கும்பகோணம் ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் படத்திறப்பு விழா

 

கும்பகோணம் ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் அவர்களின் படத்திறப்பு விழா அங்குள்ள ராயா மாஹாலில் காலை 10 மணிக்கு நடைபெற்றது.இந்த வைபவத்தில் குடந்தை சட்டமன்ற உறுப்பினர்(தி.முக.) சாக்கோட்டை அன்பழகன் தலைமைதாங்கி நடத்தினார். இந் நிகழ்வில் திராவிட கழக தலைவர் வீரமணி,மூத்தபத்திரிகையாளர் ரி.எஸ்.எஸ்.மணி,இந்திய தேசிய காங்கிரஸ் சி.ஜி.மணி,பெண்ணியலாளர் தோழர்ஓவியா,தோழர்சுரேஸ்பிரேமச்சந்திரன்(ஈ.பி.ஆர்.எல்.எப்),தோழர்சுகுசிறதரன்(பத்மநாபா மக்கள் முன்னணி –தமிழர் சமூக ஜனநாயக கட்சி),தோழர்சிவசக்திஆந்தன் பா.உ(ஈ.பி.ஆர்.எல்.எப்) மற்றும் திராவிடக் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.


ஸ்டாலின் அவர்களின் தந்தை சுந்தரம் தந்தை பெரியார் காலத்தில் அவருடன் திராவிடக் கட்சியில் பணியாற்றியவர் இதனால் ஸ்டாலின் அவர்கள் இறுதிவரை திரவிடக் கொள்கைகளையும் பெரியார் வழியிலும் இருந்து கும்பகொணத்தில் களப்பணியர்றினார்.அவர் ஒரு வக்கீலாக படித்துக்கொண்டிருக்கும் போதே மாணவ பருவத்திலேயே தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட்டார். ஈழ விடுதலைப்போராட்ட இளைஞர்களுக்கு பக்கபலாமாக இருந்து சகலவற்றையும் கும்பகொணத்தில் செய்து கொடுத்தார்.
நான் ஒரு இயக்கத்தை ஆதரித்தேன்.கருணாநிதி ஒரு இயக்கத்தை ஆதரித்தார் ஸ்டாலின் ஒரு இயக்கத்தை ஆதரித்தார் என கி.வீரமணி கூறினார்.

சுரேஸ் பிரேமச்சந்திரன் தனது உரையில் ஸ்டாலின் அவர்கள் ஈழத்து மக்களால் மறக்ககூடியவர் அல்ல அவர் எமக்கெல்லாம் பல வழிகளிலும் உதவிகளைச் செய்துள்ளார் நாங்கள் துன்னப்பபட்ட வேளையில் எமது தோழர்களு;கான அடிப்படைத்தேவைகளை செய்து கொடுத்துள்ளார்.

இலங்கையில் தற்போதுள்ள ஆட்சியும் தமிழர்களுக்கு ஒன்ம் வழங்காதுஅவர்கள் இராணுவ மயப்படுத்தலிலே பிரதான மாக இருக்கிறார்கள்.இராணுகுடிருப்புளை கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.இது டெல்லி அரசாங்கத்துக்கு தெரியாதது அல்ல.நீங்கள் தமிழகத்தில் போராட்டங்களை நடாத்தவேண்டும் டெல்லி அரசாங்கத்துக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நெருக்குதலைக் கொடுக்க வேண்டும என்றார்.

ஸ்டாலின் அண்ணன் எமது தேசிய சமூகமாற்றம் தொடர்பாக ஆழமான தொலைநொக்கு பார்வைகொண்டிருந்தார்.பகுத்தறிவு இயக்கத்தின் வாரிசான அவர் பொது உடமைத்தத்துவத்தில் ஈடுபாடு கொண்ட சர்வதேசியவாதி இந்தக் கும்பகொணத்தில் தான் 1983 ஐத் தொடர்ந்த பாசறைகபள’ பயிற்சிகள் இங்குள்ள தோழர்கள் மக்களின் பேராதரவுடன் நடந்து முடிந்தது.ஈ.பி.அர்.எல் எப் தனது முதலாவது காங்கிரசை கும்பகோணத்தில் நடாத்த ஸ்டாலின் அண்ணன் பெர்ரம் பங்களிப்பை செய்தார் என தோழர்சுகு கூறினார்.