தேர்தல் வெற்றி வாய்ப்பை தீர்மானிப்பது: மக்களின் விருப்பு வாக்கா…? வேறு சிலரின் விருப்பங்களா…?

(சாகரன்)

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் முடிந்து இது பற்றிய ஆய்வுகள், ஆராய்ச்சிகள், ஆனந்தங்கள், கோவங்கள் என்று நாலு திசைகளிலும் பொறி பறந்து கொண்டு இருக்கின்றது. ஏதோ ஒரு தேர்தல் முடிந்து கடந்து போனது போன்ற அதிர்வுகளை இத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்திவிட்டுப் போகவில்லை.