26 வது தியாகிகள் தினம் – பாரிஸ்

பத்மநாபா மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் 26 வது தியாகிகள் தினம் கடந்த ஞாயிறு 19-06-2016 மாலை பிரான்ஸசின் தலைநகர் பரீசில் அனுஸ்டிக்கப்பட்டது. இதில் தோழர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள், சமூகசெயல்பாட்டாளர்கள், மக்கள்அமைப்புக்கள, கட்சிகளின் பிரதிநிதிகள் என பலதரப்பினரும் கலந்துகொண்ட உணர்வுபூர்வமானதும் அர்த்தபபூர்வமானதுமான நிகழ்வுகள் அமைந்தது.

ஐனநாயகத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் மரணித்த தோழர்கள, பொதுமக்கள, சக அமைப்பை சார்ந்த போராளிகள் என அனைவருக்கும் மௌனஅஞ்சலி செலுத்தி நிகழ்வு ஆரம்பமானது. தோழர் கிருபனின் வரவேற்புரையில், கட்சியின் பெயர் மாற்றம் பற்றி குறிப்படுகையில் பெயர் மட்டுமே மாறியுள்ளதே தவிர கட்சியின் அடிப்படை கொள்கைகள் மாறவில்லை என்பதுடன் நடந்து முடிந்த காங்கிரஸ் இற்குப் பின் யாதார்த்த நிலமைகளுக்கு ஏற்ப, கட்சி மேலும் செழுமை படுத்தப்பட்டிருப்பதோடு இடதுசாரிகளோடும், சமூக முற்போக்காளர்களுடனும் இணைந்து சமூக மாற்றத்திற்கான வேலைத்திட்ங்கள் முன்னெடுக்கும் என குறிப்பிட்டதோடு, நிகழ்வுகளையும் நெறிப்படுத்தினார்.

ஆரம்ப உரையை நிகழ்த்திய தலித் சமூக மேண்பாட்டு முன்னணியின் செயல்பாட்டாளர் தோழர் தேவதாஸ், பத்மநாபா பற்றியும் ஆரம்பகாலங்களின் ஈபிஆர்எல்எவ் இன் சமூகமாற்றத்திற்கான செயல்பாடுகள் பற்றியும் குறிப்பட்டதுடன் கட்சியின் பெயர் மாற்றம் என்பது யதார்த்தத்துடன் பயணிக்கும் கட்சியின் வரலாற்று தேவையாக இருந்தபோதும் ‘தமிழ்’ என்ற சொல்லாடல் தமிழ் தேசியத்தின் குறியீடாகவே என்னால் பார்க்கமுடிகிறது என்னும் குறப்பிட்டார், அதிகமான பேச்சாளர்களின் உரைகளிலும் கட்சியின் பெயரில் உள்ள ‘தமிழ்’ பற்றி விமர்சித்திருந்தனர்.

இதனைதொடர்ந்து ரெலோ அமைப்பின் பிரான்ஸ் பிரதிநிதி தோழர் நித்தி உரையாற்றினார் ஆரம்பகாலங்களில் அமைப்புகள் செயல்பட ஆரம்பிப்பதற்கு முன்னான காலங்களில் தோழர் நாபாவுடன் இணைந்து செயல்பட்ட நினைவுகளையும், அர்பணிப்பையும் நினைவுகூர்ந்தார். டான் தொலைக்காட்சியின் நிர்வாகி குகநாதன் தற்போதைய இஙை;கை நிலவரங்களை விபரித்ததுடன், ரிஎன்ஏ யுடன் சேர்வதற்கான செயல்பாடுகளை தவிர்த்து அதற்கு மாற்றாக செயல்படுவதே சிறந்தது எனவும் குறிப்பிட்டார.; தொடர்ந்து தமிழ் ஈழ மக்கள் விடுதலைகக்கழகத்தின் பிரான்ஸ் பிரதிநிதி தோழர் ஜென்னி அண்மையில் இலங்கையில் கண்டுவந்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டதுடன், அங்கு வாழும் மக்களின் வாழ்வாதர தேவைகளுக்காக புலம்பெயர் மக்கள் உதவவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார் .

இவர்களை தொடர்ந்து ஈழ விடுதலை போராட்டத்தின் ஆரம்பகால இடதுசாரி செயல்பாட்டாளர்களில் ஒருவரான தோழர் அந்தோனிப்ள்ளை, சமஉரிமை இயக்கத்தின் செயல்பாட்டாளர் தோழர் ரஐhகரன் முன்னிலை சோசலிச கட்சியின் பிரான்ஸ் பிரதிநிதி தோழர் சந்தனா(இவரது உரை சிங்களமொழியில் இருந்தது தோழர் ரமணன் தமிழாக்கம் செய்தார்) இவர்களது உரையில் இடதுசாரிகளோடு இணைந்து செயல்படுவதினூடாக இனங்களுக்கிடையே புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் கட்டி எழுப்புவது, இலங்கை முழுவதிலும் ஏற்படுத்தப்படும் சமூக மாற்த்தினூடாக மட்டுமே சகல இனங்களுககுமான விடுதலையும் சாத்தியமானதாகும் எனறு குறிப்பிட்டதுடன், தமிழர் சமூக ஐனநாயக கட்சி தொடர்பான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

