தோழமை தினம்

திருகோணமலையில் நாளை (19.11.2018) தோழர் பத்தமநாபாவின் 67வது பிறந்த நாளையொட்டி தோழமை தினம் நினைவு கூரப்படுகின்றது. வருடம் தோறும் நினைவுகூரப்படும் இத்தோழமை தினம் இம்முறை திருகோணமலையில் நினைவு கூரப்படுவதுடன் தோழர் பத்மநாபாவின் உருவச்சிலையும் திறந்து வைக்கப்படவிருக்கின்றது.இதற்கான செயற்பாடுகளை தமிழர் சமுக ஜனநாயக கட்சியின்(SDPT) திருமலை மாவட்ட செயலாளர் தோழர் சத்தியன்( சி.சிவகுமார் ) தலைமையில் தோழர்கள் முன்னெடுத்து வருகின்றார்கள்.