பொறுப்புக்கூறலும் புலம்பெயர் அலப்பறைகளும்

அரசியல் என்பது வெறும் வாய்ச்சவடால்களுடன் முடிந்து போவதல்ல; அரசியலின் அடிப்படைகள், மக்கள் பற்றிய அக்கறையும் அடிப்படை அறமும் ஆகும். ஆனால், இலங்கை அரசியலில் இவை இரண்டையும் காண்பதரிது. இவை இரண்டையும் தன்னகத்தே கொண்ட அரசியல்வாதிகள், நாடாளுமன்ற அரசியலில் நீண்டகாலம் தாக்குப்பிடிப்பதில்லை. ஒன்றில் அகற்றப்படுவார்கள். அல்லது, அதே சாக்கடையில் விழுந்து புரள்வார்கள். இவை இரண்டுக்கும் ஏராளமான உதாரணங்கள் உண்டு.