கிறித்தவச் சமயத்தை வாழ்க்கைக்கு மேம்பாடுகள் தரும் நிறுவனமாகக் கருதியே அதனைத் தழுவினார்கள்

தென் தமிழ்நாட்டில் பதினெட்டாம் நூற்றாண்டில் நுழைந்த கிறித்தவச் சமயத்தை அப்பகுதி மக்கள் தங்கள் உலகியல் வாழ்க்கைக்கு மேம்பாடுகள் தரும் நிறுவனமாகக் கருதியே அதனைத் தழுவினார்கள் என்பதை நாம் காணமுடியும். குறிப்பாகக் கிறித்தவ சமயத்தை நாடிச் சென்ற விளிம்புநிலை மக்களான தலித்துகளும், சாணார்கள், பரதவர்கள், நாடார்கள் போன்ற இடைநிலைச் சாதியினரும் தங்களின் மரபான வாழ்க்கை முறையைப் பெருமளவில் மாற்றிக் கொள்ளாமலேயே நகர்ந்தார்கள் என்பதைப் பல சமூகவியல் மற்றும் நாட்டார் வழக்காற்று ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. ஏற்கெனவே இருந்த இசக்கியம்மன், சுடலை, பேராச்சி, சொரிமுத்தய்யனார் போன்ற தெய்வங்களின் பெயர்களை நீக்கி விட்டு மரியையும், சூசையப்பரையும், சலோமியையும் பொருத்திக் கொண்டார்கள் என்பதும் அந்த ஆய்வுகள் சுட்டிக் காட்டும் உண்மைகள்.

(அ. ராமசாமி)