‘ஈராக், சிரியா பாணியில் இலங்கையில் தாக்குதல் திட்டம்’

ஈராக், சிரியா நாடுகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களைப் போன்று இலங்கையிலும் அதிரடித் தாக்குதல்களை நடத்த. தீவிரவாதிகள் திட்டமிட்ட அதிர்ச்சித் தகவலொன்று வெளியாகியுள்ளது. இலங்கை வந்த அமெரிக்க பாதுகாப்பு நிபுணர்கள் நடத்திய புலனாய்வு விசாரணைகளில். இது தொடர்பான தகவல்கள் வெளிவந்தள்ளதாக. இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இரக்கண்டியில் பல ஆயுதங்கள் மீட்பு

திருகோணமலை – இரக்கண்டி பகுதியில் இன்று (27) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன என, கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இவற்றை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து, மோட்டார் சைக்கிளொன்றும் ஒவ்வொன்றும் 130 கிலோகிராம் எடையுடைய, வெடிகுண்டு குச்சிகள் 51, 27 அடியைக் கொண்ட பாதுகாப்புக் கம்பிகள், 215 டெட்டோனேட்டர்கள் என்பவை மீட்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ​கடற்படையினர் தெரிவித்தனர்.

நிந்தவூரில் தற்கொலை அங்கிகள் மீட்பு

அம்பாறை – நிந்தவூர் பகுதியில், சற்றுமன்னர் வீடொன்றில் இருந்து தற்கொலை அங்கிகள், வெடிபொருள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன என, பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின் போதே, இவை மீட்கப்பட்டுள்ளன. அத்தோடு, பதிவு செய்யப்படாத வாகனமொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகரசபை உறுப்பினர் சீ.ஐ.டியிடம் ஒப்படைப்பு

கம்பனித்தெரு பள்ளிவாசலில் இருந்து, 46 வாள்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபையின், ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். உயிரித்த ஞாயிறு தினத்தன்று, கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட தற்கொலைகுண்டுத் தாக்குதல் சம்பவத்தையடுத்து, பொலிஸார் நடத்திய விஷேட தேடுதலின் போதே, இந்த வாள்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்

கிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர் தங்கும் விடுதிகளை குறிவைத்தும் இஸ்லாம் மதவெறியர்களால் பாரியளவிலான மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. தமிழர்,சிங்களவர், வெளிநாட்டவர் என நூற்றுக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

கல்முனை – சவலக்கடை, சம்மாந்துறையில் ஊரடங்கு

கல்முனை – சவலக்கடை மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களுக்கு, மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில், பயங்கரவாதிகள் தங்கியிருப்பதாகக் கூறப்படும் வீடொன்றை, இராணுவத்தினர், பொலிஸ் அதிரடிப்படையினர் சுற்றிவளைத்த போது, பயங்கரவாதிகளுக்கும் படையினருக்கும் இடையில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. அதனையடுத்து, அங்கு மூன்று பாரிய வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அங்கு, தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாமெனத் தெரிவிக்கப்படுகிறது.

வாரணாசியில் பிரியங்கா இல்லை

உத்தரப் பிரதேசம், வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியிடவில்லை. பிரியங்கா அரசியலுக்கு வருவதாக, முறைப்படி அறிவித்த உடனேயே, மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவியது.

’2 வருடங்களுக்கு முன்னரே சஹ்ரானில் மாற்றம் ஏற்பட்டது’

தனது அண்ணனான சஹ்ரான் ஹஸீம், கடந்த 2017ஆம் ஆண்டில், அவரது மனைவி, பிள்ளைகளுடன் வாழ்ந்தார் என்றும் அவ்வாண்டில் அவர், முஸ்லிம் குழுக்களுடன் இணைந்துச் செயற்பட்டு வருகின்றார் என்பது தொடர்பில் தெரியவந்ததாகவும், சஹ்ரானின் சகோதரி, பீ.பீ.சி உலகச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

தெமட்டகொடயில் FBI சோதனை

தெமட்டகொட பிரதேசத்தில், கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக, அமெரிக்காவின் எஃப்.பீ.ஐ விசாரணைப் பிரிவினர், இன்று (26) மாலை, குறித்த பகுதிக்குச் சென்றனர். குறித்த குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் சுமார் 30 நிமிடங்கள் வரையில், அவ்விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அர்ப்பணிப்பும் பிரக்ஞையும் ஜனநாயக மனிதாபிமான சமத்துவ எண்ணமும் கொண்ட தலைமைத்துவத்தின் வரலாற்று அவசியம்

(தோழர் சுகு)

உயிர்த்த ஞாயிறில் மானிடத்தின் மீது வீசப்பட்ட மரண வாடை.
எழிலார்ந்த வாழ்வின் ஜோதியை ஏற்றுவோம்!!!

இந்த பயங்கரவாதிகள் மனித குலத்தின் எழிலார்ந்த அனைத்தையும் வெறுப்பவர்கள்.
வாழ்வின் மீது வன்மமும் குரோதமும் கொண்டவர்கள்.

பண்பாடு நாகரிகம் மனித விழுமியம் அறம் என இருப்பவை அனைத்தையும் அழித்து விட துடிப்பவர்கள்.

இதுவரை கால மனித குலத்தின் உயரிய பெறுமானங்கள் அனைத்தையும் வெறுப்பவர்கள்.
குழந்தைகளின் சிரிப்பு மனித குல பிரவாகமான நம்பிக்கை நாட்களை சிதிலமாக்குபவர்கள்.
சக வாழ்வு மானிடத்தின் நம்பிக்கையான எதிர்காலம் என்பதெல்லாம் இவர்களுக்கு வேண்டாத சொற்கள்.