தமிழகத் தலைவர்கள், இலங்கை தமிழர்களை மறந்து விட்டார்களா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

இந்த முறை நடைபெற்ற தமிழ்நாடு மாநில சட்டசபைத் தேர்தல், முன்னைய தேர்தல்களை விட, சில முக்கிய வேறுபாடுகளைக் கொண்டிருந்தது. அதில் முக்கியமான வேறுபாடு, நீண்ட காலமாக மாநிலத்தின் பிரதான இரு கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகத்தினதும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினதும் தலைவர்களாக இருந்த, இரு முக்கிய நபர்களின்றி இத்தேர்தல் நடைபெற்றது.