைந்த மனோநிலையில்
இருந்திருக்கக்கூடும் .

இல்லாமலிருந்திருந்தால்தான் வியப்பு.

இடதுசாரிச் சிந்தனைகளைத் திரையில் கோர்த்த இயக்குநர் ம்ருணாள் சென்
நேற்று மரணமடைந்துவிட்டார்.

தரமான இந்திய சினமா என்றாலே
சத்யஜித் ரே, ம்ருணாள்சென் என்று
எவர் வாயும் முணுமுணுக்கும் வரலாற்றை நிறுவியவர்களுள் ரெண்டாமவரும் விடைபெற்றுச் சென்றார்.

கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றி
மேற்கு வங்க சமூகத்திலும், அரசியலிலும்
மார்க்சியத் தாக்கத்தை ஏற்படுத்திய கலைஞன்…

உலக சினமாவின் ஓர் இந்திய முகம்…

வங்காளம்,ஹிந்தி, தெலுங்கு, ஒடிசா மொழிகளில் ஏறக்குறைய 30 திரைப்படங்கள்…

மேலும் குறும்படங்கள், ஆவணப்படங்கள்…

சிறந்த திரைக்கதை – சிறந்த படம் – சிறந்த இயக்கம் என
18 தேசிய விருதுகளைப் பெற்ற திரைப்படங்கள்….

தாதாசாகேப் பால்கே,பத்மபூஷண்,
சோவியத்நாட்டின் நேரு சோவியத் விருதுகளுடன்…….

பிலிம்பேர் விருதுகள்….
1975 மாஸ்கோ திரைப்பட விழா விருது…
1979 மாஸ்கோ திரைப்பட விழா விருது…
1977 கர்லோவை வரை திரை விழா சிறப்பு விருது…
1979 பெர்லின் Interfilm விருது…
1981 பெர்லின் Interfilm விருது…
1981 பெர்லின் – Grand Jury விருது…
1983 கேன்ஸ் திரைப்பட விழா விருது…
1983 வல்லாடோலிட் Gold spike விருது…
1984 சிகாகோ திரைப்பட விழா விருது…
1984 மான்ட்ரியல் திரைப்பட விழா விருது…
1989 வெனிஸ் திரைப்பட விழா விருது…
2002 கெய்ரோ திரைப்பட விழா விருது…

– என்று பெருமைகள் சூழ்ந்த பெருமகன்.

2002இல் வெளியான அவரது
கடைசித் திரைப்படத்துக்கு
இப்படிப் பேர் வைத்தார் :

‘இது என் பூமி’.

அது நிலைபெறும். ஆமாம்.

வருத்தமுடன் அல்ல.
வாழ்த்தி வழியனுப்புகிறோம்
தோழர் ம்ருணாள்.

(Rathan Chandrasekar)

இந்திய அரசியலுக்கு 2019 எப்படி அமையும்?

(எம். காசிநாதன்)

புத்தாண்டு 2019 நாளை பிறக்கப் போகிறது. இந்தியாவில், புதிய ஆட்சியை மத்தியில் அமைக்க, காங்கிரஸ் கட்சியின் தலைமையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும், இருக்கின்ற ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள, பிரதமராக இருக்கும் நரேந்திரமோடியும் பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் அமித்ஷாவும் ‘பம்பரமாக’ இயங்கத் தொடங்கி விட்டார்கள். (“இந்திய அரசியலுக்கு 2019 எப்படி அமையும்?” தொடர்ந்து வாசிக்க…)

அருமைத் தோழர் நல்லக்கண்ணு

1940களில் ஒரு வடமாநில இளைஞன் ஆங்கிலேய நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான்.

சுதந்திரம் கேட்டுப் போராடினாயா “நீதிபதி கேட்கிறார்.”

இல்லை,

நான் போராட வில்லை என்னை விட்டுவிடுங்கள் என்று சொன்னவன் அத்தோடு நிற்கவில்லை, இவர்கள்தான் போராடினார்கள் என்று போராளிகளையும் காட்டிக்கொடுக்கிறார்! (“அருமைத் தோழர் நல்லக்கண்ணு” தொடர்ந்து வாசிக்க…)

2018: கடந்து போகும் காலம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இன்னோர் ஆண்டு எம்மைக் கடந்து போகிறது. முந்தைய ஆண்டுகளைப் போலவே, இவ்வாண்டும் ஏராளமான அல்லல்களையும் ஆச்சரியங்களையும் தந்துவிட்டு அப்பால் நகர்கிறது. இதன் தாக்கம், இனிவரும் ஆண்டுகளிலும் செல்வாக்குச் செலுத்தும் என்பதில் ஐயமில்லை. இது, இவ்வாண்டை எவ்வாறு நினைவுகூருவது என்ற வினாவை எழுப்புகிறது. (“2018: கடந்து போகும் காலம்” தொடர்ந்து வாசிக்க…)

