இலங்கையின் இடதுசாரிகளும் பிரதிபலிப்புகளும்

(Ahilan Kadirgamar)
சிவப்புக் குறிப்புகள்

சுதந்திர இலங்கையின் வயது, 70 ஆண்டுகளை அடைந்துள்ள நிலையில், சுய விமர்சனங்களின்றி, தன்னைத் தானே அது மீளக்கட்டியெழுப்ப முடியாது. சிங்கள – பௌத்த தேசியவாதம், தமிழ்த் தேசியவாதம் என, இரண்டு சக்திகளுக்கு நடுவில் நாம் வாழும் நிலையில், அவ்வாறான சுய விமர்சனத்துக்கான தூண்டல், எங்கிருந்து வரும்? தமிழ் இடதுசாரிகளின் பிரதிபலிப்பான எழுத்துகள் எழுச்சியடைவதைக் கண்டு நான், சிறிய நம்பிக்கையொன்றைக் காண்கிறேன்.

(“இலங்கையின் இடதுசாரிகளும் பிரதிபலிப்புகளும்” தொடர்ந்து வாசிக்க…)

பாலா பாலச்சந்திரன்

பாலா என அ‌றியப்பட்ட சண்முகராஜா பாலச்சந்திரன் இன்று தனது 62ஆவது வயதில் ரொறன்ரோவில் காலமானார். ஒரு மேடை பாடகராகவும் ஒலிபரப்பாளராகவும் ரொறன‌்ரோவில் செயல்பட்டு வந்தவர் சண்முகராஜா பாலச்சந்திரன். அவருக்கு எமது அஞ்சலி. அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்கள்

புலிகளின் துணுக்காய் வதைமுகாம்.

சுமார் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை அடைத்து வைத்து
அவர்கள் மீது கொடிய சித்திரவதைகளை மேற்கொண்டு
ஏறத்தாழ இhண்டாயிரம் தமிர்களைக் கொலை செய்த புலிகளின் பாரிய சிறைக் கூடம். 28 வருடங்களுக்குப் பின்னர் அந்த இடம். புலிகளால் ஈரக்கமின்றி கொன்று எரிக்கப்பட்ட எமது மக்களுக்கு இங்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட வேண்டும்.

சர்வாதிகாரி பொல்பொட்டின் சித்திரவதை முகாம்களையே முறியடித்த புலிகளின் துணுக்காய் சித்திரவதை முகாம். இங்கு சிறை வைக்கப்பட்டிருந்த தமிழர்கள் 5000 பேர்புலிகளினால் கொன்று புதைக்கப்பட்டனர். இங்கு சிறைவைக்கப்பட்டு தெய்வாதீனமாக உயிர் தப்பிய சமரன் அவர்களையே இங்கு காண்கிறீர்கள்.

துணுக்காய் பாசிஸ புலிகளின் வதை முகாம் பொறுப்பாளன் மல்லி.இங்கே புலிகளின் கைதிகளாக இருந்த 4,200 இற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு அடையாளம் தெரியாது புதைக்கப்பட்டார்கள். இவனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமான இளைஞர்கள். இவனெல்லாம் மாவீரன் ? (“புலிகளின் துணுக்காய் வதைமுகாம்.” தொடர்ந்து வாசிக்க…)

செழியன் என்ற மனிதநேயன்

(தோழர் சேகர் – பாஸ்கரன்)

உள்மனதை எழுத்தில் வடிக்கும் உண்மையான கவிஞன். உழைக்கும் மக்களின் விடிவுக்காகத் தன்னையே தேய்த்துக்கொண்டவன். தன் வாழ்வுக்கும், எழுத்துக்கும் கருத்துவழிப்பட்ட அர்த்தத்தைத் தேடியவன். அநீதிகளுக்கு எதிராக ஒரு சிறுகல்லைத்தன்னும் இறுதிவரை எறிந்துகொண்டே இருந்தவன். அமைதியாகத் தூங்கிவிட்டான்.

(“செழியன் என்ற மனிதநேயன்” தொடர்ந்து வாசிக்க…)

மக்களோடு மக்களாய் தமிழர் சமூக ஜனநாயக கட்சியினர்

ஒவ்வொரு கிராமத்தின் அபிவிருத்திக்குமாக ஒதுக்கப்பட்ட 10 இலட்சம் ரூபா நிதியில் விளம்பரப் பலகையில் மட்டுமே செய்து முடிக்கப்பட்ட எங்கள் ஊர் குளம்(சாவகச்சேரி), வாய்க்கால் புனரமைப்பு

மக்களோடு மக்களாய் தமிழர் சமூக ஜனநாயக கட்சியினர்

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினால்
05-02-2018 அன்று திருகோணமலை பெரிய முற்றவெளியில் நடாத்தப்பட்ட திருகோணமலை நகரசபை வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டத்தின்போது…

தேர்தல் பரப்புரைகளுக்கு மக்கள் பதில் எப்படியிருக்கும்?

(அதிரதன்)
“யானையைப் பூனையாக்குவேன்; பூனையை யானையாக்குவேன்” என்று, தேர்தல் களத்தில் அரசியல்வாதிகள் இப்போதும் பேசிக் கொண்டிருக்கையில், அர்ப்பணிப்புடனான அரசியலைப் பற்றி, ஜனாதிபதிகூடச் சொல்கிறார். இவற்றுக்கான முயற்சிகள் நடைபெறுகின்றனவா, அதற்கு என்ன வழி, எவ்வாறு அதை ஏற்படுத்தப் போகிறோம் என்பது எல்லோரிடமும் எழும் கேள்விதான்.

(“தேர்தல் பரப்புரைகளுக்கு மக்கள் பதில் எப்படியிருக்கும்?” தொடர்ந்து வாசிக்க…)

நேர்மையான இடதுசாரிகளுக்கு வாக்களியுங்கள் அல்லது வாக்களிக்காது இருங்கள்

– இலங்கை கொம்யூனிஸ்டஸ்ட் ஐக்கிய கேந்திரம்

பெரிய சிங்கள முதலாளித்துவ அரசியல் கட்சிகளையும், அவற்றின் முகவர்களாக நின்று சிறிய கட்சியாக சுயேட்சையாக உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையும்,  மற்றும் தமிழ், முஸ்லிம் முதலாளித்துவ கட்சி வேட்பாளர்களையும் நிராகரித்து, சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளடக்கிய சாதாரண மக்களின் அரசியல் அதிகாரத்தை கட்டி எழுப்பும் இலக்கை கொண்ட நேர்மையான இடதுசாரி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் அவ்வாறு எவரும் இல்லாதவிடத்து வாக்களிப்பதிலிருந்து விலகி இருங்கள்.

(“நேர்மையான இடதுசாரிகளுக்கு வாக்களியுங்கள் அல்லது வாக்களிக்காது இருங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

நல்லாட்சியும் மலையக மக்களும்

(கலாநிதி இரா. ரமேஷ்)

1980களின் இறுதிப்பகுதியில் இருந்து, மலையக மக்கள் படிப்படியாக சட்டரீதியாக பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்ட போதும், அதன் உண்மையான பயன்களை, முழுமையாக அனுபவிக்க முடியாதவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். அதற்கு, அம்மக்களின் சமூகப் பொருளாதார நிலை, பெரிதும் சான்றாகக் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய சமூகங்களின் சமூக அபிவிருத்தி மற்றும் பொருளாதார நிலைமைகளுடன் ஒப்பிடும்போது, இது மேலும் புலனாகிறது.

(“நல்லாட்சியும் மலையக மக்களும்” தொடர்ந்து வாசிக்க…)