காளியம்மா…. உயிர் பலி கேட்கும் காளியம்மா….

(சாகரன்)

உயிர் பலிகள் புலிகளால்
.
ரெலோவிற்கு எதிரான ஆயுத கொலைகளை புலிகள் ஆரம்பித்தவுடன் யாழ்ப்பாணத்தில் புலிகள் கிட்டுவின்;; தலமையில் யாழ்ப்பாண வீதி எங்கும் இரவு பகலாக ரோந்தும் காவலும் செய்தனர.; எல்லாப் பொதுமக்களும் விசாரணைக்குள்பட்டனர் சோதனைக்கள்பட்டனர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர் கடல் மார்க்கமாக போராளிகள் தப்பி ஓடுவதற்கான பாதைகளை அடைத்து காவலும் செய்தனர்.

இதனையும் மீறி சிறிசபாரத்தினமும் அவரது போராளிகளும் பாதுகாப்பாக கட்டைப்பிராயைவிட்டு வெளியேறி யாழ் பல்கலைக்கழக பின் வீதி வழியாக கோண்டாவில் பகுதிக்குள் இடம் மாறினர் (இதுபற்றி முழுமையான பதிவை வேறு ஒரு சந்தர்பத்தில் பதிவு செய்கின்றேன்). பொது மக்களுக்கு அப்பால் ஏனைய விடுதலை அமைப்புக்களின் செயற்பாடுகள் நடமாட்டங்கள் புலிகளின் புலனாய்வு பிரிவினரால் கண்காணிக்கப்பட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது. இதில் சிறப்பாக பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ் இனர் அதிகம் புலிகளால் கண்காணிகப்பட்டனர்.

சிறீசபாரத்தினத்தை காப்பாற்றும் விடயம் ஒரு மணித்தியாலய இடைவெளியில் தவறவிடப்பட்டு அவரும் கொல்லப்பட்ட பின்னர் பொது மக்கள் ரொம்பவும் பயந்த நிலையில் இருந்தனர். இந்நிலையில்தான் இந்த சம்பவங்களை கண்டித்து மே மாதம் 10ம் நாள் ஈபிஆர்எல்எவ் இனர் மானிப்பாயில் ஆரம்பித்து யாழ் பெருமாள் கோவில்வரையும் ஊர்வலம் நடாத்தினர் இதில் பெண்கள் முன்னிலை வகிக்க இதற்கு பக்கபலமாக ஆண்கள் சென்றிருந்தனர். ஆனாலும் ஒருவித அச்ச நிலமை நிலவியது புலிகளின் ஆயுதத் தாக்குதல் நடைபெறலாம் என்பதுதான் அது. ஆனால் அன்று ஈபிஆர்எல்எவ் இடம் இருந்து மோட்டார் என்ற சுயதயாரிப்பு அவ்வாறு நடைபெறமல் காப்பாற்றிதில் பலமான மக்கள் முன்னணியைக் கொண்ட அவர்களுக்கு உதவியாக இருந்தது.
இந்த ஊர்வலத்தில்…

காளியம்மா என்று ஆரம்பிக்கும் உணர்வு பூர்வமான கவிதை ஊர்வலம் முழுவதும் இசைக்கப்பட்டுகொண்டு வந்தது. இக்கவிதையில் ஓரிடத்தில்…

றேகனைக் கேட்டாய் – அவன்
ஊயிரைப் பலியெடுத்து
இரத்தை சுவைத்தாய்
அது போவில்லை என்றாய்
அமீனைப் கொலை செய்து
இரத்தக் காட்டேறி போல் சுவைத்தாய்
இன்னுமா அடங்கவில்லை
உன் இரத்த வெறி

என்பது போல் கவிதை வரிகள் செல்லும்
(யாரிடமாவது முழமையான இந்த வரிகளை இருந்தால் பதிவு செய்யவும்)

இந்தக் கவிதை வரிகள் அன்றைய சூழலில் நிலவிய அச்சத்தைப் போக்கி பாசிசத்திற்கு எதிராக அணிதிரண்ட மக்களையும் போராளிகளையும் முன்தள்ளியது என்றால் மிகையாகாது. இந்த கவிதையில் வரும்…..

