தொப்புள் கொடி உறவுகள்

நான் இலங்கைத் தமிழன். இந்தியாவுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவன். ஆனால் இலங்கையர்கள் அனைவருக்கும் இந்தியாதான் “மூதாதையர்கள் நாடு “. நாங்கள் பேசும் தமிழ் பல தமிழ் நாட்டவர்களுக்குப் புரிவதில்லை. சைமன் நாடாரே ஒரு முறை இலங்கைத் தமிழன் தமிழில் பேசியதை மொழி பெயர்க்கும்படி கேட்டான். அடுத்து விவாஹ முறைகள் கேரளத்துடனேயே ஒத்துப் போகின்றன. உணவுகளும் அப்படியே. ஆனால் இலங்கையில் தமிழும் சிங்களமும் கட்டாய பாட மொழிகள். இரண்டில் ஒன்றில்த்தான் படிக்க வேண்டும். தமிழ் நாட்டில் அப்படியல்ல. தமிழ் நாட்டுப் பத்திரிகைகள், சினிமா என்பனவற்றையே படிக்கிறோம் பார்க்கிறோம். ஆனால் யாரும் சொல்லாத ஒரு முக்கிய விஷயம் ஒன்று இருக்கிறது. கள்ளக் கடத்தல் வியாபாரம். இலங்கைக் கள்ளக் கடத்தல் கும்பல்களுக்கு தமிழ் நாட்டில் வைப்பாட்டிகள் உண்டு. பலதசாப்தமாக நடை பெறும் கள்ளக் கடத்தல் வியாபாரமே இலங்கை அரசுடன் மோதல்களை உண்டாக்கின.

கச்ச தீவை இலங்கையின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்தியா சம்மதித்த காரணமும் அதுதான். தொப்புள் கொடி உறவுகள் என்றால் தமிழ் நாட்டவர்களுக்கு இலங்கையின் மத்திய மலை நாட்டில் உள்ளவர்களே ஆவர். இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ளவர்களுக்கு தமிழ் நாட்டில் தொப்புள் கொடி உறவு என்று எதுவுமே கிடையாது. இந்த ஈழப் பிரச்சனையே இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டது. இலங்கையில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் தமிழ் நாட்டிலேயே விற்பனை செய்யப்பட்டன. அதனால் உருவான ஒரு சமூகம் மட்டுமே இலங்கைத் தமிழர், புலி என்று குரல் எழுப்புகிறார்கள். இலங்கைத் தமிழர்களுக்கு அமைதி தரும் தீர்வை ராஜீவ் காந்தி அவர்கள் உருவாக்கினார். அதையே சிங்களவர்களுடன் சேர்ந்து கலகம் செய்து நாசமாக்கியவர்கல்தான் புலிகள். பாதிரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் புலிகள் இந்திய எதிரிகள் மட்டுமல்ல, இந்து எதிரிகள் என்பதையும் உணர வேண்டும்.
(Sivananthan Muthulingam)