‘ஈராக், சிரியா பாணியில் இலங்கையில் தாக்குதல் திட்டம்’

ட்ரோன் கெமராக்களில் கைக்குண்டுகளைப் பொருத்தி. ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்றை அனுப்பித் தாக்குதல்களை நடத்த இவர்கள் திட்டம் வைத்திருந்ததாக. அந்த இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டள்ளது.

முக்கிய பிரமுகர்களை இலக்கு வைத்து அல்லது முக்கிய கேந்திர நிலையங்களை இலக்குவைத்துத் தாக்குதல் நடத்த இவர்கள் திட்டம் வகுத்திருந்ததாகத் தெரிகிறது. நேற்று சம்மாந்துறையில் மீட்கப்பட்ட ட்ரோன் கெமராக்கள் மூலம். கிழக்கில் தாக்குதல் நடத்த வைத்திருந்த திட்டம் அம்பலமாகியுள்ளதாகக் கூறுப்படகிறது.

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் அமைப்பு நடத்திய இப்படியான தாக்குதல்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தன. அப்படியான தாக்குதல்களை எதிர்கொள்வது அல்லது திடீரென முறியடிப்பது பாதுகாப்பு தரப்புக்கும் சிரமமானதென சொல்லப்படுகிறது.

இலங்கை வந்து விசாரணைகளுக்கு உதவிவரும் அமெரிக்க நிபுணர்கள் செய்மதி படங்களின் உதவிகளுடன் நவீன தொழிநுட்ப அடைப்படையில் விசாரணைகளை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

சக்திவாய்ந்த வகையில் தயாரிக்கப்பட்ட குண்டுகளை தயாரித்துக் கொடுக்க வெளிநாட்டில் இருந்து யாரும் வந்துபோனார்களா என்பதை பற்றியும் விசாரணை நடக்கிறது.

குண்டு தயாரிக்கப்பட்ட வெல்லம்பிட்டி வீடு மற்றும் தற்கொலைதாரிகள் பாவித்த 130 சிம் கார்ட்டுகள் குறித்து விசாரணைகள் நடக்கின்றன.