ஆப்கன் எழுப்பும் கேள்விகள்

ஆப்கானிஸ்தானின் நிலவரத்தை உற்றுநோக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு, தாலிபான்களால் கெரில்லா போர் வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, ஒரு அரசாங்கத்தை நிறுவி அதனை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுவது இயல்பே. இதற்கு விடை காண்பதற்குக் குறைந்தபட்சம் 6 மாதங்கள் நாம் காத்திருக்க வேண்டும். அதே வேளையில், பயங்கரவாதத்தால் ஒரு ஜனநாயக அரசு வீழ்த்தப்பட்டு, மாறுபட்ட ஓர் அரசைச் சர்வதேசச் சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழலானது, வருங்காலங்களில் இவ்வகையான அரசியல் முறைகள் அனைவருக்கும் ஏற்புடையதாகிவிடக் கூடும் என்ற அச்சத்தை எழுப்புகிறது.