2020: இலங்கைத் தேர்தல் களம்…. தமிழர் தரப்பு

(சாகரன்)

சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கை அரசியல் பரப்பில் தமிழர் தரப்பில் ஏகபொக தலமை என்ற போக்கே பெரும்பாலும் ஆதிக்கம் வகித்து வருகின்றது. பன்முகத் தன்மையை மறுக்கும் மாற்றுக் கருத்துகளை துரோகத்தனமாக பார்க்கும் பொது போக்கும் இருப்பதை அவதானிக்க முடியும்.