பத்மநாபா: ஆயுத வகிபாகம் ……..? அரசியல் வகிபாகம்…..?

(Sebastiyan Eugene)

          ஈழமெங்கும் பல புரட்சிகள் பூத்திருந்த காலம் முற்புதர்களும்  பற்றைக்காடுளும் படுக்கையறையாய் வகிபாகித்த காலம் இன விடுதலையின் கூக்குரல்கள் இளம் சந்ததியெங்கும் இரையோடிப்போயிருந்தது. சந்திகளிலும் சாவடிகளிலும் சாவைச் சந்தித்து சந்தைக்கும் சந்நிதானத்திற்கும் சென்றுகொண்டிந்த தமிழினம் செந்நீரும் கண்ணீருமாய் காடுகளிலும் கரைகளிலும் காவலுக்காய் தனித்திருந்த இனமாய் அரசியல் நீட்சிக்காய் அலைந்துகொண்டிருந்த தருணம். அவதாரங்கள் பலபிறந்த அரசியல் பல பேசின ஆயுதங்கள் சத்தங்கள் எழவும் தொடங்கின. இங்கே பத்மநாபாவின் வகிபாகம் என்ன என்று எழுகிறது அரசியல் போரும் அடிமைக் குரலின் விடுதலைக்கான வகிபாகமும் சுயநிர்ணய அரசியல் உரிமைக்கான தமிழ் மக்களின் ஏக்கமும் நிர்க்கதியாய் அமைந்துவிடக் கூடாது என்பதில் வகிபாகம் ஒன்று அமைந்திருக்கும். இங்கேதான் யார் யாருக்காக போராடுகின்றோம் என்பதும் எதற்காக போராடுகின்றோம் என்பதும் எப்படி போராடுகின்றோம் என்பதும் எழுதப்படாத மௌனத்தின் கொலைகளாகவே அமையக் காரணமாகவும் அமைந்தது தமிழர் அரசியல் உரிமைக்கான வரலாற்றியில் யுகத்தில்