சிதறும் முஸ்லிம் வாக்குகள்: சாதுர்ய வாக்களிப்பு கைகொடுக்குமா?

(ஆர்.ஷபிமுன்னா)

பல்வேறு புள்ளிவிவரங்களின் சராசரிக் கணிப்பின்படி நாடு முழுவதிலும் தற்போது முஸ்லிம்கள் சுமார் 20% உள்ளனர். இவர்களது வாக்குகள் 145 தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கின்றன. இவற்றில் உத்திர பிரதேசத்தில் 28 தொகுதிகளும், வங்கத்தில் 20, கேரளத்தில் 6, ஜம்மு-காஷ்மீரில் 5, அசாம் மற்றும் பிஹாரில் தலா 4, ஆந்திராவில் 2, லட்சத்தீவுகளில் ஒரு தொகுதியும் முஸ்லிம்களின் வாக்குகளால் முடிவெடுக்கப்படுபவை.