இவர்களை தொடர்ந்து சமூகசெயல்பாட்டாளர் தோழர் ஞானம் உரையாற்றறுகையில் முஸ்லீம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் தமது கட்சி பெயரில் உள்ள முஸ்லீம் என்ற அடையாளத்தை எடுத்து வருகின்ற வேளையில் பெயரை மாற்றுவது என்ற யதார்த்த முடிவை எடுத்தது சமுகமாற்றத்திற்காக செயல்படும் ஈபிஆர்எல்எவ் தனது புதியபெயரில் ஏன் தமிழ் என்ற இன அடையாளத்தை சேர்த்தது என்ற கேள்வியை வைத்ததுடன் புதிய கட்சியின் செயல்பாடுகள் சமூகமாற்றத்தை நோக்கியதாக இருக்கவேண்டும் எனவும் குறிப்பட்டார்.

அடுத்து இலங்கை பழையமாணவர் சங்க செயல்பாட்டாளர் தோழர் பாலகிருஸ்ணனின் உரையில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து செயல்படவேண்டிய அவசியத்தையும் அதற்கான செயல்திட்டங்கள் தொடர்பாக கவனம் செலுத்துவதோடு அவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னேடுப்பதற்கு பத்மநாபா மக்கள் முனனணிக்கு சாத்தியப்பாடுகளும் கடமையும் உண்டு எனவும் தெரிவித்தார், அடுத்து உரையாற்றிய தோழர் நந்தன் தானும் தோழர் டக்கிளஸதேவானந்தாவும் தோழர் பத்மநாபா மற்றுறும் அண்மையில் மறைந்ததோழர் ஸ்ராலின் அவர்களோடு பழகிய நினைவுகளை பகிர்ந்துகொண்டதுடன் எஸ்டிபிரி யானது சமூகமாற்றத்திற்கான, கட்சியாக செயல்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இறுதியாக தோழர் மோகன் பேசுகையில் கட்சியின் நடைமுறை செயல்பாடுகளை வைத்தே கட்சியை தீர்மானிக்கவேண்மே தவிர கட்சியின் பெயரை வைத்து அதன் செயல்பாடுகளை தீர்மானிக்கமுடியாது. எமது வரலாறு என்றும் மக்கள் நலனையும் சமூகமாற்றத்தையும் முன்நிறுத்தியதாகவே இருந்துள்ளது. அது தொடரும் அத்துடன் நின்றுவிடாமல் சமுதாயத்தில் காணப்படும் பிற்போக்கான செயல்பாடுகளுக்கு எதிராக குரல்கொடுப்பது மட்டுமல்ல கட்சிக்குள் காணப்படும் பிற்போக்கான செயல்பாடுகளுக்கு எதிராகவும் குரல்கொடுப்போம், மாற்றங்களை கொண்டுவருவோம்.

இங்கு எம் கட்சி சரியான பாதையில் பயணிக்கவேண்டும் என்ற அக்கறையோடு நீங்கள் வைத்த விமர்சனங்களை நாங்கள் கருத்தில் கொள்வதுடன் கட்சியின் அனைத்து நிலைகளிலும் இவை விவாதிக்கப்படும் எமது கட்சி சரியானபாதையில் பயணிக்கையில் ஆதரவு தருவதுபோல் தவறான முடிவுகள் எடுக்கும் போது அதை மாற்றி அமைக்கவும் நீங்கள் குரல் கொடுப்பதினூடாக நாம் மேலும் கட்சியை சரியான பாதையில் முன்னகர்த்த முடியும். அத்துடன் எமது மக்கள ;மீது அன்பும் அக்கறையும் கொண்டுள்ளது போல் எமது தோழர்கள் மீதும் குறிப்பாக மரணித்த தோழர்களின் குடும்பங்களின் தேவைகள் குறித்தும் நாம் அக்கறை கொள்வதுடன் எமது இயலுமைக்கு உட்பட்டு அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் அன்று பிரிந்த சின்னவன் தோழர் தொடக்கம் இன்று பிரிந்த ஸ்ராலின் தோழர்வரை தொடரும் என குறிப்பிட்டார்.

இறுதியாக இந் நிகழ்வு சிறப்பாகவும் அர்தமுள்ளதாகவும் அமைய துண்டுப்பிரசுரம் அதன் வடிவமைப்பிலும் ஈடுபாட்டுடன் பங்களித்த அச்சக நண்பர்கள் வசதியான மண்டபத்தை தந்த உரிமையாளர் சிற்றுண்டி தந்து பசியாற்றிய தோழர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிரமங்களுக்கு மத்தியிலும் தோழர் நாபா உட்பட மறைந்த தோழர்களின் படங்களை எடுப்பதற்கு உதவிய தோழர்களின் குடும்ப உறுப்பினர்கள், பல வழிகளிலும் தோள்; கொடுத்த தோழர்கள் உறுப்பினர்கள் வேலைகளுக்கும் மத்தியில் எம்முடன் உழைத்த நண்பர்கள்; வருகை தந்து கருத்துக்களை வழங்கிய அனைவருக்கும் தோழர் ரணேஸ் நன்றி உரை நிகழ்த்தி நிகழ்சியை இனிதே நிறைவுபடுத்தினார்.