இலங்கை தேர்தல் முடிவுகள்…. தேர்தல் முடிய முன்பே….

(சாகரன்)
2020 பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மொத்தம் 225 ஆசனங்களுக்கான தேர்தல் 22 மாவட்டங்களில் நடைபெறுகின்றன. 196 உறுப்பினர்கள் நேரடியாகவும் மிகுதி 29 உறுப்பினர்கள் கட்சிகள் பெறும் மொத்த வாக்குகளின் அடிப்படையில் தேசியப் பட்டியல் மூலம் கட்சிகளினாலும் தெரிவு செய்யப்படும். இது விகிதாசாரப் பிரிதிநித்துவ முறை தொகுதிவாரித் தேர்தல் அல்ல.