“நக்குண்டார் நாவிழந்தார்” அரசியலுக்குள் சிக்காது, சாணக்கியன் ராகுல் ராஜபுத்திரன் இராசமாணிக்கமாக நிலைத்திருப்பாரா?

தமிழரசுக் கட்சியின் தூண்களில் ஒருவரான மூத்ததம்பி இராசமாணிக்கத்தின் மகன் மருத்துவர் இராசமாணிக்கம் இராஜபுத்திரன் இலங்கை சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளர். இவரின் மகன் ராஜபுத்திரன் சாணக்கியனும் ஆரம்பத்தில் இலங்கை சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளர்.
ஆனால் அவர் 2020 தேர்தலில் சாணக்கியன் ராகுல் ராஜபுத்திரன் இராசமாணிக்கமாக பாட்டனாரின் அரசியலைப் பற்றிக்கொண்டார்.