பற்குணம் A.F.C. (பகுதி 88 )

1987 இல் வடமராட்சி லிபரேசன் ஒப்பிரேசன் தொடங்கியது.இந்தசூழ்நிலையில் எங்கள் அய்யா,அம்மா இருவரும் கடும் சுகவீனமுற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.அந்த யுத்த சூழ்நிலையில் பதவிக்கான கடமைகள் ஒருபுறம்,பெற்றவர்களுக்கான கடமை மறுபுறம்.ஆனால் பற்குணம் இரண்டையும் விடவில்லை.

இதே நேரத்தில் எங்கள் வீட்டிற்கு அச்சுவேலிப் பகுதியில் இருந்து உறவினர்கள் அகதிகளாக இடம் பெயர்ந்து வந்தனர்.அவர் பணரீதியாக எங்களில் தங்காவிட்டாலும் உணவுகளில் பங்கெடுக்கும் சூழ்நிலை தவிர்க்க முடியாமல் போனது.இந்த பொருளாதார சுமையை பற்குணம் தாங்கினார்.கூட்டுறவுத் துறை ஊழியர்கள் மூலம் உணவுகளை பணம் செலுத்தி வாங்கி அவர்கள் ஊடாக உணவுகளை அனுப்பினார்.

யத்தம் மேலும் இறுகிக்கொண்டு போனது.வடமராட்சியில் அகப்பட்டமக்களுக்கு உணவுகள் விநியோகிக்க திட்டமிட்டார்.அப்பகுதிகளுக்கு உணவுகளை விநியோகிக்குமாறு இராணுவமும் கோரியது.ஆனால் புலிகள் மறுத்துவிட்டனர்.ஆயினும் தன்னுடன் தொடர்பிலுள்ள பரமு மூர்த்தி,காண்டீபன்,செலவரத்தினம் பிரசாத் என பலருடனும் நிலைமையை விளக்கி உணவுகளை அனுப்ப முயற்சிகளை மேற்கொண்டார்.ஆனாலும் புலிகள் தடுத்துவிட்டனர்.

பற்குணத்தை மறைமுகமாக புலிகள் உளவு பார்த்தனர்.வேறு தெரிவின்றி இராணுவத்துடன் தொடர்பு கொண்டு அந்த பிரதேசத்துக்கு தற்காலிக உணவு கட்டுப்பாட்டு அதிகாரியாக நடேசபிள்ளை என்பவரை நியமிக்குமாறு கோரினார்.நடேசபிள்ளை மிகவும்பயந்த சுபாவம் உள்ளவர்..நடேசபிள்ளை அந்த பிரதேசத்துக்கு இராணுவம் அழைத்து வந்தது.நடேசபிள்ளை அங்கு வந்து உணவுகள் தேவை என அறிவித்தார்.அதைக் காரணமாக காட்டி ஒருவாறாக புலிகளிட்ம் உணவுகள் வழங்க அனுமதி பெற்றார்.

இந்த அனுமதியை பெற்றாலும் அந்த பகுதிக்குள் நுழைய எந்த வாகன சாரதிகளும் ்தயாராக இல்லை.எனவே உணவுகள் மீளக் கணக்கெடுக்கும் பணிபோல ஆட்களையும் வாகனங்களையும் அழைத்தார்.பல வாகனங்களில் உணவுக்ள் ஏற்றப்பட இராணுவத்தின் துணையுடன் பலாத்காரமாக கொண்டு செல்வதுபோல அவற்றை வடமராட்சிக்கு அனுப்பி வைத்தார்.அதைத் தொடர்ந்து இந்திய தலையீடுகள் காரணமாக யுத்த அலை ஓய்ந்தது.

இதனிடையே புலி ஆதரவு வர்த்தகர்களும் ஏனைய வர்த்தகர்களும் உணவுக் களஞ்சியங்களில் சூழ்நிலையை சாக்காக வைத்து திருடினார்கள்.இதில் கடும் போட்டிகள் நிலவின.

யுத்தம் ஓய்ந்ததால் அம்மா,அய்யாவை வந்து பார்க்க சூழ்நிலை உதவியது.இறுதியாக அம்மாவை பார்க்க வருவதாக சொல்லிஇருந்தார் கடமைகள் காரணமாக அவர் வரமுடியவில்லை.

புலிகள் பிரபாகரனை இந்திய அரசு தடுத்து வைத்திருப்பதாக கூறி வீதி மறியல் போராட்டம் நடாத்தினார்கள்.அம்மா ஜூலை 29 1987 அன்று காலமானார்.பற்குணத்தால் இறுதியாக அம்மாவை பார்க்கமுடியவில்லை.

அம்மாவின் மரணசடங்கை முழுமையாக நடாத்த புலிகள் விடவில்லை.பலரால் வரமுடியவில்லை.எமதுமூன்றாவது அண்ணன் பரந்தனில் இருந்து ஆனையிறவை கடந்து வந்தபோது அவரையும் மனிதாபிமானம் இன்றி திருப்பி அனுப்பினார்கள்.அவரால்கூட புலிகளின் அடாவடித்தனங்களால் அம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை.

அம்மாவின் உடலை இரவு பத்துமணிக்குப் பின்பே வெளிச்சம் இன்றி எடுத்துச்செல்ல புலிகள் அனுமதி வழங்கினர்.இந்தசூழ்நிலையில் நானும் எனது கடைசி அண்ணனும் சென்னையில் இருந்தோம்.
(இறுதியில் அதே பிரபாகரன் உடலும் அநாதையாக எரித்து சாம்பலாக்கப்பட்டது)

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)