தமிழீழ ஆதரவும் திருமாவளவனும்

எம்ஜி ஆர் இந்திய உளவுத்துறையால் பயன்படுத்தப்பட்டவர்.அதை தனது அரசியலுக்கு பலமாக்கினார்.இதனால் பல திமுக மற்றும் ஏனைய கட்சி சார்ந்தவர்களை பிரபாகரன் நெருங்க அஞ்சினார்.ராஜீவ் காந்தி கொலையின் பின்னால் சகல கட்சிகளுமே ஆதரிக்கத் தயங்கின.இந்தக் காலத்தில்தான் திருமாவளவன் அரசியல் கட்சி தொடங்கினார்.இவருக்கு முன்னோடி புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசுவாமி எனலாம்.

திருமாவளவன் கட்சி தொடங்கினாலும் அது சாதிரீதியான கண்ணோட்டத்தில் தொடங்கப்பட்ட கட்சிதான்.ஆனாலும் அவர் தமிழ்த் தேசியத்தின் பெயரால் விரிவாக்க முயன்றார்.அதற்கான முயற்சியே புலி ஆதரவு.இதற்காக காவிரிப் பிரச்சினையில் கன்னட அமைப்புக்களின்மேல் தாக்குதலையும் மேற்கொண்டார்.இது அவரது சின்னத்தனத்தின் வெளிப்பாடு.

தமக்கான நேர்மையான ஆதரவை பெற திருமாவளவனை புலிகள் பயன்படுத்தினார்கள்.அவருக்கு பொருளாதார ஆதரவைக் கொடுத்து தமக்கான புலிகள் தமக்கான தளத்தை ஏற்படுத்தினார்கள்.உலக அளவில் திருமாவளவன் விளம்பரப் படுத்தப்பட்டார்.

யாழ்ப்பாண சமூகத்தின் சாதீய கட்டமைப்பு எதையும் அறியாத அறிய முயலாத திருமாவளவன் இந்திய அரசை எதிர்த்து பலமான ஆதரவைக் கொடுத்தார்.இலங்கை மற்றும் வெளிநாடுகளில் விருந்தாளியாக வரவேற்கப்பட்டார்.இந்த வரவேற்புகளில் மெய்மறந்த திருமாவளவன் புலிகளின் வலையில் வீழ்ந்தார்.

இலங்கைத் தமிழர்களிடையே வேரூன்றிய குரூரமான சாதிய பண்புகளை இனம்காண தவறிவிட்டார்.சாதியைக்கூட புலம்பெயர வைத்த யாழ்ப்பாண தமிழர்களின் அநாகரீக பண்புகளை திருமாவளவன் அறியவில்லை.

தமிழ் தேசியத்தை கிழக்கிலே நிறுத்திய இராசதுரையை துரோகி என்றும் சக்கிலியன் என்றும் வசைபாடிய யாழ்ப்பாண தமிழர்களை திருமாவளவன் தெரிந்துகொள்ளவில்லை.பறையர் சமூகத்தவரான மேயர் செல்லன் கந்தையா அவர்களை யாழ் நூலகத்தை திறக்கவிடாமல் தடுத்த புலிகளை திருமாவளவன் உணரவில்லை.இனியாவது உணருவார் என நம்புவோம்.

( Vijaya Baskaran)