தோழர், அய்யா நல்லகண்ணு

(தோழர்.சி.மகேந்திரன்)
தோழர், அய்யா நல்லகண்ணு அவர்கள் 94 வயதில் அடியெடுத்து வைக்கிறார் டிசம்பர் 26ல். சென்ற நூற்றாண்டில் முக்கால் பகுதியை நிறைவு செய்து, இந்த நூற்றாண்டின் முன் பகுதியையும் விரைந்து, கடந்து, வந்திருக்கிறார். காந்தியடிகளை நேரில் பார்த்தவர்கள்,
இந்திய சுதந்திர போராட்ட எழுச்சியை கண்ணால் கண்டவர்கள், இந்தியா ஒரு சமத்துவ நாடாக மாறவேண்டும் என்பதற்காக போராடி கொடிய சித்திரவதையை சந்தித்து, ஆயுள் தண்டனை பெற்று, 9ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்து விடுதலைப் பெற்றவர் யாராவது உண்டென்றால் அது தோழர் ஒருவராக தான் இருக்க முடியும். (“தோழர், அய்யா நல்லகண்ணு” தொடர்ந்து வாசிக்க…)

கீரை

(கருணாகரன்)

“சங்கர் மாரடைப்பினால் இறந்து விட்டார்” என்று காலையில் ஒரு நண்பர் . குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். இப்போதுதானே 2.0 என்று ரஜினிகாந் நடித்த புதிய படத்தை வெளியிட்டார் சங்கர். அதற்குள் என்ன இப்படியொரு அவசரம்? என்று நீங்கள் யோசிக்கலாம். நான் கூட அப்படித்தான் எண்ணினேன். இறந்தது சினமா நெறியாளர் சங்கரல்ல. கிளிநொச்சியில் தனியார் நிறுவனமொன்றை இயக்கி வந்த சங்கரே. (“கீரை” தொடர்ந்து வாசிக்க…)

ஓயும் மோடி அலை; பாயும் ராகுல் அலை: 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் புள்ளிவிவரங்கள் தரும் செய்தி

திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததை மனிதநேய மக்கள் கட்சி வழிமொழிகிறது. மு.க. ஸ்டாலின் தெளிவான ஒரு பார்வையுடன் இந்த முன்மொழிவைச் செய்துள்ளார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தல்களின் முடிவுகள் மோடி அலை ஓய்ந்து ராகுல் அலை வேகமாகப் பாயத் தொடங்கியுள்ளது என்பதையே காட்டுகின்றன. (“ஓயும் மோடி அலை; பாயும் ராகுல் அலை: 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் புள்ளிவிவரங்கள் தரும் செய்தி” தொடர்ந்து வாசிக்க…)

சயந்தன் கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றி மனந்திறந்து விளக்கமாக பேசியிருப்பது மிகமுக்கியமான வரலாற்று நிகழ்வு.

பத்திரிகையாளர்கள் பேசவேண்டிய விடயத்தை ஒரு அரசியல்வாதி பேசியிருப்பது மெச்சத்தக்க நிகழ்வு. எதிரிகளையும் துரோகிகளையும் கொல்லாது மிரட்டல், வசதிவாய்ப்பு மற்றும் பணம் அல்லது Blackmail என்கிற பணையவைப்பு/பொறிவைப்பு மூலம் தங்களுக்கு வேலைசெய்பவர்களாக மாற்றும் தந்திரம் ஒரு பழைய ராசதந்திரம் எனினும் இது ஸ்ராலின்கால சோவியத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்ட உத்தி. புலிகள் இந்த உத்தியை பயன்படுத்த காரணமாக இருந்தவர் புலிகளின் பல சகுனிவேலைகளுக்கு காரணமாக இருந்த அன்ரன் பாலசிங்கம்தான். (“சயந்தன் கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றி மனந்திறந்து விளக்கமாக பேசியிருப்பது மிகமுக்கியமான வரலாற்று நிகழ்வு.” தொடர்ந்து வாசிக்க…)

மழை வெள்ளமும் வான் பாய்தலும்

(Saakaran)

நேற்றைய தினம் வன்னி என்று பலராலும் அழைக்கப்படும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் 24 மணி நேரத்திற்குள் பெய்து முடித்த மழை மாங்குளத்தில் அதி உச்சமாக பெய்து சாதனைகளுடன் வேதனைகளையும் 2009 யுத்தத்தில் இருந்து மீண்டுவரும் மக்களை ஆழத்தியுள்ளது. அனைத்து குளங்களும் குளங்களின் கதவுகள் திறக்கப்பட்ட நிலையிலும் தமது அணைக்கட்டிற்கு மேலாக வெள்ளம் கரைபுரண்டோடி மக்கள் குடியிருப்புகள், வயல்கள், கால்நடைகள், வீதிகள் என யாவற்றையும் வெள்ளத்திற்குள் ஆழ்த்தியுள்ளது…. அழித்துள்ளது.

(“மழை வெள்ளமும் வான் பாய்தலும்” தொடர்ந்து வாசிக்க…)

இரணைமடுக் குளத்தையும், அதன் நீர் முகாமைத்துவம் பற்றியும் செய்திகளையும், ஆக்கங்களையும் பதிவிடுவோரின் கவனத்திற்கு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2000 மில்லியன் கடன் நிதி உதவியில் 34அடியாக இருந்த குளத்தை 36அடியாக உயர்த்தி உயர்தர தொழிநுட்பத்தில் பலப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக தரப்பட்டுள்ள குளத்தை துறைசார் நிபுணத்துவம் மிக்க பொறியியலாளர்கள் கண்காணித்தும் பராமரித்தும் வருகிறார்கள். (“இரணைமடுக் குளத்தையும், அதன் நீர் முகாமைத்துவம் பற்றியும் செய்திகளையும், ஆக்கங்களையும் பதிவிடுவோரின் கவனத்திற்கு” தொடர்ந்து வாசிக்க…)