புதுடெல்லியில் ஊரடங்கு நீடிக்கும் அபாயம்

புதுடெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, அதைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கை மேலும் ஒருவாரம் நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான முறையான அறிவிப்பு இன்று வெளியாக லாம் எனத் தெரிகிறது.

‘பதியூதீன்களை இன்று அதிகாலை கைது செய்தது ஏன்?’

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் மற்றும் அவருடைய சகோதரர்களில் ஒருவரான ரியாஜ் பதியூதீன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டது ஏன்? என்பது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, விளக்கப்படுத்தியுள்ளார்.

பொகவந்தலாவையில் பதற்றம்

பொகவந்தலாவை லொய்னோன் தோட்டத்தில், தொழிலாளர்கள் முன்னெடுக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

“இம்முறை அதிகமான இளைஞர், யுவதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றிவிட்டது” என சுகாதார சேவைகள், பணிப்பாளர் நாயகமான வைத்தியர் அசேலா குணவர்தன ​தெரிவித்தார்.அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற, ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘ஒக்சிஜனை திருடு, பிச்சை எடு, கடனுக்கு வாங்கு’

பிச்சை எடுத்தோ, திருடியோ, கடனுக்கோ ஒக்சிஜனை வாங்குங்கள் என தெரிவித்துள்ள புதுடெல்லி உச்ச நீதிமன்றம், ஆனால் உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு ஒக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

‘சீனாவின் பட்டு மற்றும் பாதை ஒப்பந்தங்ளை இரத்துச் செய்தோம்’

வெளிநாட்டு உறவுகளில் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதற்காகவே, விக்டோரியா மாநிலத்தித்துக்கும் சீனாவுக்குமிடையிலான பட்டு மற்றும் பாதை முன்னெடுப்பின் இரண்டு ஒப்பந்தங்களை இரத்துச் செய்யும் முடிவு ஒன்று எடுக்கப்பட்டதாகத் தெரிவித்த அவுஸ்திரேலியா, எந்தவொரு நாட்டையும் இலக்கு வைக்கவில்லையல்ல எனக் கூறியுள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

எதிர்வரும் 3 வாரங்கள் மிகவும் அவதானமிக்கவை என, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கடந்த சில நாள்களாக மக்கள் செயற்பட்ட விதத்தால், நாட்டில் மீண்டும் கொரொனா வேகமாகப் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் ​அவர் தெரிவித்துள்ளார். எனவே, தொடர்ச்சியான விடுமுறைகளைக் கொண்ட வார இறுதி நாள்களில் சுற்றுலா செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பல்வேறு நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் என்பவற்றை ஏற்பாடு செய்வதையும் தவிர்க்குமாறும் இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்.துணைவேந்தருக்கு திடீர் மாரடைப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். சிறீ சற்குணராசா மாரடைப்பினால் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கியூபாவுக்கு புதிய தலைவர்

கியூபாவின் மிகவும் அதிகாரமிக்க பதவியான கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது செயலாளராக மிகேல் டயஸ்-கனல் பெயரிடப்பட்டுள்ளார். அந்தவகையில், 1959ஆம் ஆண்டு புரட்சிக்குப் பின்னர் கஸ்ரோவின் பெயரில்லாத முதலாமவராக கியூபாவை டயஸ்-கனல் ஆளவுள்ளார். பரவலாக எதிர்பார்க்கப்பட்ட குறித்த நகர்வானது நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.