தோழர் அமீன், தோழர் றேகன் ஆகியோருடன் ஒட்டிய ஒரு வரலாற்று பதிவு தொடருகின்றது……… (றேகன், அமீன் இன் புகைப்படங்களை யாராவது பதில் இடவும்)

இந்திய அனுசரணையுடன் நடைபெற்ற திம்பு பேச்சுவார்த்தையிற்கு முன்பாக இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலை அமைப்புக்களுக்கும் இடையே போர்நிறுத்தம் ஏற்பட்டிருந்தது. இராணுவம் முகாங்களுக்கும் முடங்கி இருந்தது. இதற்கு முன்பு அன்றைய நிலையில் இராணுவம் நான் நினைத்த மாத்திரத்தில் ரோந்துகளும் சுற்றிவளைப்புக்களும்; கைதுகளும் கொலைகளும் செய்து திரிந்த காலம் கிபீர் என்ற இஸ்ரெலியத் தயாரிப்பு விமானங்கள் குண்டுகள் வீச ஆரம்பித்த காலம். திம்புவில் இந்திய மத்தியஸ்தத்துடன் நடைபெற்ற பேச்சுவார்தையை இலங்கை அரசு குழப்பிக் கொண்டு போர்நிறுத்த மீறல்களை ஆரம்பிக்க முற்பட்டது. சகல விடுதலை அமைப்புக்களும் சிறப்பாக ஐந்திற்கு மேற்பட்ட விடுதலை அமைப்புக்களும் எழுதப்படாத உடன்பாட்டுடன் ஓரளவு ஐக்கியமாக செயற்பட்ட காலம்.

பேச்சுவார்தை முறிந்த உடன் யாழ் பிரஜைகள் குழு கோட்டடையினுள் முடங்கியிருந்த இராணுவத்துடன் பேச்சுவார்தை ஒன்றிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஓரளவிற்கு விடுதலை அமைப்புக்களின் அங்கீகரிக்கப்பட்ட சூழலில் யாழ் பிரஜைகள் குழு கோட்டைக்குள் சென்று பேச்சுவார்தையில் ஈடுபட்டுவிட்டு திரும்பி வர முயன்ற வேளை இவர்களுடன் இணைந்து இராணுவமும் இவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது என்ற போர்வையில் வெளியேற முற்பட்டனர். அப்போது பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ் இடம் மட்டும் அவர்களின் சொந்தத் தயாரிப்பான மோட்டார் இருந்தது. இராணுவத்திற்கு ஒல் பெருக்கி மூலம் செய்திகளை அறிவிப்பதற்காக (கோட்டையில் இருந்து மணிக் கூட்டு கோபுரம் வரையிலான பகுதி இராணுவத்தின் மோட்டார் துப்பாக்கி தாக்குதலுக்குரிய பிரதேசமாக இருந்தது) மணிக் கூட்டுக கோபுரத்தில் ஒரு ஒலிபெருக்கியை கட்டி இதன் இணைப்பை பாதுகாப்பான யாழ் ஆஸ்பத்திக்கு அண்மையாக உள்ள இடம்வரை கொண்டு வந்து இராணுவத்திற்கு ஒலி பெருக்கி மூலம் செய்திகளை அறித்தவண்ணம் ஈபிஆர்எல்எவ் இனர் ஈடுபட்டிருந்தனர்.

இராணுவம் கோட்டையைவிட்டு பிரஜைகள் குழுவுடன் இணைந்து வெளியே முற்பட்டவேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டது இதனை மீறி வெளியேற முற்படுகையில் ஈபிஆர்எல்எவ் இனர் மோட்டார் தாக்குதலை இராணுவ முன்நகர்வை தடுக்கும் முகமாக மேற்கொண்டனர். பின்வாங்குதல் முன் நகர்தல் தாக்குதல் பின்நகர்தல் என்ற இழுபறிக்கு பின்பு பிரஜைகள் குழுவை சுயாதீனமாக வெளிறேவிட்டு இராணுவம் முகாங்களுக்கும் முடங்கியது இதனை நிரந்தரமாக முடக்க புலிகள் தவரிந்து ஏனைய அமைப்புக்கள் தமக்குள் ஒரு புரிந்துணர்வுடன் கோட்டையை சுற்றி நாலுபுறமும் (உண்மையில் மூன்று புறம்) இதில் சர்வதேச பாசறை ஒன்றில் பயிற்சி பெற்ற ஈபிஆர்எல்எவ் இன் அமின் மோட்டார் குழவிற்கு தலைவனாக கொட்டடிப்பகுதியல் செயற்பட்டுக் கொண்டிருந்து போது வவுனியாவில் சர்வதேசபாசறையில் பயிற்சிபெற்ற றேகனை அடுத்து புலிகளால் சதி மூலம் சுட்டுக்கொல்லப்பட்டார்.