குலம் அக்கா

(Saakaran)
ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றை முழுமையாக எழுத வேண்டின் இதற்குள் குலம் அக்காவை உள்ளடக்காமல் எழுத முடியாது. பல அத்தியாயங்களை நிரப்பும் வரலாறு அவருடன் இணைந்துள்ளது. அது 1970 கள் 1980 கள் 1990 கள் என்று விரிந்து அவர் எங்களை விட்டு பிரிந்து சென்ற இறுதிக் கணங்கள் வரையும் விரிந்து சென்றுள்ளன
ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புக்களின் தலைவர்கள் இவரின் பாதுகாப்பில்… விருந்தோம்பலில்… ஒத்துழைப்புடன் செயற்பட்ட வரலாற்றை குலம் அக்கா கொண்டுள்ளார். ஈழவிடுதலை அமைப்புகள் தனித்தனியாக தமது அமைப்பு வரலாற்றை பதிவு செய்தால் இவற்றிற்குள்ளும் இவரின் பல அத்தியாயங்கள் இருப்பதை தவிர்க்க முடியாது. அவ்வளவு பன்முகத் தன்மையுடையது இவரின் பங்களிப்பு.