இராஜினாமா கடிதத்தை அனுப்பினார் ரணில்; மாலை விசேட உரை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பதவி விலகல் கடிதமானது, ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், இன்று பிற்பகல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனிச்சிங்கள தலைவர் கிடைத்திருப்பதால் பொதுபலசேனா அமைப்பை கலைத்துவிடுவோம் – ஞானசார

ஜனாதிபதி தேர்தலின் மூலம் நாட்டுக்கு தனிச்சிங்கள தலைவரொருவர் கிடைத்திருக்கிறார்.இதுவரை காலமும் தந்தையின்றி வாழ்ந்த பிள்ளைகள் போல் இருந்த சிங்கள இனத்தவர்களுக்கு ஒரு சிறந்த ஆண்மகன் தந்தையாக கிடைத்துள்ளார் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

கடமை பொறுப்பேற்றார் புதிய ஜனாதிபதி

புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (19) முற்பகல் 10.30 மணிக்கு இருந்த சுபநேரத்தில், ஜனாதிபதிக்கான தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

காபந்து அரசாங்கத்தில் தினேஷே பிரதமர்?

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7ஆவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷ பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ள நிலையில், அவர் தலைமையில் அமையவுள்ள காபந்து அரசாங்கத்தின் பிரதமராக, தினேஷ் குணவர்தன நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கருணாவின் கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆ​ரம்பம்

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூரத்தி முரளிதரன் (கருணா), முஸ்லிம் மக்களை இலக்காகக் ​கொண்டு தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென, பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘தமிழ், முஸ்லிம் மக்களிடம் இருந்து எதிர்பார்த்தளவு பலன்கள் கிடைக்கவில்லை’

இந்த நாட்டில் பெரும்பான்மை, பௌத்த மக்களின் வாக்குகளால் மாத்திரம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யமுடியும் என, தான் ஆரம்பித்திலிருந்து கருதினாலும், இலங்கையின் தமிழ், முஸ்லிம் மக்களிடம் எமது வெற்றியில் பங்கேற்குமாறு கோரிக்கை விடுத்திருந்தேன்.

இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கு ராஜபக்ச மகன் நமல் வெளியிட்டுள்ள அதிமுக்கிய தகவல்

தமிழ்பேசும் மக்கள் எங்கள் பங்காளிகள் என்பதை நாங்கள் உறுதிப்படுத்துவோம் என நமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கு பின்னர் மஹிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்சே வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எமது ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன், நாட்டின் அபிவிருத்தி மற்றும் ஏனைய விடயங்களில், தமிழ்பேசும் மக்களாகிய நீங்களும் உரித்துடைய பங்காளிகள் என்பதை எங்கள் கட்சியும் மற்றும் புதிய ஜனாதிபதி திரு. கோத்தபாய அவர்களும் உறுதிப்படுத்துவோம்.

புதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை – மகிந்த அறிவிப்பு

அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தினால் ஆட்சிமுறையில் கொண்டுவரப்பட்ட சிக்கல்கள் காரணமாக முன்னைய சகல ஜனாதிபதி தேர்தல்களையும் விட தற்போது நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தல் வேறுபட்டதாக இருந்தது என்று கூறியிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ச, புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டபிறகு அந்த திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து தங்களது உடனடி செயற்திட்டத்தை வகுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.

இன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்!

தனது வெற்றிக்கு வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கை ஜனநாயக குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அத்துடன் இன மற்றும் மத வேறுபாடுகள் இன்றி நாட்டில் வாழும் அனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

கோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் – சி.வி.விக்கினேஸ்வரன்

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோத்தாபய ராஜபக்சவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேநேரம் அவர் தமது பொறுப்புக்களை உணர்ந்து சிறப்பான ஒரு ஆட்சிக்கு வித்திடுவார் என்று நம்புகின்றேன்.