துரையப்பா விளையாட்டு அரங்கம்

இது புதிய பிரச்சினைக்கான திறவுகோல்

இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் துரையப்பா என்ற பெயர் நிலையானது.தமிழ் அரசியல்வாதிகளில் பதவியை முழுமையாக பயன்படுத்தி அதிகம் சேவை செய்தவர்கள் ஒருவர் சாவகச்சேரி பா.உ. வே.குமாரசாமி.அடுத்தவர் மேயர் அல்பிரட் துரையப்பா.

அவர் மேயராக இருந்ததற்கான அடையாளங்கள் நிறைய உண்டு.அவரை மக்களிடம் இருந்து அன்னியப்படுத்த அவர் துரோகி ஆக்கப்பட்டார்.அதன் விளைவாக கொல்லப்பட்டார்.அதிலிருந்து திசை மாறிய தமிழர் அரசியல் பாரிய அழிவில் முடிந்துவிட்டது.

முப்பது வருட யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டபோதும் பிரச்சினைகள் அப்படியேதான் இருக்கின்றன.எல்லாம் சமூக அரசியல்வாதிகளும் இதில் குளிர் காய்கின்றனர்.இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக மீள குடியமர்தப்படாத போதும் பௌத்த,இஸ்லாமிய குடியேற்றங்கள் தொடர்கின்றன.இது குற்றச்சாட்டு அல்ல.எதிர்கால நலன் கருதி எழுதுகிறேன்.

துரையப்பா விளையாட்டு அரங்கு நரேந்திரன் மோடி,மைத்திரி இருவராலும் திறந்து வைக்கப்பட்டுள்ளது .இது நல்ல சகுனம் அல்ல என்பதே என் அபிப்பிராயம் .தெற்கே பௌத்த மதவாதம் இருந்த போதும் வடக்கே மதவாதம் தலை தூக்கியதில்லை.இப்போது மெல்ல அந்த மதவாங்கள் தலை எடுக்க முயல்கின்றன.இந்திய மதவாத ஊடுவல் நடைபெறுகிறது.நிலாவெளி கிருஷ்ணன் கோவில் காரணமின்றி நிர்மாணம் செய்யப்பட்டதல்ல.அதே போலத்தான் துரையப்பா விளையாட்டு அரங்கமும்.

பௌத்த இந்து மதவாதிகள் இணைந்து இஸ்லாமிய கிறிஸ்தவர்களுக்கு எதிராக கிளம்பலாம்.இதற்கு இந்திய உளவாளிகள் உதவக்கூடும்.அப்படி நடந்தால் முதலாவது பாதிப்பு அப்பாவிகளான குடியேற்றவாசிகள் தான்.

இஸ்லாமிய தமிழ் தலைவர்கள் சுய கௌரவத்தை விட்டுக்கொடுத்து சகல அரசியல் கட்சிகளுடனும் பேசி இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயலவேண்டும் .இந்தியாவின் நேரடியான அல்லது மறைமுகமான ஊடுருவலுக்கு இடமளிக்காமல் இனப் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காணவேண்டியது அவசியமாகும்.

(Vijaya Baskaran)