வடமாகாணத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள் ?

எப்படி இவர்கள் புத்தி ஜீவிகள் ஆனார்கள்??

யார் இவர்கள்???

(அனெஸ்லி உடன் இணைந்து  சாகரன்)

யாழ்.ஆயர் வண. யஸ்ரின் ஞானப்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், டாக்டர்கள், சட்டத்தரணிகள், சமயத் தலைவர்கள், வங்கியாளர்கள், தொழில்சார் வல்லுநர்கள், அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்துகொண்டு வடக்கு மக்களின் நல்வாழ்வுக்கான பல தீர்மானங்களை எடுத்தனர்….?

புத்தி இல்லாத ஜீவிகள் யார்?

அல்லது !!!!

புத்தி குறைவான ஜீவிகள் யார்?????

இது ஒரு மகாத்தான பாகுபாடு ( discrimination )….

இதை சரி என்று ஏற்றுக்கொள்ளும் அனைவரும் சமுகத்தில் நிலவும் மற்றைய பாகுபாடுகளை (discrimination) ஏற்றுக்கொள்கிறவர் ஆகிறார்கள்….

ஒரு சாதாரண குற்றங்களுடன் சம்பந்தப்பட்ட விடயம்….நாளந்த வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட விடயம்….

அப்போ இந்த புத்தி ஜீவிகளுக்கும் இந்த குற்றங்களுக்கும் சம்பந்தம் இல்லையா???
புத்தி ஜீவிகள் எப்படியான குற்றங்களை செய்கிறார்கள்????

புத்தி ஜீவிகள் என்று சொல்லப்படும் ஒரு சாரார் எந்த குற்றமும் செய்யவில்லையா????

ஒரு மேசன் வேலை செய்பவனுக்கு இதை பற்றிய அறிவு இல்லையா??? போதாதா????

ஒரு கூலி வேலை செய்பவன் சமுகத்தின் முடிவுகளை எடுக்க முடியாதவனா????

அப்போ இந்த புத்தி ஜீவிகள் அல்லாதவர்கள் தான் குற்றங்களை செய்கிறார்களா????

குற்றங்களுக்கு சொந்தக்கார்கள் இந்த புத்தி அற்ற ஜீவிகளா?????

என்ன தாண்டா சொல்லவாறியள்?????

நீங்கள் இறுதியாக எங்கு வருகிறீர்கள் என்பது நன்றாக புரிகிறது புத்தியை காட்டும் புத்தி ஜீவிகளே….

என்ற நண்பர் அனெஸ்லி ரட்ணசிங்கம் எனபவரின் இடுகைக்கு எனது இடப்பட்ட இடுகை தொடர்கின்றது……..

புத்திஜீவிகள் என்பதற்கான வரையறைகளை முதலில் தெளிவுபடுதப்பட வேண்டும்.. என் பார்வையில் புத்திஜீவிகள் என்பவர் பல்கலைக்கழக படிப்பு முடித்தவர்களும், பட்டம் பெற்றவரகளும் மட்டும் அல்ல. இதற்கு அப்பால் தொழில்சார் வல்லுனர்களையும் உள்ளடக்கியதே புத்திஜீவிகள் என்ற வரையறைக்குள் உள்ளாக்கப்படுவர். பல்கலைக்கழக படிப்பு முடித்தவரகள், பட்டம் பெற்றவரகள் எல்லோரும் புதித்திஜீவிகள் என்று ஒர் போடாக ஏற்றுக் கொள்ள முடியாது.

துறைச்சார் நிபுணத்துவம் என்பது அனுபவங்களால் ஏற்படுபவை. இதில் பல்வேறு தொழில் துறையைச் சார்ந்தவர்களும் உள்ளடங்குவர். இதில் சிகை அலங்காரத் தொழிலாளி தொடக்கம் விவசாயி வரை பல சமூகத் தொழிலில் ஈடுபடுபவர்களும் அடங்குவர். இவர்களில் பலர் தமது அடிப்படைக் எழுத்தறிவுக் கல்வியைக் கூட முடிக்காதவரகளாகக் கூட இருக்கலாம். ஒரு சமூகத்தில் முன்னேற்றத்திற்காகவும் விடிவிற்காவும் உற்பத்தியில, உழைப்பில் அல்லது இது சார்ந்த விடயங்களில் நிபுணத்துவம் கொண்டவர்களாக இருந்தல் போதுமானது. தமது தொழில் ரீதியான அனுபவத்தில் புலமைத்துவம் பெற்றவர்கள் இங்கு உள்ளக்கப்படலாம்.

ஆனால் இதில் முக்கியம் இவர்கள் சமூகப் பிரஞை உள்ளவராக இருக்க வேண்டும். பல்கலைக் கழகம் உயர் படிப்பு படித்து பட்டம் பெற்றவர்கள் சமூகப்பிரஞை அற்றவர்களாக இருப்பின் இவர்களை புத்திஜீவிகள் என்ற வறையறைக்குள் உள்ளடக்குவது அபத்தமானது, பிழையானது. இவர்கள் ஒரு சமூகத்தை முன்னோக்கி நகரத்துவதற்கு எந்த பங்களிப்பும் செய்யாதவர்கள். இதற்கு தயாராக இல்லாத சுயநலவாதிகள். எழுத்தறிவும், டிஎன்ஏ பற்றிய அறிவும் கணணித்துறை வல்லுனர்களும், சரித்திரவியலாளரும், கவிதை, கட்டுரை எழுதுபவர்கள் எல்லோரையும் பொத்தாம் பொதுவில் புத்திஜீவிகள் என்று வரையறுப்பதும் இவர்கள் சமூகத்திற்கான வழிகாட்டிகள் தலமைத்துவம் வழங்குபவர்கள் நீதி நெற்pயை சமுதாயத்திற்கு போதிப்பவர்கள் என்று சொன்னால், இதை நம்பினால் இது தவறானதும், பிழையானதுமான எடு கோள்கள் ஆகும்.

இதன் மறுவழத்தில் இந்த கல்வியைப் பெறாதவர்கள் இது எதற்கும் தகுதியற்வரகள் என்ற பாகுபடுத்திப்பார்க்கும் தன்மை கண்டனத்திற்குரியது. இன்னும் ஒருவகையில் பார்த்தால் இந்த கல்விமான்களில் பலர் தாம் பெற்ற கல்வி அறிவைக் கொண்டு சுரண்டலகளிலும், சமூக விரோத செயற்பாடுகளையும் செய்தவண்ணம் இவற்றை கெட்டித்தனமாக மறைத்தும் கனவான்களாகவும் வாழ்கின்றனர். இதனை நாம் எமது 40 வருடகால யுத்த வாழ்வில் நிறையவே கண்ட அனுபவங்கள் உண்டு இன்றும் இதன் வடிவங்கள் துப்பாக்கி இல்லாமலே தொடருவது விசனத்திற்குரியது.