முன்பு ஒருநாள் செய்த வினை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

கறுப்பு ஜூலை நாற்பதாண்டுகளின் பின்னர் – 02:

தமிழ் மக்கள் மீதான இனவன்முறை, 1983இல் நடந்தேறியபோது அதை ஒரு தனித்த நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியாது. அது நீண்டகாலமாகத் தொடர்ந்துவந்த நெருக்கடிகளின் விளைவாக, திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்செயல் ஆகும்.