வாரணாசியில் பிரியங்கா இல்லை

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அமேதி தொகுதி அல்லது ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாவின் ரேபரேலி தொகுதியில், பிரியங்கா போட்டியிடவுள்ளதாகக் கூறப்பட்டது. இது பற்றி பிரியங்காவிடம் வினவியிருந்தபோது, “ஏன் வாரணாசி தொகுதியில் போட்டியிட கூடாதா” என்றுக் கேட்டிருந்தார்.

பிரியங்கா கூறியது உண்மை என்பது போல், காங்கிரஸ் தலைமையும் வாரணாசி தொகுதிக்கு மட்டும் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்து வந்தது. இதனால், வாரணாசியில் தான் பிரியங்கா போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக அனைவரும் எதிர்பாரத்திருந்தனர்.

இந்நிலையில், எதிர்பாராத விதமாக வாரணாசி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை, காங்கிரஸ் தலைமை, நேற்று (25) அறிவித்தது. வாரணாசியில் மோடியை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில், அஜய் ராய் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியிடவில்லை என்பது உறுதியாகியுள்ளது.